வாசல் திறந்து நின்றேன்
வானம் சிரிக்க கண்டேன்..
பூக்கள் மலர கண்டேன்
அதன் பூவிதழ் விரிய கண்டேன்..
வண்டு உலவ கண்டேன்
அதன் ரீங்காரம் இசைக்க கண்டேன்..
தேன் உண்டு களிக்க கண்டேன்
உள்ளம் அது கண்டு கிறங்கி நின்றேன்..
பட்டாம் பூச்சியின் சிறகை கண்டேன்
அவை பாடி திரியும் அழகு கண்டேன்..
தேடி நெருங்கையிலே அவை
ஓடி ஒளிய கண்டேன்..
தென்றல் வீச கண்டேன்
தேன் தமிழ் கானம் ஒலிக்க கண்டேன்
துள்ளி விழும் அருவி கண்டேன்
அதை தாங்கி நிற்கும் மலையை கண்டேன்..
அல்லி மலரை கண்டேன்
அதன் அங்கமெல்லாம் ஜொலிக்க கண்டேன்
அருவி விழுகையிலே மான்கள்
அதை அள்ளி பருக கண்டேன்..
புற்களின் பசுமை கண்டேன்
புத்திக்குள் குளுமை கண்டேன்..
எத்தனையோ இன்பம் கண்டேன்
அத்தனைக்கும் ஆசை கொண்டேன்..
எண்ணத்தில் கண்டதெல்லாம்
எதிரிலே நிற்க கண்டேன்...
எள்ளளவும் உறுத்தல் இல்லா..
ஏகாந்தம் இதுவே என்றேன்..!
~அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)