நாடகக் கலை நலிந்து போய்விடாமல் இருக்க இன்றும் தங்கள் திறமையால் பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் திரு. கிரேசி மோகன் மற்றும் அவர் குழுவினரின் சிறப்பு நாடகம் "சாக்லேட் கிருஷ்ணா", நமது தமிழ் சங்கத்தினரால் ஈகை விழாவிற்காய் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நாடகம் தானேன்னு அசால்ட்டா விட்டுடாம அத்தனை பேரும் அரங்கம் நிறைய வந்திருந்தது கூடுதல் சிறப்பு. நாடகம் ஆரம்பிக்கும் முன்பே கிரேசி மோகன், தனது வேலையை செவ்வனே ஆரம்பித்து விட்டார்.
அவரது நண்பரின் பையன் ஊருக்கு வந்திருந்த இடத்தில், நண்பர் அவனை கோவிலுக்கு கூட்டிப் போயிருக்கிறார். இவர்கள் சென்ற நேரம் சுவாமிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. பையன் கேட்டிருக்கிறான், என்ன செய்றாங்கன்னு? இவரும் சுவாமி இஸ் டேகிங் பாத்..! ன்னு சொல்லிருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல அபிஷேகம் முடிஞ்சு, திரை சீலையை போட்டிருக்காங்க.. பையன் கேட்டிருக்கான், இப்போ என்ன செய்றாங்கன்னு... நம்ம ஆளும் அசராம "நவ் ஹி இஸ் சேஞ்சிங் டிரஸ்"ன்னு எடுத்து விட்டிருக்கார். அதுக்கு நம்ம பையன் விவரமா கேட்டிருக்கான்.. "ஏன் தாத்தா, குளிக்கும் போதே பார்க்க விட்டாங்க.. துணி மாத்தும் போது ஏன் மறைக்கணும்..ன்னு".. தாத்தா நிலமைய யோசிச்சு பாருங்க..ன்னு சொல்லி அரங்கம் அதிர வைத்தார்.
அது மட்டுமன்றி இந்த நாடகத்திற்கு பெயர் தேர்வு செய்ததும் குழந்தைகள் தானாம். அவரின் வெற்றிக்கு பின்னால் மூல காரணமாய் இருப்பது, தனது கூட்டுக் குடும்பமே என்றும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல மாது அவர்களை குறிப்பிட்டும், மேலும் தன்னுடன் உழைக்கும் அத்தனை குழுமத்தினரையும் மனமார பாராட்டினார். தலைவன் என்ற முறையில்.. எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாய் பணிவோடும், பாசத்தோடும் அவர் உரை இருந்தது மனதிற்கு நெகிழ்வாய் இருந்தது. ஒரு வழியா அவர் பேசி முடிச்சு... டிராமாவும் தொடங்கிருச்சு. ஆரம்பம் முதல் இறுதி வரை.. சிறிது கூட தொய்வு இல்லாமல் நமை எல்லாம் சிரிக்க வைத்த சாக்லேட் கிருஷ்ணா குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மாதுவின் பாட்டியாய் வந்தவர் செய்யும் சிறு சிறு திருட்டுகள், இசை வித்வானாய் ஆக அவர் தந்தை செய்யும் கூத்து, கிருஷ்ணனே நேரில் வந்து மாதுவுக்கு உதவி செய்வதற்கு அவர் வீட்டிலேயே தங்கி விட... கதை சுவாரஸ்யமாய் கலகலப்பாய் சென்றது. பிரமோஷன் கிடைக்க கஷ்டப்படும் மாதுவிற்கு கிருஷ்ணன் உதவுவதும் பயங்கர கலாட்டா. நாடகத்தின் தொடக்கத்தில் கிருஷ்ணன் மாதுவின் வீட்டில் இருக்கும் போது, மீரா, யசோதா, ராதா என்று ஃபோன் செய்து, எங்க ஆத்துக்காரர் இருக்காரா? என் புள்ள இருக்கானான்னு? கேக்குற இடமெல்லாம் சிரிப்பலை தான்.
இப்பொழுதெல்லாம் நாடகம் என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படும் பல இம்சைகளுக்கு மத்தியில் இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் நம்மை அவர்களுடனேயே இணைத்து ரசிக்கச் செய்தனர். இன்னும் சொல்லப் போனால் நாடகம் முடிவில் "என்ன அதற்குள்ளாக முடிந்து விட்டதான்னு" கேட்கத் தோன்றியது. இன்னொரு இடம் என்னை மிகவும் கவர்ந்தது, ஸ்ரீமத் பகவத் கீதையில் ஒருவர் ஃபோன் பண்ணி சந்தேகம் கேட்பார்.. கிருஷ்ணர் அதற்கு, "ஏண்டா நானே எழுதி யுகமாச்சு.. நீ இன்னமும் விளங்காமையே விளக்கம் கேட்டுட்டு இருக்கன்னு" சொல்வார். மாது, கிருஷ்ணரிடம் "எங்கே.. பகவத் கீதைல இருந்து ஒரு ஸ்லோகம் சொல்லுங்க பாப்போம்"ன்னு சொல்ல.. ஸ்ரீ கிருஷ்ணன் எதுவோ ஒன்று சொல்ல, மாதுவும் வெரி குட், வெரி குட் ன்னு சொல்ல, அதற்கு கிருஷ்ணர் "அடப்பாவி, இது பகவத்கீதையே இல்ல.. நா ஏதோ சைனீஸ் பாஷைல சொன்னேன்னு சொல்வார்".
இந்த மாதிரி இன்னதென்று பிரித்தரிய முடியா வண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் சிறிதும் போர் அடிக்காமல் விறுவிறுப்பாய் நடத்திச் சென்ற திரு. கிரேசி மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும். பொதுவாக எதுவும் நிகழ்ச்சி பார்க்கும் பொழுது மக்கள் இங்கும் அங்கும் இடையில் எழுந்து போவதுண்டு.. காரணம் நிகழ்ச்சியின் தொய்வு, ஆனால் இங்கே அரங்கம் முழுமையும் நாடகம் தொடங்கியது முதல், இறுதி வரையில் அனைவரும் அமர்ந்து ரசித்து, ஆரவாரமாய் ஆதரவு கொடுத்து பார்த்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆக மக்கள் மேல பிரச்சினை இல்லை, நடக்குற நிகழ்ச்சியில இருக்கு, ஆடியன்ஸ ஒரு இடத்துல உக்கார வச்சு பார்க்க வைக்கிற திறமை. அது கண்டிப்பா "சாக்லேட் கிருஷ்ணா" குழுவிற்கு இருப்பதில் ஐயமே இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு சொல்லக் கேட்டிருக்கிறோம், நாடகம் முடிந்ததும் அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி, அந்த குழுவிற்கு மரியாதை செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருந்ததோடு மட்டுமன்றி அக்குழுவின் வெற்றியை பறை சாற்றியது.
இந்த ஈகை விழாவில் திரட்டப்பட்ட நிதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோரின் வாழ்வாதாரத்திற்கும், ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கும் பெரும் தொண்டாற்றி வரும் லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் "வாழ்வோம் வாழ வைப்போம்" (ராகவா லாரன்ஸ் அவர்கள் சென்னையில் நடத்தி வரும் அறக்கட்டளை) மற்றும் FOMAPI மிச்சிகனில் வாழும் இந்திய வம்சாவளி வழி வந்த மருத்துவர்கள் நடத்தும் அறக்கட்டளைக்கும் அளிக்கப்பட்டது. சிறு துளி பெருவெள்ளம் என்பது போல நாம் செய்யும் சிறு உதவி கூட ஒருவரின் வாழ்விற்கு ஆதாரமாய் அமைய கூடும். இப்படி ஒரு நல்ல காரணத்திற்காய் நடத்தப் பட்ட நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள முடிந்ததும், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததும் என் பாக்கியம்.