topbella

Thursday, January 6, 2011

ஊடல்...!!!


அளவுக்கு அதிகமான உன்
அன்பை இன்று ஆக்ரோஷமாய்
வெளிக்காட்டினாய்...
அதிர்ச்சியில் உறைந்த நான்
அவசியம் நீ பேசச் சொல்லியும்
அவசரமாய் விலகி நின்றேன்...

என் கண்ணில் நீர் வழிந்தால்
உன் நெஞ்சம் ரணமாகும்
உண்மையறிந்தே நான்
எளிதில் வசமிழக்காமல்
எவ்வளவோ முயன்றேனே...

கண்மணியே உடனே வா என்று
கட்டளை பிறப்பித்தாய்.. நானும்
கட்டுப்பட்டே உன் கண்ணெதிரில்
கண்ணீரை மறைக்க இயலாமல்.....

உன் நெஞ்சம் வேதனை கொண்டால்
உயிர் வரை என்னைச் சுடுவதென்ன....
உடனே வந்தோடி எனை நீ
உணரும் வண்ணம் 
நான் அணைப்பதென்ன...

உன்னிடத்தில் எதையும் மறைக்க
எப்போதும் நான் எண்ணியதில்லை...
ஒரு வேளை மறைத்திருந்தால்
மன்னவா இக்காட்சி தான்  
மிஞ்சியிருக்குமோ...

அழுகையின் ஊடேயும் உன்
அன்பினால் எனை ஆண்டு
அக்கறையான வார்த்தையாலே
அங்கேயே சிரிக்கச் செய்தாய்...

இப்படி நான் சிரித்ததால்
இயல்பாய் இருக்கிறேன்
என்றே எண்ணிவிடாதே.....
உன்னை வேதனை படுத்திய
உணர்வு என்னுள் விருட்சமாய்
வீழ்ந்ததடி என்றாய்.....

அத்தனையும் மறந்து விட்டு
நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம்
இக்கணமே இவ்விடமே
ஒன்றாகக் கலந்திருப்போம்...!!

....அன்புடன் ஆனந்தி 

74 comments:

Sanjay said...

அதிர்ச்சியில் உறைந்த நான்
அவசியம் நீ பேசச் சொல்லியும்
அவசரமாய் விலகி நின்றேன்..

ஒஹ் அப்படியே ஷாக் ஆயிட்டீங்களா ??:D :D

அழுகையின் ஊடேயும் உன்
அன்பினால் எனை ஆண்டு
அக்கறையான வார்த்தையாலே
அங்கேயே சிரிக்கச் செய்தாய்...
அழகு...

வேறென்ன சொல்லறது..அருமையா அருமை...!!

Unknown said...

நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம் // கடந்த காலமா அல்லது நிகழ்காலமா !

சௌந்தர் said...

என் கண்ணில் நீர் வழிந்தால்
உன் நெஞ்சம் ரணமாகும்////

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...

இந்த மாதரி இருக்கே...

கண்மணியே உடனே வா என்று
கட்டளை பிறப்பித்தாய்.. நானும்
கட்டுப்பட்டே உன் கண்ணெதிரில்
கண்ணீரை மறைக்க இயலாமல்...////

உண்மையாவா சொல்லுறிங்க...உங்க சுறுசுறுப்பு பற்றி எனக்கு தெரியுமே....அது சரி ஏன் அழுதீங்க....

இப்படி நான் சிரித்ததால்
இயல்பாய் இருக்கிறேன்
என்றே எண்ணிவிடாதே.....////

பெரிய நடிகை தான் நீங்க

டிலீப் said...

//அழுகையின் ஊடேயும் உன்
அன்பினால் எனை ஆண்டு
அக்கறையான வார்த்தையாலே
அங்கேயே சிரிக்கச் செய்தாய்...
//

அருமையான வரிகள்

Unknown said...

ம்ம்ம்.. டச்சிங்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
ஹா ஹா ஹா... எஸ் எஸ்.. நெசமாத்தேன்.. ஷாக் ஆய்ட்டேன் :-)
ஹ்ம்ம்ம்.. தேங்க்ஸ் சஞ்சய் :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@இனியவன்
நிகழ் கால ஊடலை விடுத்து... வரும் காலம் மலர்ந்து நிற்போம்...
அப்படி பொருள் வரும்.. :-)
கருத்திற்கு நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்
ஆமா.. அப்படி தான்... இதுவும்.. :-)
ஹா ஹா ஹா... ஹலோ எல்லா நேரமும் அப்படியேவா இருப்பாங்க..
அதெல்லாம் ரகசியம்... :-)
குசும்பு... இருக்கட்டும்..
கருத்தக்கு நன்றி..சௌந்தர்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@டிலீப்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@பதிவுலகில் பாபு
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

தமிழ் உதயம் said...

அருமையான கவிதை.

Asiya Omar said...

ஊடல் இருந்தால் தாங்க இனிமையான கூடல் இருக்கும்.அருமை ஆனந்தி.

Unknown said...

அருமை! ஆனா ஒண்ணு! புது வருஷத்தில பதிவர் யாரும் அழப்படாது! :-)

ஆர்வா said...

//என் கண்ணில் நீர் வழிந்தால்
உன் நெஞ்சம் ரணமாகும்
உண்மையறிந்தே நான்
எளிதில் வசமிழக்காமல்
எவ்வளவோ முயன்றேனே//

ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க.. அதிர்ச்சியில் உறைந்த அந்த வினாடி ரொம்பவும் வலிக்க வைத்தது..

சாந்தி மாரியப்பன் said...

//இப்படி நான் சிரித்ததால்
இயல்பாய் இருக்கிறேன்
என்றே எண்ணிவிடாதே....//

ஹைய்யோ.. அப்புறமா பழிவாங்கப்போறீங்களா :-))))

கவிதை நல்லாருக்குப்பா..

அருண் பிரசாத் said...

இதை பொசசிவ்நெஸ்னும் சொல்லலாமா? # டவுட்டு

கவிதை உணர்வு பூர்வமா இருக்குங்க

Unknown said...

உன் நெஞ்சம் வேதனை கொண்டால்
உயிர் வரை என்னைச் சுடுவதென்ன....//////

உண்மையான அன்பின் வரிகள்...

கவிதை அருமை ஆனந்தி...

காதல் பணி தொடரட்டும் :)

Prabu M said...

இந்தக் கவிதையை ஒரு பயணம் மாதிரி உணர்ந்தேன்....
நல்லதொரு பயணத்தின் முற்று... இலக்கை அடையும் சந்தோஷம் ஆனாலும் ஒரு குட்டிப் பிரிவும் நெஞ்சைத் தொடும்! அழகான உணர்வு..... நல்ல முடிவும்கூட கவிதைக்கு... அழகு!!

சசிகுமார் said...

அருமையான கவிதை அழகான வரிகள் நல்லா இருக்கு ஆனந்தி.

Anonymous said...

இவ்வளவு காதலாய் சொல்லும் போது நான் சொல்ல என்ன இருக்கு..காதல் காதல் காதல்..

மாணவன் said...

ம்ம்ம் புதுவருசமும் அதுவுமா ஆரம்பிச்சுட்டீங்களா....

ஹிஹிஹி

Anonymous said...

அன்பின் உள்ளங்களை வேதனை தந்து விட்டு வருந்துகிற மனம் சொல்லும் வரிகள் அழகு!
கூடலில் ஊடலும் அழகே!

செந்தில்குமார் said...

ஆனந்தி....
தீ போன்ற எழுத்துக்கள்
அன்பின் ஆழம் அழுத்தமாக வெளிப்பாடு....ம்ம்ம்ம் அருமை

இப்படி நான் சிரித்ததால்இயல்பாய் இருக்கிறேன் என்றே எண்ணிவிடாதே.....உன்னை வேதனை படுத்தியஉணர்வு என்னுள் விருட்சமாய்வீழ்ந்ததடி என்றாய்.....
அத்தனையும் மறந்து விட்டுநம் அன்பில் மட்டும் மலர்ந்து நிற்போம் இக்கணமே இவ்விடமேஒன்றாகக் கலந்திருப்போம்...!!

செந்தில்குமார் said...

ஆனந்தி....
தீ போன்ற எழுத்துக்கள்
அன்பின் ஆழம் அழுத்தமான‌ வெளிப்பாடு....ம்ம்ம்ம் அருமை

இப்படி நான் சிரித்ததால்இயல்பாய் இருக்கிறேன் என்றே எண்ணிவிடாதே.....உன்னை வேதனை படுத்தியஉணர்வு என்னுள் விருட்சமாய்வீழ்ந்ததடி என்றாய்.....
அத்தனையும் மறந்து விட்டுநம் அன்பில் மட்டும் மலர்ந்து நிற்போம் இக்கணமே இவ்விடமேஒன்றாகக் கலந்திருப்போம்...!!

தினேஷ்குமார் said...

உன் நெஞ்சம் வேதனை கொண்டால்உயிர் வரை என்னைச் சுடுவதென்ன....

இதுக்குமேல தங்கள் மன்னவருக்கு என்ன வேண்டும் சகோ இவ்வரிகளே போதுமே தங்கள் அன்பின் அடையாளமாய்

Kurinji said...

Nice...

குறிஞ்சி குடில்

வினோ said...

/ நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம் /

:))

Amudhavan said...

இந்தக் கவிதைப் படித்தேன். உங்களின் எங்கள் வீடு கவிதை மிகவும் மனதைத் தொடுவதாய் இருந்தது.வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

முரட்டுத்தனமான... அன்பால இருக்கு!

மாணவன் said...

//அத்தனையும் மறந்து விட்டு
நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம்
இக்கணமே இவ்விடமே
ஒன்றாகக் கலந்திருப்போம்...!!//

ஓகே ரைட்டு நடக்கட்டும்... நல்லாருக்குங்க... சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

உன்னிடத்தில் எதையும் மறைக்க
எப்போதும் நான் எண்ணியதில்லை...

s the lovers dint hide anything within them

சி.பி.செந்தில்குமார் said...

good rhyme aanandhi

சி.பி.செந்தில்குமார் said...

pls send it to

devi weekly,

727, anna saalai, chennai 6

'பரிவை' சே.குமார் said...

கவிதை வரிகளில் லயித்தேன்...
அருமையா வந்திருக்கு.
ரொம்ப நல்ல கவிதை...

கவி அழகன் said...

ஊடல் குஉடல் காதல்
கலக்கலா இருக்குங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை.

Anonymous said...

உன் நெஞ்சம் வேதனை கொண்டால்
உயிர் வரை என்னைச் சுடுவதென்ன..//

அருமையான வரி ஆனந்தி

Unknown said...

nice kavithai ananthi.

Thanglish Payan said...

அருமையான கவிதை !!!
அழகான வரிகள் !!!

Akila said...

arumaiyana kavithai... ungal kavithaiku nan adimai.....

ரேவா said...

இப்படி நான் சிரித்ததால்
இயல்பாய் இருக்கிறேன்
என்றே எண்ணிவிடாதே.....
உன்னை வேதனை படுத்திய
உணர்வு என்னுள் விருட்சமாய்
வீழ்ந்ததடி என்றாய்.....

அருமையான கவிதை !!!
அழகான வரிகள் !!!

Nandhini said...

////அத்தனையும் மறந்து விட்டு
நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம்
இக்கணமே இவ்விடமே
ஒன்றாகக் கலந்திருப்போம்...!!///

கவிதை வரிகள் அருமை...!!நல்லா இருக்கு ஆனந்தி.

ஆயிஷா said...

கவிதை அருமை ஆனந்தி...

வாழ்த்துக்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழ் உதயம்
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)



@@asiya omar
ஹ்ம்ம்.. சரியாய் சொன்னிங்க.. :-)
கருத்துக்கு நன்றிங்க..



@@ஜீ
ஹா ஹா... சரிங்க அழல..
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@கவிதை காதலன்
ஹ்ம்ம்ம்.... ரசித்து இட்ட கமெண்ட்-க்கு ரொம்ப நன்றிங்க :-)


@@அமைதிச்சாரல்
ஹா ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னுமில்லங்க..
ரொம்ப நன்றிங்க :-)


@@அருண் பிரசாத்
ஹ்ம்ம்... எஸ்.. அதே அதே...
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஜெ. ஜெ.
ஹ்ம்ம்.. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)


@@பிரபு. எம்
வாங்க பிரபு. முழு கவிதையையும் உள் வாங்கி.. ரசித்து சொன்ன கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-))


@@சசிகுமார்
வாங்க சசி.. கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழரசி
ஹா ஹா.. வாங்க தமிழ்.. ரொம்ப நன்றிங்க :-)



@@மாணவன்
ஹா ஹா.. ஒன்னும் ஆரம்பிக்கலை...
சும்மா பீலிங்க்ஸ் அவ்ளோ தான்.. :-)
நன்றிங்க




@@Balaji saravana
வாங்க.. ஆமாங்க.. சரியா சொன்னிங்க..
ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@செந்தில்குமார்
வாங்க செந்தில்.. ஹ்ம்ம்.. ரசித்து சொன்ன கருத்துக்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் :-))
ஆமாங்க... அன்பின் ஆழம் தான்...இது.. :-)




@@dineshkumar
ஹ்ம்ம்ம்.. ஆமாங்க..
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)





@@Kurinji
ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@வினோ
தேங்க்ஸ் வினோ :-)



@@Amudhavan
ரொம்ப சந்தோசம்.. வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றிங்க.. :-)



@@சி. கருணாகரசு
ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. ஆழம் ஜாஸ்தி..
நன்றிங்க :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@மாணவன்
ஹா ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :-)




@@சி.பி.செந்தில்குமார்
Yes. its true.. thanks for your comments..
thanks for the devi weekly..address.. will try to send it.. :-)



@@சே. குமார்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க குமார் :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@யாதவன்
ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றிங்க :-)


@@வெறும்பய
வாங்க.. கருத்துக்கு நன்றிங்க.. :-)



@@கல்பனா
வாங்க.. ரொம்ப நன்றி.. உங்க கருத்துக்கு :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@poorna
தேங்க்ஸ் பூர்ணா ;-)





@@Thanglish Payan
ஹ்ம்ம்.. உங்க கருத்துக்கு நன்றிங்க :-)




@@Akila
ஹ்ம்ம்ம்... வாங்க அகிலா.. என்னங்க நீங்க.. பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு.. எனக்கு ரொம்ப சந்தோசம்.. நீங்க என் ரசிகைன்னு......!!! :-))
தேங்க்ஸ்.. பா.. ;-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ரேவா
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. உங்க கருத்துக்கு :-)

Philosophy Prabhakaran said...

கவிதை உணர்வுப்பூர்வமா இருக்கு மேடம்...

Unknown said...

உணர்வுக்கவிதை

NADESAN said...

அருமை அருமை
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

"உழவன்" "Uzhavan" said...

ஊடலும் கூடலுமே வாழ்க்கை.. கவிதை நல்லாருக்குங்க

logu.. said...

\\அழுகையின் ஊடேயும் உன்
அன்பினால் எனை ஆண்டு
அக்கறையான வார்த்தையாலே
அங்கேயே சிரிக்கச் செய்தாய்...\\


hi.. nallarukkeyyyy

arasan said...

அசத்தலா இருக்குங்க ....

கலக்கி வச்சிருக்கிங்க ...

வாழ்துக்கள்

செல்வா said...

//அதிர்ச்சியில் உறைந்த நான்
அவசியம் நீ பேசச் சொல்லியும்
அவசரமாய் விலகி நின்றேன்..///

ரொம்ப அருமையா இருக்கு அக்கா !

ஸ்ரீராம். said...

அன்பில் மலர்ந்த நல் ரோஜா../நல்கவிதை...

பால்ராஜ் said...

super

பால்ராஜ் said...

good

r.v.saravanan said...

கவிதை அருமை

Prabu Krishna said...

அருமைங்க♥♥♥

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Nandhini
வாங்க நந்தினி.. கருத்துக்கு நன்றி :-)


@@ஆயிஷா
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)



@@Philosophy Prabhakaran
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@@கலாநேசன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@@NADESAN
வாங்க.. ரொம்ப நன்றி :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தோழி பிரஷா
வாங்க பிரஷா... உங்க அன்பான விருதிற்கு மிக்க நன்றிங்க.. :-)



@@"உழவன்" "Uzhavan"
வாங்க.. ஆமாங்க.. கருத்திற்கு நன்றி :-)



@@logu ...
வாங்க.. கருத்துக்கு நன்றிங்க :-)



@@அரசன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)




@@கோமாளி செல்வா
வாங்க செல்வா.. ரொம்ப நன்றி :-)



@@ஸ்ரீராம்
வாங்க.. ஹ்ம்ம்ம்.. எஸ்.. கருத்திற்கு நன்றிங்க.. :-)



@@பால்ராஜ்
வாங்க.. கருத்திற்கு நன்றிங்க.. :-)




@@r.v.saravanan
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)




@@பலே பிரபு
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)

ஹேமா said...

காதல் உணர்வு ஒவ்வொரு சொற்களிலும்.உள்ளத்தை
ஒழிக்காத வரிகள் அத்தனையும் !

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்கு மேடம் (இவங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெலாம் தோணுதோ ?)

ADMIN said...

+++அத்தனையும் மறந்து விட்டு
நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம்
இக்கணமே இவ்விடமே
ஒன்றாகக் கலந்திருப்போம்...!!
+++

ஆஹா..ஆஹா.. ஆகாஹா.. எத்தனையோ கவிதைகளைப் படித்திருக்கிறேன்.. இத்தனை எளிமையாய் வார்த்தைகளை கண்டதில்லை இதுவரைக்கும்.. வணக்கம்.. வாழ்த்துக்கள்..!

GEETHA ACHAL said...

அருமை....

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

Learn said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

www.tamilthottam.in

UyirOli said...

to ms. anandhi

the feel has come out in a great way.. normally when anyone try to make a poem...it wont be good... when you have the real feel and when you try to put it in papers...still there you will struggle ... but this is really superb...the flow is great..this is good ..but still you can enhance this by rewriting..all the best...uyiroli

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)