topbella

Saturday, April 28, 2012

நீ நீயாக இரு....!


நீ நீயாக இரு...
நினைவுகளில் கூட
தூய்மையாய் இரு...
நிஜத்தில் இரு....
அன்புடன் இரு...
பணிவுடன் இரு..
பாசத்துடன் இரு...
பண்புடன் இரு..
நேர்மையாய் இரு..
நெகிழ்வாய் இரு..
ஏமாளியாய் இராதே...
ஏய்ப்பவனுடன் இராதே...
கடவுளை மறவாதே...
கண்டதை எல்லாம் நம்பாதே...
உண்மையை மறைக்காதே...
உள்ளதனைத்தும் சொல்லாதே...
உறுதியில் பிறழாதே...
உற்சாகத்தை இழக்காதே...
நேசத்தில் மூழ்காதே..
நேர்ந்ததை எல்லாம் நினையாதே..!
 ~அன்புடன் ஆனந்தி

படம்: கூகிள், நன்றி. 




Thursday, April 12, 2012

நல்வரவு நந்தன ஆண்டே...!


நாளை பிறக்கப் போகும்
நந்தன ஆண்டிலாவது
ஆள்பவர் அமளி துமளி இன்றி
மின் இணைப்பு மிளிரட்டும்...

அன்பின் அணைப்பில்
ஆண்டும் கழியட்டும்...
இன்பமான உறவுகள்
இனிதே மலரட்டும்...

துன்பங்கள் நீக்கியே ஆண்டவன்
துணை இங்கு நிற்கட்டும்..
இல்லை என்ற சொல் இன்றி
எங்கும் ஏகாந்தம் நிலைக்கட்டும்..

நாளுக்கொரு சொல் சொல்வார்
நட்பு விலகி நன்மை விளையட்டும்...
நான் எனதென்ற அகங்காரம் நீங்கி
நாம் நமதென்ற நல்லெண்ணம் ஓங்கட்டும்..

இயற்கையின் சீற்றம்
இல்லாமல் போகட்டும்...
எல்லாம் வல்ல ஏக இறை
எம்முடன் இருந்து ஆளட்டும்...!

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!



~அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)