topbella

Tuesday, March 31, 2026

நடைபாதை நளினங்கள்

நடைபாதை நளினங்கள்
நமை மயக்கும் 
நயங்கள்

வானுயர்ந்த மரங்கள்
இலை உதிர்ந்தும் 
இதங்கள்

சலசலக்கும் நீரோடை
சங்கேதமாய் பேசும்
தருணங்கள்

சரசரவெனச் செல்லும்
சாலை கடக்கும்
மகிழ்வுந்துகள்

சங்கேதமாய் பேசியே
துள்ளி ஓடும்
அணில்கள்

விரைந்த நடைக்குத்
தடை போடும்
விண்மழைத்துளிகள்!

நெல்லை அன்புடன் ஆனந்தி 

Sunday, March 29, 2026

மெட்டுக்குப் பாட்டு - மார்ச் 2026


YouTube link:

இன்று ஒரு நூல் (Talking McCaw-பேசும் பஞ்சவர்ணக்கிளி)

இன்று ஒரு நூல் அறிமுகத்தில்

எழுத்தாளர் கல்லை மலரடியான் அவர்கள் எழுதிய..

Talking McCaw / பேசும் பஞ்சவர்ணக்கிளி நூல் அறிமுகம்

நெல்லை அன்புடன் ஆனந்தி
நூல் அறிமுகம் காண:

படைப்புகள் பார்வைக்கு (Talking McCaw-பேசும் பஞ்சவர்ணக்கிளி)

Saturday, March 28, 2026

மார்ச் 2026 - பாட்டும் கதையும் லாலிபாப் சிறுவர் உலகம் - தமிழ் அமெரிக்கா TV நிகழ்வு

மார்ச் 28 சனிக்கிழமை இந்தியக் காலை 8:00 மணி

தமிழ் அமெரிக்கா TV மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம்

இணைந்து நடத்தும்....
பாட்டும் கதையும்

*பங்கேற்கும் பிள்ளைகள்*

*கதை சொல்லும் குழந்தைகள்*

1.    கவிஸ்ரீ (கனவா நினைவா)
2.  அ.இ. நன்மாறன்
3.  பி.மகிழ் வெண்பா

*பாடல் பாடும் குழந்தைகள்*

1. கவிநயா ஸ்ரீராம்( சின்னஞ்சிறு கிளியே) பாரதியார்.
2. மு.உ. ஸ்ரீ லக்ஷன்யா (கடலின் ஆழம், அழ வள்ளியப்பா)
3. M. வர்ஷினி (விழிப்புணர்வு பாடல், வர்ஷினி)

சிறப்பு விருந்தினர்:
எழுத்தாளர் ஆசிரியர் செங்காந்தள் வீரராகவன்

வாழ்த்துரை/நன்றியுரை:
எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா

நெறியாளர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி

மார்ச் 28 2026 - தமிழால் இணைவோம் நிகழ்வுகள்

தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்க நிகழ்வுகள்

7:00 மணி:
திருவிளையாடற்புராணம்
8:00 மணி:
மெட்டுக்குப் பாட்டு

Wednesday, March 25, 2026

நேசத்தைக் கூட்டுது... நெல்லை அன்புடன் ஆனந்தி

நீங்கா நினைவலை
நெஞ்சத்தை வாட்டுது
நித்தமும் தப்பாமல்
நேசத்தைக் கூட்டுது

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஏக்கத்தின் எதிரொலி..நெல்லை அன்புடன் ஆனந்தி

ஏக்கத்தின் எதிரொலிப்பு
எனக்குள்ளே கேட்கிறது
எண்ணற்ற கனவுகள்
கேள்வியாய்ப் பார்க்கிறது

நெல்லை அன்புடன் ஆனந்தி

மறக்கத்தான் நினைக்கிறேன் - நெல்லை அன்புடன் ஆனந்தி

மறக்கத்தான் நினைக்கிறேன்
மறுபடியும் தொலைகிறேன்
முடியாமல் தவிக்கிறேன்
முயன்றும் தோற்கிறேன்

~நெல்லை அன்புடன் ஆனந்தி

தன்முனைப் பா நூல்கள் போட்டி - தன்முனைத் தமிழி - முதல் பரிசு - நெல்லை அன்புடன் ஆனந்தி

நூலேணி பதிப்பகம் Nooleni publications   மற்றும் 
மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ் நடத்திய 

தன்முனைப் பா (கவிதை) நூல் போட்டியில்.. 

எனது தன்முனைத் தமிழி நூல் முதல் பரிசு 🎁 பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

Tuesday, March 24, 2026

2026 ஹைக்கூ திருவிழாவில்..

சிங்கார சென்னையில்
ஹைக்கூ திருவிழா

உலக ஹைக்கூ நாள் ஏப்ரல் 17
அந்த நாளை முன்னிட்டு நூலேணி பதிப்பகம் சார்பில் ஹைக்கூ திருவிழா மே மாதம் 2026 இறுதியில் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவில் எனது ஹைக்கூ நூல் 

காற்று துரத்திய இலை 

மற்றும்

நான் தொகுத்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் முதல் பெண்கள் சென்ரியு தொகுப்பு நூல் 

வேணாம் சிரிச்சிருவேன் நூலும் வெளியாக உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிகழ்வில் ஹைக்கூ கவியரங்கம், ஹைக்கூ நூல்கள் வெளியீடு நடைபெற உள்ளது.

ஹைக்கூ திருவிழாவில் உங்கள் நூலும் வெளியிட இந்த whatsapp குழுவில் இணையவும்‌

https://chat.whatsapp.com/DYWyvWTeNF24q8W5ycHdyM?mode=gi_t

தொடர்புக்கு:

நூலேணி பதிப்பகம்

9841236965

Monday, March 23, 2026

துளிப்பா போட்டியில் முதல் பரிசு - தும்பியின் தூறல்கள் - நெல்லை அன்புடன் ஆனந்தி

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம்  நடத்திய துளிப்பா நூல் போட்டியில்...

முதல் பரிசு : தும்பியின் தூறல்
நெல்லை அன்புடன் ஆனந்தி 

முதல் பரிசும், படைப்பாற்றல் அரசி விருதும் கிடைக்கப் பெற்ற மகிழ்வான தருணம்.

நூல் போட்டியின் 
நன்கொடையாளர்  கு.அ.தமிழ்மொழி அவர்களுக்கு நன்றி.

இரண்டாம் பரிசு: பருவம் நீண்டதொரு முத்தம்
ஆதிரன்

மூன்றாம் பரிசு : நீர் வண்ண ஓவியம் 
உயிர்வேலி ஆலா

சக வெற்றியாளர்கள் 🏆 அனைவருக்கும் வாழ்த்துகள்.
2025.03.22

சிட்டுக்குருவி எங்கே போறீங்க? - சிறார்களுக்குப் பரிசளிப்பு

வாழ்க வள்ளுவம். 

22.03.26, ஞாயிற்றுக்கிழமை அன்று திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில்..

21வது வாரத்து தமிழக அரசின் வழி திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்ந்த வகுப்பு நடைபெற்றது.

அதில் பங்கேற்ற குழந்தைச் செல்வங்களுக்கு பரிசாக, எனது
சிட்டுக்குருவி எங்கே போறீங்க சிறார் நூல் பரிசாக வழங்கப்பட்டது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

நூல்களைச் சிறார்களிடம் கொண்டு சேர்த்த குறள் மாமணி முனைவர் பா. தாமோதரன் ஐயா அவர்களுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

...நெல்லை அன்புடன் ஆனந்தி

நெல்லை அன்புடன் ஆனந்தியின் சிறார் நூல்கள்

Saturday, March 21, 2026

இமைகள் மூடியும்..

Friday, March 20, 2026

மெல்லினம் மார்ச் 2026 இதழில்... நெல்லை அன்புடன் ஆனந்தி.. படைப்புகளின் அகண்ட பார்வை

மெல்லினம் மார்ச் 2026 இதழ்

Wednesday, March 18, 2026

மாயை இதுவென்று...

வாசித்தல் தவமாகும்...

சிந்தை விரிவானால்...

பெண் அசைக்க முடியாத ஆற்றல் - தன்முனைப் போட்டி நடுவர்


தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை 

தன்முனைக் கவிதை போட்டி - 10 

நாள்: 01.03.2026 - 07.03.2026

பெண் - அசைக்க முடியாத ஆற்றல் 

போட்டியில் நடுவராகச் சிறப்புற செயல்பட்ட எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களைத் தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை உளமார வாழ்த்துகிறது.💐💐💐💐

தலைவர் மற்றும் செயலாளர்

Tuesday, March 17, 2026

சிட்டுக்குருவி எங்கே போறீங்க? சிறார் கதை நூல் | நெல்லை அன்புடன் ஆனந்தி


மகிழ்வுடன் பகிர்கிறேன்...

நூலேணி/லாலிபாப் சிறுவர் உலக பதிப்பக உரிமையாளர் #கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு நன்றி.

*****************************

#மலேசியாவின் 
#ஜோகூர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த 
எழுத்தாளர் #கலைவாணி_மோகன் அவர்களிடம்

அமெரிக்காவில் வசிக்கும் எழுத்தாளர் #நெல்லை_அன்புடன்_ஆனந்தி அவர்கள் எழுதிய 
#சிட்டுக்குருவி_எங்கே_போறீங்க சிறார் கதை நூல் 

மற்றும் 

பாவலர்  புதுவைத் தமிழ்நெஞ்சன் - கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் தொகுத்த 
"கீழடி கொக்கின் சிறகுகள்" தமிழியில் ஹைக்கூத் தொகுப்பு நூலை வழங்குகிறார் நூலேணி பதிப்பக உரிமையாளர் கன்னிக்கோவில் இராஜா.

இடம்: சென்னை திருவல்லிக்கேணி
நாள்: 16.03.2026 திங்கட்கிழமை

Friday, March 13, 2026

கொக்கரக்கோ - மார்ச் 2026 இதழ்

#கொக்கரக்கோ 
மார்ச் 2026 இதழில்..

எனது படைப்பு..

வடிவமைப்பு:
Sanjay Sangaiah 

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

Wednesday, March 11, 2026

கவிச்சிறகுகள் மார்ச் 2026 இதழ்

அனைவருக்கும் இனிய வணக்கம்!

*மார்ச் 2026 கவிச்சிறகுகள் இதழ்*

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 
*கவிச்சிறகுகள்* மார்ச் 2026 இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
கவிஞர் *நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்கா 

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு 
கவிஞர் *கன்னிக்கோவில் இராஜா* சென்னை 

*மார்ச் 2026 இதழ் வாசிக்க...*

Scribd link

https://www.scribd.com/document/1010178348/05-Kavichirakukal-March-2026
(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)

Flip link
https://heyzine.com/flip-book/07d0cbea19.html

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற: 
kavichirakukal@gmail.com

- ஆசிரியர் குழு

காற்றின் கால் தடங்கள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கரங்களில்...


மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் கரங்களில்
'காற்றின் கால் தடங்கள்'

பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைத் தொகுப்பு நூல் (தொகுப்பாசிரியர்கள்: நெல்லை அன்புடன் ஆனந்தி, கன்னிக்கோவில் இராஜா)

கடந்த பிப்ரவரி 28ம் தேதி, திருச்சியில் நடைபெற்ற காவேரி முத்தமிழ்ச் சங்க நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். 

பல தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் இத்தொகுப்பு நூலில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த கவிஞர் குருசங்கர் அவர்கள் கலந்து கொண்டு, பல எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வரும் நூலேணி பதிப்பகத்தின் அண்மை வரவான 'காற்றின் கால் தடங்கள்' பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைக் கவிதை தொகுப்பு நூலை வழங்கினார். 

இந்த நூல் தன்முனைக் கவிதை வரலாற்றில் பல சிறப்புகளைக் கொண்டது. இதில் ஒவ்வொரு கவிஞர்களின் அருகில் கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடில் 2026-ஆம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் வண்ணத்தாளில் கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நூலேணி பதிப்பகம்  தன்முனைக் கவிதை வரலாற்றில் பல புதிய முயற்சிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
இந்நூலில் இடம் பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)