சிந்தையில் நாளும்
சிதறாமல் உலவுகின்றாய்
கண்மூடி தூங்கையிலும்
கைதட்டி எழுப்புகிறாய்...
கரம் பிடித்து விரல் பிரித்து
கதைகள் பல சொல்கிறாய்
உன் சிரம் சாய்த்து
என் நெஞ்சில்
ஸ்வரம் மீட்டி நகர்கிறாய்..
உள்ளங்கையில் தாங்குகிறாய்
உயிருடன் ஊஞ்சலாடுகிறாய்
எண்ணத்தில் கலகம் செய்கிறாய்
உன் நெஞ்சத்தில் சிறை வைக்கிறாய்..!
உனைச் சேரத் துடிக்கும் உயிரை
காணத் தவிக்கும் காதலை
காதல் செய்யும் என்னை
கை பிடிப்பது எப்போது..!
ஏதும் பெரிதில்லை
எதுவும் தேவையில்லை
அன்பன் உன் அன்பு
ஒன்றே அடைக்கலம் எனக்கு
தஞ்சம் புகுந்தேன் உன்னிடம்
தயை செய்வாய் எனக்கு..!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)