Sunday, September 15, 2024
Saturday, September 14, 2024
Monday, August 12, 2024
Saturday, August 10, 2024
நிலவோடு...
நிலவோடு நீந்திடவா
நில்லாமல் மிதந்திடவா
அவளோடு பேசிடவா
அன்பையும் சொல்லிடவா..
வாசல் வரை வந்தாச்சு
வண்ணத்துடன் நின்னாச்சு
வாசமல்லி பூவாட்டம்
வாசம் வீச வந்தாச்சு...
கருமேகம் நகல் எடுக்க
கலையாம நிப்பவளே
தலையாட்டும் மரங்களுமே
தவம் செய்ய கடப்பவளே...!
நெல்லை அன்புடன் ஆனந்தி
Monday, August 5, 2024
நெல்லையப்பர் வீதி - நினைவுப்பரிசாய்
ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் 38 படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் இருந்து நான் பிறந்த மண்ணான திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நெல்லையப்பர் பெயரைத் தாங்கிய எனது லிமரைக்கூ நூலான..
#நெல்லையப்பர்_வீதி நூலை..
இன்று பிறந்தநாள் கண்ட சிவன் பூங்கா அமைப்பாளர் #கிருபானந்தன் அவர்களுக்கு முதல் அரங்கம் சார்பில் சிறப்பு செய்யப்பட்ட போது