topbella

Sunday, March 8, 2026

பண்புடன் இதழில் - எனது கவிதை - முதிர்ந்த முள்மரம்

பண்புடன் இதழில்...
எனது கவிதை "முதிர்ந்த முள்மரம்"

ஆசிரியர் குழுவிற்கு நன்றி!
Shanthy Mariappan 

வளையும் பருவத்திலே
வாழ்வியல் கற்க வேண்டும்
காலம் கடந்து விட்டால்
கற்பது கடினமாகிப் போகும்

பகைமை உணர்வுகள்
பார்த்திருந்து நமைப் பந்தாடும்
தக்க நேரத்திற்கு
காத்திருந்து நமைச் சூழும்

நன்செய் நிலத்தில்
நடுவிலே பதர் வந்திடும்
நாள் கடத்தாமல்
நீக்குதல் நிலத்திற்கு நல்லது

முதிர்ந்த முள்மரம்
வெட்டுவார்க்கு வேதனை ஆகும்
இளையதாய் இருக்கையில்
வேரோடு களைதல் வேண்டும்

கூடவே இருக்கும்
கொத்தித் தின்னக் காத்திருக்கும்
பார்த்து நீக்கிவிடில்
பாதகம் வாராமல் காக்கும்

உறவில் பகைகள்
உடனடியாய் நீக்கப்பட வேண்டும்
உள்ளச் சிதைவுகள்
உடனடியாய் காக்கப்பட வேண்டும்!

(குறள்: 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.)

நெல்லை அன்புடன் ஆனந்தி

கவிதையை பண்புடன் தளத்தில் வாசிக்க:
https://panbudan.com/mudhirndha-mulmaram/?fbclid=IwdGRzaAQautNjbGNrBBq6umV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHmpJy1qMexuazVNaZHPcDvV1tBVf93cpajJifIjyAizaIpg8YweoCOR0gjpC_aem_syVsyJzsCk58jxbaoUjspQ

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)