ரஜினி நடித்த படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள் வரிசை படுத்த சொல்லி
சௌந்தர் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க... கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..
பொதுவா ரஜினி படம்னாலே ஒரு க்ரேஸ் உண்டு... எனக்கு முக்கியமா ரஜினி கிட்ட பிடிச்சது, அவரு ஸ்டைல்... அப்புறம் டீசென்ட் நடிப்பு.. நம்பி குடும்பத்தோட போயி ரஜினி படம் பாக்கலாம்... தர்மசங்கடங்கள் எதுவும் இருக்காது..! சரி ரொம்ப வளவளக்காம, லிஸ்ட் பார்ப்போமா...? இதுல எது முதல் இடம், எது பத்தாவது இடம்னு எல்லாம் சொல்ல முடியாது.. எல்லாமே.. எனக்கு ரொம்ப பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் தான்..!
தளபதி...!
தளபதி படத்தில் மம்முட்டியுடன் ரஜினி, கலக்கி இருப்பார்.. ரெண்டு பேருமே, ஒருவரை ஒருவர் மிஞ்சிய நடிப்பு.. சூர்யா என்ற கேரக்டர்-ஆகவே மாறியிருப்பார்... அன்னையின் பாசத்தை காட்டும் இடங்களில் நமக்கு கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது.. தேவாவாக வரும் மம்மூட்டி ஒவ்வொரு இடத்திலும் "என் நண்பன்டா... என் தளபதி..டா..." ன்னு சொல்ற இடமெல்லாம் அந்த வார்த்தைக்கு பொருத்தமான..... கம்பீரமான ஒரு கதாபாத்திரம் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும்... இந்த படத்தில் வரும் "சின்னத் தாயவள்........", "யமுனை ஆற்றிலே.........", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி........." சரி விடுங்க.. எல்லா பாட்டுமே ரொம்ப பிடிக்குங்க...
எஜமான்....!
ஆஹா... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. வீட்டில் அதிகம் தியேட்டர் போயி படம் பார்க்கும் வழக்கம் இல்லை.. வெகு அபூர்வமாகத்தான் செல்வதுண்டு... அப்படி நான் பார்த்த படங்களில் எஜமான் மறக்க முடியாத படம்.. நெப்போலியனுடன் மோதும் போதும், மனைவியிடம் காட்டும் அன்பின் போதும்... மக்களிடம் காட்டும் அக்கறையின் போதும், நடந்து வரும் கம்பீரத்திலும்....... ரஜினி ரஜினி தான்... கலக்கி இருப்பார்.. இதில் வரும்.. "ஆலப்போல் வேலப்போல்.....", "ஒரு நாளும் உனை மறவாத....", "நிலவே முகம் காட்டு....." பாடல்கள் சூப்பர்ர்ர்...!!
பாட்ஷா......!
என்னை கவர்ந்த இன்னொரு ரஜினி படம் என்றால், அது பாட்ஷா...தான்... ஸ்டைலுக்கு ரஜினி-ன்னு சொன்னா மிகையாது... அவ்ளோ செமையா இருக்கும் இதுல அவர் நடிப்பு.. தங்கைக்காக மெடிக்கல் காலேஜ் சீட் வாங்க போகும் காட்சி.. இன்னமும் கண்முன் நிற்கிறது... அந்த காட்சியில், ரஜினி.. ரூமை விட்டு வெளியில் வரும் போது.. தங்கை.. என்ன ஆச்சு அண்ணா... னு கேக்கும் போது.. உனக்கு சீட் கண்டிப்பா உண்டும்மான்னு சொல்லும் போது... எப்படி அண்ணா? என்ன சொன்னிங்க.. என்ன சொன்னிங்கன்னு..? கேக்கும் தங்கையிடம்........அசால்ட்டா.... உண்மைய சொன்னேன்....னு சொல்ற இடம்... செம செம.. அச்சோ... எனக்கு இப்போ கூட விசில் அடிக்க தோணுது...
அண்ணாமலை...!
ரஜினி, குஷ்பூ... சூப்பர் நடிப்பு ரெண்டு பேருமே.. லேடீஸ் ஹாஸ்டல் உள்ள ரஜினி வர சீன்ஸ் எல்லாம்... செம காமெடி.. ரஜினி, ஒரு இடத்துல "கண்ணா.... கூட்டி கழிச்சு பாரு.. எல்லாம் கரெக்ட்-ஆ இருக்கும்-னு" சொல்ற இடம்.. ரொம்ப பிடிக்கும்.. இதுலயும் நட்பின் முக்கியத்துவம் இருக்கும்... இதில வர... "கொண்டையில் தாழம்பூ.....", "அண்ணாமலை அண்ணாமல....", "ஒரு பெண் புறா....".. பாட்டெல்லாம் நல்லா இருக்கும்..
சிவாஜி...!
ரொம்ப நாளைக்கு பிறகு.. புது ஸ்டைல்ல வந்த ரஜினி படம்.. "ஒரு கூடை சன்லைட்..." சாங் சூப்பர்....ஹிட்.. அதுல ரஜினி கலர்... ஹ்ம்ம்ம்... சூப்பர்...! வாங்க பழகலாம்..னு படம் முழுக்க சாலமன் பாப்பையா, ராஜா வோட ரஜினி பண்ற கூத்து பாத்து பாத்து ரசிக்கலாம்.. வீட்டில் சென்சஸ் ஆபீசர் மாதிரி வந்து பண்ற கலாட்டா தான் ஹைலைட்... அதிலும், அந்த காமெடி முடிவுல... லிவிங்க்ஸ்டன் என்டர் ஆகி.. "லக லக லக லக..."ன்னு சொல்லறது ஒரே காமெடி தான்.. இதுல வர "சஹானா...." பாட்டு, படமாக்கப்பட்ட விதம் அட்டகாசமா இருக்கும்.. ரொம்ப பிடிச்ச சாங்..
சந்திரமுகி...!
சொல்லவே தேவை இல்ல...இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் பத்தி.. வடிவேலு..ரஜினி காமெடி பெஸ்ட் இந்த படத்துல.. "மாப்பு வசிட்டன்யா ஆப்பு...." ஃபேமஸ் டயலாக்...! அதே மாதிரி.. வேட்டையனா வர ரஜினி.. சொல்ற "லக லக லக லக.............." ல தியேட்டர் அதிரும்.. "ரா ரா.........சரசுக்கு ரா ரா...", "கொஞ்ச நேரம்..கொஞ்ச நேரம்...." இந்த பாட்டெல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல்கள்... ஜோதிகா, சந்திரமுகியா மாறுற இடமெல்லாம் நல்லா இருக்கும்..!
படையப்பா...!
இந்த படத்தில் சிவாஜி, ரஜினி காம்பினேஷன் கலக்கல்.. ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரியா... அட்டகாசமா நடிச்சிருப்பாங்க.. சிங்க நடை போட்டு.. சிகரத்தில் ஏறு.... பாடல்-ல.. சொல்ற மாதிரி.. ரஜினி சிங்கம் மாதிரி தான் நடந்து வருவார்.. இந்த படத்துல வர.. "சுத்தி சுத்தி வந்தீக...", "மின்சார கண்ணா...என் மன்னா", "வெற்றி கொடி கட்டு..." பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்..!
Mr. பாரத்...!
சத்யராஜ், ரஜினி காம்பினேஷன்... ரொம்ப நல்லா இருக்கும்.. இது ஒரு கிளாச்சிக் ஸ்டோரி தான்.. அம்மாவிற்கு துரோகம் பண்ணின அப்பாவை தேடி கண்டுபிடிச்சு, தாயின் சபதம் நிறைவேற்றல்..! இடையில் வர சலசலப்பெல்லாம் ரசிக்கிற மாதிரி இருக்கும்... "பச்ச மிளகா அது காரம் இல்ல....", "எந்தன் உயிரின்..", பாடல்கள் மற்றும், ரொம்ப ரொம்ப... ஹிட் ஆனா.. "என்னம்மா கண்ணு..." சாங்.. டாப்..!
நான் அடிமை இல்லை...!
எப்பவும் போல, நாயகியை ரவுடிகளிடம் இருந்து மீட்கும் ரஜினி, மீது காதல் கொண்டு, தன் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய பிரச்சினைகள். தன்மானம் மிக்க கதாநாயகன், கருத்து வேறுபாட்டில் நாயகியைப் பிரிந்து, பின்னர் இருவரும் சேர்வது தான் படம்.. ஸ்ரீதேவியும், ரஜினியும்... போட்டி போட்டு சூப்பர்-ஆ நடிச்சிருப்பாங்க.. அதில் வரும் "ஒரு ஜீவன் தான்.. உன் பாடல் தான்..." ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்.. அப்போ உள்ள ஸ்டைலில் சோகப் பாட்டும் இதே சாங் வரும்.
எந்திரன்...!
ரொம்ப நாள் கழிச்சு, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வெளி வந்த படம்.. முதல் பாதி, விறு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அட்டகாசமா இருந்தது.. இரண்டாம் பாதியில், முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆக்கிரமிப்பு.. ரஜினியின் நடிப்பை இன்னும் கொஞ்சம் பார்க்க முடியவில்லை என்று சின்ன வருத்தம்.. கிளைமாக்ஸ்-ல் கிராபிக்ஸ்.. உண்மையில் டாப்... வசியாக வரும் ரஜினியோ, அலட்டாமல் நடிப்பு என்றால், சிட்டி-யாக வரும் ரஜினி, ஒரே கலகலப்பில், வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி.. நடிப்பில் கலக்கல்.. சிட்டியாக வரும் ரோபோ... "ஹூ இஸ் தட் செல்லாத்தா? " ன்னு கேக்குற இடம், செம செம...காமெடி.. அதே மாதிரி தான் வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி "சோல்ஜர்ஸ் ரோடேட் யுவர் ஹெட்ஸ்...."ன்னு சொல்ற இடமும்....அதிரடி தான்..! இதில் வரும் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை...." சூப்பர் சாங்..
ஸூஊஊஉ.. எப்பா சாமி ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்.. இந்த தொடர் பதிவுக்கே...இம்புட்டு நாள் எடுத்திருக்கேன்... இந்த அழகுல... தொடர் பதிவு சீக்கிரம் எழுதலன்னா, அடுத்த தொடர் பதிவுக்கு கூப்பிடுவோம்-னு மிரட்டல் வேற.. எவ்ளோ அடியைத் தான் தாங்குறது...!
நா நார்மல் பதிவு எழுதரதுலயே ரொம்ப சுறுசுறுப்பு.. இதுல தொடர் பதிவு... ஹ்ம்ம்.. எப்படியும் சமாளிப்போம்ல...!
ஆத்தா நா பாசாயிட்டேன்னு.........கத்தனும் போல இருக்கு.. (ஹ்ம்ம் கும்ம்....அத நாங்க சொல்லணும்..... அதானே... ஹிஹி.. .. உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குதுங்க..) சரி சரி.. பயப்புடாதீங்க.. அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம செய்ய மாட்டேன்.. ரெம்ப நன்றிங்க.. வந்து, பொறுமையா படிச்சதுக்கு...!!
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை.. உங்களிடம் இருந்து விடை பெறுவது ஆனந்தி....!