தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 2
மல்லி இலை - சிறிது
மசாலா (அரைக்க):
தேங்காய் - 1 துண்டு
பொட்டு கடலை - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 7 / 8 (காரத்திற்கேற்ப)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பெரிய பெரிய துண்டுகளாய் நறுக்கி, அதை பிரஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். (பாத்திரத்திலும் வேக வைக்கலாம்).
தக்காளி, வெங்காயம் ஆறியதும், அதை நன்கு மசித்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்துக் கொள்ளலாம்), ரொம்பவும் மையாக அரைத்து விட கூடாது.
ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, அதனுடன் மசித்த தக்காளி கலவை, மற்றும், அரைத்த மசாலா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (தண்ணீர் வேண்டுமளவு சேர்த்துக்கொள்ளலாம்).
நன்கு கொதித்ததும், மல்லி இலை போட்டு இறக்கவும்.
இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.