topbella

Tuesday, September 7, 2010

பள்ளி முதல் நாள்...!!


சின்னக் குயில்கள்
சிங்காரமாய் சிறகடித்து  
பள்ளிக்குச்  செல்ல
பாங்காய் தயாராக....


இதுவரை அடித்த லூட்டியில்
எப்போதடா பள்ளி திறக்கும்
என்றிருந்த எனக்கோ
இப்போது குழந்தை கூட இருக்காதே
என்று மெலிதாய் ஒரு சலனம்..


பள்ளியின் வாசலில் செல்லும் வரை
பத்திரம் கண்ணே என்றவாறே நானும்
போக மாட்டேன் என்று சிணுங்கலில்
என் குழந்தையும்......


உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....


என்னைப் பார்த்து சிரித்தவாறே 
என் கைகளை விட்டு விட்டு
"பை பை அம்மா....." என்று
பள்ளிக்குள் சென்றது என் குழந்தை..!!



இது உண்மையில் நான் கண்டது.. நான் என்னவோ.. ஓவர் பீலிங்க்ஸ்ல உருகி போயி இருந்தா, என் குட்டி.. இப்படி சொல்லிட்டு போயிருச்சு.. வகுப்பு வாசலையே கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு வந்தேன்... :-))) வேற என்ன பண்ண முடியும்?? (வீட்டில இருக்கும் போது, பயபுள்ள குடுத்த பில்ட்-அப் என்ன??? பள்ளி வந்ததும் பை சொல்லி போன அழகு தான் என்ன??  )

""இது தான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லா.....??"" (சரி சரி விடுவோம்.. ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...!! )

பி.கு.: இன்று நான் வசிக்கும் பகுதியில் பள்ளித் துவக்கம்.. :-))


60 comments:

Sanjay said...

//என்னைப் பார்த்து சிரித்தவாறே
என் கைகளை விட்டு விட்டு
"பை பை அம்மா....." என்று
பள்ளிக்குள் சென்றது என் குழந்தை..!!//

உனக்கும் பை பை உங்கப்பனுக்கும் பை பை என்கிறது இது தானா?? :D :D

அருமையான அழகான அனுபவம்......

இந்த பாடலை ஞாபகபடுத்தியது உங்கள் பதிவு......Slipping Through my Fingers - ABBA
http://www.youtube.com/watch?v=dsk5Qz5oEWo

Starjan (ஸ்டார்ஜன்) said...

பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும்போது போமாட்டேன்னு அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அவர்களை செல்லமாக கொஞ்சி ஸ்கூலுக்கு அனுப்பும் அம்மாக்களையும் பார்க்கும்போது அந்தகாட்சி ரசிக்கும்படியா இருக்கும்..

இதுதானோ பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள பாசப்பிணைப்பு...

அழகான படைப்பு.. ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி..

Ramesh said...

Unmaidhanga indhakalathula kulandhaingallam over maturitiyadhan irukkanga. Pavam periyavanga nilamadhan paridhabam. Nalla velipaduthiyirukkinga. Ana onnu kavanichingala.. Idhuvum unga favourite tharkaliga pirivu thuyar kavidhaidhan. Yenna... Aludhan vera.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எங்கம்மா சின்ன வயசுல என்னை ஸ்கூலுக்கு அனுப்பிய நாட்கள் ஞாபகம் வந்தது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எப்பாடி ஒருவழியா தமிழ்மணத்துல இணைச்சிட்டீங்க போல.. :))

Gayathri said...

ஹாஹா அருமை...குழந்தைகள் அப்படித்தான்..முதலில் அழவே மாட்டாங்க...ஒரு வாரம் கழிச்சுத்தான் எல்லாம் ஆரம்பிக்கும்

vanathy said...

சூப்பர். இங்கு போன வாரம் ஸ்கூல் தொடங்கியாச்சு. எனக்கும் முதல் நாள் ஒரே கஷ்டமா இருந்திச்சு. ஆனால், பிள்ளைகள் விரைவில் பழகிவிடுவார்கள்.

என்னது நானு யாரா? said...

பிள்ளைகளை புது சூழலுக்கு நாம் தாயாராக்கினால் இந்த பிரச்சனை இல்லை இல்லையா ஆனந்தி!

அதற்காக தானே இப்போது Pre-KG எல்லாம் வந்திருக்கின்றன

அம்மாக்கள் ஏன் அழ வேண்டும்? பெத்த மனம் பித்து என்று டயலாக் வேறு!

சிறுகடித்து பறக்கும் பறவை தன் குஞ்சுகளை சில காலம் வரை மட்டுமே தங்களின் அரவணைப்பில் வைத்து கொள்கின்றன. பிறகு சுந்திரமாக செல்ல அனுமதிக்கின்றன.

நாமும் நம் குழந்தைகளை அவ்வாறு சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க செய்ய வேண்டும்.

அதற்கு முன் பல விஷயங்களை அவர்கள் கற்க நாம் உதவி செய்வோம். என்ன சொல்கிறீர்கள் ஆனந்தி?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
//உனக்கும் பை பை உங்கப்பனுக்கும் பை பை என்கிறது இது தானா?? :D :D ////

ஹா ஹா ஹா.. அதே அதே.. :D :D

/// அருமையான அழகான அனுபவம்......///

யா யா.. பீலிங்க்ஸ் பீலிங்க்ஸ் :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஸ்டார்ஜன்

//பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும்போது போமாட்டேன்னு அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அவர்களை செல்லமாக கொஞ்சி ஸ்கூலுக்கு அனுப்பும் அம்மாக்களையும் பார்க்கும்போது அந்தகாட்சி ரசிக்கும்படியா இருக்கும்..

இதுதானோ பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள பாசப்பிணைப்பு...

அழகான படைப்பு.. ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி..///

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க. ஒரு சின்ன அனுபவம்.. பகிர்ந்து கொண்டேன்.. :-)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@பிரியமுடன் ரமேஷ்
///Unmaidhanga indhakalathula kulandhaingallam over maturitiyadhan irukkanga. Pavam periyavanga nilamadhan paridhabam. Nalla velipaduthiyirukkinga. ///

ஆமாங்க.. நீங்க சொல்றது சரி தான்.. :-)

///Ana onnu kavanichingala.. Idhuvum unga favourite tharkaliga pirivu thuyar kavidhaidhan. Yenna... Aludhan vera.///

ஹா ஹா.. நானும் அதை இப்போ நீங்க சொன்ன பிறகு உணர்கிறேன்.. :-)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ ஸ்டார்ஜன்
//எங்கம்மா சின்ன வயசுல என்னை ஸ்கூலுக்கு அனுப்பிய நாட்கள் ஞாபகம் வந்தது.///

ஹ்ம்ம்.. இப்போ எவ்ளோ மாற்றங்கள்.. இல்லையா??


//எப்பாடி ஒருவழியா தமிழ்மணத்துல இணைச்சிட்டீங்க போல.. :))//

ஹா ஹா.. இல்லையே இல்லையே...
அது எப்பவோ இணைச்சது.. லேட்டா வொர்க் ஆகுது போலிருக்கு.. :-)
வருகைக்கு நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Gayathri
/// ஹாஹா அருமை...குழந்தைகள் அப்படித்தான்..முதலில் அழவே மாட்டாங்க...ஒரு வாரம் கழிச்சுத்தான் எல்லாம் ஆரம்பிக்கும்////

அதுவும் சரி தான்.. காயத்ரி.. ஒரு வாரம் போன பிறகு, ஸ்டார்ட் ம்யுஸிக்.. தான்.. :-))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@vanathy
/// சூப்பர். இங்கு போன வாரம் ஸ்கூல் தொடங்கியாச்சு. எனக்கும் முதல் நாள் ஒரே கஷ்டமா இருந்திச்சு. ஆனால், பிள்ளைகள் விரைவில் பழகிவிடுவார்கள்.///

ஹ்ம்ம் சூப்பர்.. புரியுதுங்க.. ஆமாமா அதான் சொன்னனே.. டாடா சொல்லிட்டு ஓடிட்டாங்க.. :-))
வருகைக்கு நன்றி..

சௌந்தர் said...

பள்ளிக்கு செல்லும் வரை ரெண்டு மனமா இருக்கும் அங்கு போய் நண்பர்களை சந்தித்தால் எல்லாம் மறந்து விடும்

உங்களை பார்த்து நானும் ஒரு கவிதை எழுதி இருக்கேன்


அறியா வயதில்

அம்மாவின் விரல்

பிடித்து நடந்து கொண்டு

இருந்த என்னை

அறிவு சிறையில்

அடைத்தார்கள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@என்னது நானு யாரா?


///பிள்ளைகளை புது சூழலுக்கு நாம் தாயாராக்கினால் இந்த பிரச்சனை இல்லை இல்லையா ஆனந்தி!///

......சரி தான்.. :-)

///அதற்காக தானே இப்போது Pre-KG எல்லாம் வந்திருக்கின்றன///

....என் குட்டீஸ்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருக்கு.. இருந்தாலும் அந்த முதல் நாள் பீலிங்க்ஸ் இருக்கவே செய்கிரதுங்க..

////அம்மாக்கள் ஏன் அழ வேண்டும்? பெத்த மனம் பித்து என்று டயலாக் வேறு!///

....ஹா ஹா.. அது தான் அடைப்புக் குறியில் சொல்லியிருக்கிறேன்.. இந்த டயலாக் கொஞ்சம் ஓவரு தான்னு.. :D


///சிறுகடித்து பறக்கும் பறவை தன் குஞ்சுகளை சில காலம் வரை மட்டுமே தங்களின் அரவணைப்பில் வைத்து கொள்கின்றன. பிறகு சுந்திரமாக செல்ல அனுமதிக்கின்றன.

நாமும் நம் குழந்தைகளை அவ்வாறு சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க செய்ய வேண்டும்.

அதற்கு முன் பல விஷயங்களை அவர்கள் கற்க நாம் உதவி செய்வோம். என்ன சொல்கிறீர்கள் ஆனந்தி?///

....இப்போ யாருங்க.. அதெல்லாம் வேண்டாமென்று சொன்னது.. ஜஸ்ட், முதல் நாள் பள்ளிக்கு செல்லும் பொது, என்ன தான் இருந்தாலும்... ஒரு சிறு சலனம் வர தான் செய்கிறது.. அதுவே அவர்கள் சிறிது வளர்ந்து விட்டால் சரியாகி விடும்... ஒன்றாம் வகுப்பு தானே... அதான் கொஞ்சம் சலனம்.. :-))

உங்க கருத்துக்கும், வருகைக்கும் ரொம்ப நன்றி.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்
///பள்ளிக்கு செல்லும் வரை ரெண்டு மனமா இருக்கும் அங்கு போய் நண்பர்களை சந்தித்தால் எல்லாம் மறந்து விடும்
உங்களை பார்த்து நானும் ஒரு கவிதை எழுதி இருக்கேன்

அறியா வயதில்
அம்மாவின் விரல்
பிடித்து நடந்து கொண்டு
இருந்த என்னை
அறிவு சிறையில்
அடைத்தார்கள் /////

ஆமா சௌந்தர்.. சரியா சொன்னிங்க.. :-)
அடடா... அறிவுச் சிறையில்... பிரமாதம் போங்க.. :-))
இது போல் நிறைய நீங்க எழுதணும்.. வாழ்த்துக்கள்..

நாடோடி said...

என்ன‌ங்க‌ இது ஸ்கூல் போற‌துக்கு அட‌ம்பிடிக்க‌லையா?... அப்ப‌ பைய‌ன் ரெம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்னு சொல்லுங்க‌... :)

Anonymous said...

உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....


arumai..arumai...yekko kalakureenga...

Menaga Sathia said...

very nice ananthi....

தமிழ் உதயம் said...

நான் பார்த்து இருக்கிறேன். முதல் நாள் குழந்தை பள்ளிக்கு சிரித்து கொண்டே செல்லும். தாய் அழுது கொண்டே போவார். மிக மெல்லிதான அந்த உணர்வை கவிதையாக்கி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

Anonymous said...

""இது தான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லா.....??"" (சரி சரி விடுவோம்.. ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...!! )

அப்போ உங்க கண்ணன் ஒன்னாம் கிளாஸ் ஹீரோ வா ..

லீவ் நாளில் பய்யன் அடிக்கற லூட்டியில் லீவ் ஏன் டா விடறோம் ன்னு இருக்கும் ..ஆனா அதுவே ஸ்கூல் தொறந்து போகச்சே மனதுக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கும் என்ன செய்ய படிப்பும் தேவையாச்சே ..இல்லையா

அருமையான பதிவு ஆனந்தி .பகிர்வுக்கு நன்றி

அருண் பிரசாத் said...

அய்யயோ1 நானும் என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பனும். பாவம், நாந்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சைவகொத்துப்பரோட்டா said...

பீலிங் :))
நல்லா இருக்கு.

kavisiva said...

ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க. அப்பாடா அம்மா டார்ச்சர்ல இருந்து விடுதலைன்னு நினைச்சிருப்பாங்களோ :).

மேலே சொன்னாது சும்மா :)

உங்கள் அனுபவத்தை அந்த தாய்மை உணர்வை, குழந்தைகள் மனப்பாங்கை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ஆனந்தி

Jaleela Kamal said...

பள்ளி முதல் கவிதையாவே வடித்து விட்ட்டீர்கள்.
பள்ளி முதல் நாள் என்றதும், என் பையன்களை பற்றிய பழைய நினைவுகள் அசை போடுகிறது.

Anonymous said...

அழகாக இருந்தது பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது...
தலைப்புக்கு ஏற்ற படங்கள் நன்றாக இருந்தது...

பின் குறிப்பு சூப்பர்....

dheva said...

பள்ளி திறப்பது...ஒரு 8வது வரைக்கும் போர்...அப்புறம் ஜாலிதானே....


புள்ளைங்கள விட.. நீங்க பண்ற....ஃபீல் ரொம்ம நல்லாதான் இருக்கு...! நாங்க எல்லாம் சின்ன வயசுல எப்போ ஸ்கூல் திறக்கும்னு காத்துகிட்டு இருப்போம்.....ஹா...ஹா..ஹா....!

r.v.saravanan said...

நான் என்னவோ.. ஓவர் பீலிங்க்ஸ்ல உருகி போயி இருந்தா, என் குட்டி.. இப்படி சொல்லிட்டு போயிருச்சு.. வகுப்பு வாசலையே கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு வந்தேன்... :-))) வேற என்ன பண்ண முடியும்??

அதானே நீங்களும் ஒன்னாம் கிளாஸ் போக முடியுமா என்ன

கவிதை அருமை ஆனந்தி

Nandhini said...

எனக்கும் நேற்று ஏற்பட்ட அருமையான அனுபவம்....[ என்னத்த சொல்ல போங்க ஆனந்தி....புள்ளங்க படிக்க போனாலும் கூட நமக்கு பீலிங்க்ஸ் தான்] அருமையான பகிர்வு பேஷ் பேஷ்...பகிர்விற்கு நன்றி.

prince said...

ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...///


ஆமா கொஞ்சம் ஓவர் தான் ...கி ஹீ கீ

சீமான்கனி said...

//உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....//

டச்சிங்...என் அம்மாலாம் ரெண்டு அடியா போட்டு தான் அனுப்புனாக...ம்ம்ம்ம்...குட்டிக்கு வாழ்த்துகள்...

எம் அப்துல் காதர் said...

இன்னைக்கி என்ன அன்புடன் ஆனந்தி ஸ்கூல் போகும் குழந்தைக்கி தாய் பாசம், சித்ரா மேடம் தாயம்மா, வாணி தாய் ரெஸ்டாரண்ட், எல்லா தோழிகளிடமும் ஒரு நேர்த்தியான தாய்ப் பாசம் பொங்கி பிராவகமாய் வாழ்க! வளர்க!! தோழிகள் என்றால் எப்படி ஒரு ஒற்றுமை அடடா இப்படித்தானிருக்கணும் வெல்டன்!! ஹா.. ஹா..

எம் அப்துல் காதர் said...

// (வீட்டில இருக்கும் போது, பயபுள்ள குடுத்த பில்ட்-அப் என்ன??? பள்ளி வந்ததும் பை சொல்லி போன அழகு தான் என்ன?? ) //

அடடா மன நெகிழ்ச்சியை எப்படியெல்லாம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அதென்ன பயபுள்ள?? உங்க புள்ள தானே ஆனந்தி, அதை அழகாக எம் புள்ள என்று சொன்னா எம்புட்டு டச்சிங்கா இருக்கும். இருந்தாலும் தாய்மை பீலிங்க்ஸ எழுத்தில் வடிக்க சில பேருக்கு தான் வரும். அது உங்களுக்கு..!!

எல் கே said...

@ananthi
abhiyum nanum maathiri aagi pocchaa ? ippadithan nadakkum ellar veetlaium

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///நாடோடி said...

என்ன‌ங்க‌ இது ஸ்கூல் போற‌துக்கு அட‌ம்பிடிக்க‌லையா?... அப்ப‌ பைய‌ன் ரெம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்னு சொல்லுங்க‌... :)///

ஹா ஹா... அடம் பிடிக்கலங்க.. அப்புறம் என் குழந்தை பையன் இல்லை பொண்ணு... :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///surya said...
உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....

arumai..arumai...yekko kalakureenga...///

வாங்க சின்ன தம்பி..... ரெம்ப நன்றிங்கோ :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///Mrs.Menagasathia said...
very nice ananthi..../////

தேங்க்ஸ் மேனகா... :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///தமிழ் உதயம் said...

நான் பார்த்து இருக்கிறேன். முதல் நாள் குழந்தை பள்ளிக்கு சிரித்து கொண்டே செல்லும். தாய் அழுது கொண்டே போவார். மிக மெல்லிதான அந்த உணர்வை கவிதையாக்கி உள்ளீர்கள். வாழ்த்துகள்.///

ஹ்ம்ம்.. சரியா சொன்னிங்க.. ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///sandhya said...

""இது தான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லா.....??"" (சரி சரி விடுவோம்.. ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...!! )

அப்போ உங்க கண்ணன் ஒன்னாம் கிளாஸ் ஹீரோ வா ..////


என் இளவரசி... ஒன்னாம் கிளாஸ் போறாங்க.. இந்த வருஷம்.. :-)))

////லீவ் நாளில் பய்யன் அடிக்கற லூட்டியில் லீவ் ஏன் டா விடறோம் ன்னு இருக்கும் ..ஆனா அதுவே ஸ்கூல் தொறந்து போகச்சே மனதுக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கும் என்ன செய்ய படிப்பும் தேவையாச்சே ..இல்லையா///


எஸ், ரொம்ப சரியா சொன்னிங்கப்பா... அதிலும் சில நேரம் நம்மை மண்டை காய வச்சிருவாங்க.. ஸ்கூல்-கு போனாங்கன்ன...பீலிங்க்ஸ்-ஆ இருக்கும்... கூழுக்கும், ஆசை, மீசைக்கும் ஆசை.. நம்ம கதை.. சந்த்யா.. :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Sandhya

///அருமையான பதிவு ஆனந்தி .பகிர்வுக்கு நன்றி////

...உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///அருண் பிரசாத் said...

அய்யயோ1 நானும் என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பனும். பாவம், நாந்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

சரி சரி... இட்ஸ் ஒகே.. இட்ஸ் ஒகே.. கூல் டவுன்.. அருண்...எல்லாம் சரி ஆகி போகும்.. :-))
கருத்துக்கு ரொம்ப நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///சைவகொத்துப்பரோட்டா said...

பீலிங் :))
நல்லா இருக்கு.///

ரொம்ப நன்றிங்க... :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///kavisiva said...

ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க. அப்பாடா அம்மா டார்ச்சர்ல இருந்து விடுதலைன்னு நினைச்சிருப்பாங்களோ :).

மேலே சொன்னாது சும்மா :)

உங்கள் அனுபவத்தை அந்த தாய்மை உணர்வை, குழந்தைகள் மனப்பாங்கை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ஆனந்தி///

ஹா ஹா ஹா.. இருக்கலாம்.. யாருக்கு தெரியும், குட்டீஸ் மனசுல என்ன இருக்குன்னு.... :-)))
ரொம்ப நன்றிங்க... உங்க கருத்துக்கு :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

////Jaleela Kamal said...

பள்ளி முதல் கவிதையாவே வடித்து விட்ட்டீர்கள்.
பள்ளி முதல் நாள் என்றதும், என் பையன்களை பற்றிய பழைய நினைவுகள் அசை போடுகிறது.////

ஹ்ம்ம்ம்.. ஆமாங்க..
அடடா.. ரொம்ப சந்தோசம்.. என்றுமே.. அவை மனம் வீசும் பசுமையான நினைவுகள் தான்.. இல்லியா??
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///FIRE FLY said...

அழகாக இருந்தது பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது...
தலைப்புக்கு ஏற்ற படங்கள் நன்றாக இருந்தது...

பின் குறிப்பு சூப்பர்....////

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///dheva said...

பள்ளி திறப்பது...ஒரு 8வது வரைக்கும் போர்...அப்புறம் ஜாலிதானே....///


அதென்னங்க கணக்கு.. ??? 8 வரைக்கும் போர்.. அப்புறம் ஜாலி....! விளக்கம் ப்ளீஸ்...

////புள்ளைங்கள விட.. நீங்க பண்ற....ஃபீல் ரொம்ம நல்லாதான் இருக்கு...! நாங்க எல்லாம் சின்ன வயசுல எப்போ ஸ்கூல் திறக்கும்னு காத்துகிட்டு இருப்போம்.....ஹா...ஹா..ஹா....!///

ஹா ஹா.. நீங்கல்லாம் நல்ல படிக்குற புள்ளைங்க....அப்படி தான் இருப்பீங்க..
தேங்க்ஸ் தேவா... :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

////r.v.saravanan said...

நான் என்னவோ.. ஓவர் பீலிங்க்ஸ்ல உருகி போயி இருந்தா, என் குட்டி.. இப்படி சொல்லிட்டு போயிருச்சு.. வகுப்பு வாசலையே கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு வந்தேன்... :-))) வேற என்ன பண்ண முடியும்??

அதானே நீங்களும் ஒன்னாம் கிளாஸ் போக முடியுமா என்ன

கவிதை அருமை ஆனந்தி///

ஹா ஹா.. அதானே.. போகலாம்னு தான் நினச்சேன்.. விட மாட்டாங்களே.. அதான் வந்துட்டேன்.. :-))))
ரொம்ப நன்றிங்க..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///Nandhini said...

எனக்கும் நேற்று ஏற்பட்ட அருமையான அனுபவம்....[ என்னத்த சொல்ல போங்க ஆனந்தி....புள்ளங்க படிக்க போனாலும் கூட நமக்கு பீலிங்க்ஸ் தான்] அருமையான பகிர்வு பேஷ் பேஷ்...பகிர்விற்கு நன்றி.////

எஸ் எஸ்.. ரொம்ப சரியா சொன்னிங்க...
தேங்க்ஸ் நந்தினி... :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

////ப்ரின்ஸ் said...

ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...///

ஆமா கொஞ்சம் ஓவர் தான் ...கி ஹீ கீ////

என்ன சிரிப்பு.. அதான் நாங்களே சொல்லிட்டோம்ல....:-)))
தேங்க்ஸ் பிரின்ஸ்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///சீமான்கனி said...

//உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....//

டச்சிங்...என் அம்மாலாம் ரெண்டு அடியா போட்டு தான் அனுப்புனாக...ம்ம்ம்ம்...குட்டிக்கு வாழ்த்துகள்....////

ஹா ஹா ஹா... அமெரிக்க-ல அது முடியாதே... என்ன பண்றது...??
ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///எம் அப்துல் காதர் said...

இன்னைக்கி என்ன அன்புடன் ஆனந்தி ஸ்கூல் போகும் குழந்தைக்கி தாய் பாசம், சித்ரா மேடம் தாயம்மா, வாணி தாய் ரெஸ்டாரண்ட், எல்லா தோழிகளிடமும் ஒரு நேர்த்தியான தாய்ப் பாசம் பொங்கி பிராவகமாய் வாழ்க! வளர்க!! தோழிகள் என்றால் எப்படி ஒரு ஒற்றுமை அடடா இப்படித்தானிருக்கணும் வெல்டன்!! ஹா.. ஹா..///

ரொம்ப நன்றிங்க... :-))

///எம் அப்துல் காதர் said...

// (வீட்டில இருக்கும் போது, பயபுள்ள குடுத்த பில்ட்-அப் என்ன??? பள்ளி வந்ததும் பை சொல்லி போன அழகு தான் என்ன?? ) //

அடடா மன நெகிழ்ச்சியை எப்படியெல்லாம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அதென்ன பயபுள்ள?? உங்க புள்ள தானே ஆனந்தி, அதை அழகாக எம் புள்ள என்று சொன்னா எம்புட்டு டச்சிங்கா இருக்கும். இருந்தாலும் தாய்மை பீலிங்க்ஸ எழுத்தில் வடிக்க சில பேருக்கு தான் வரும். அது உங்களுக்கு..!!///

ஹா ஹா ஹா.. சரி சரி விடுங்க.. பப்ளிக்-ல இதை எல்லாமா விளக்கம் கேட்டுகிட்டு.... :-))
ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

////LK said...

@ananthi
abhiyum nanum maathiri aagi pocchaa ? ippadithan nadakkum ellar veetlaium /////


ஹ்ம்ம்.. ஆமாங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. :)

pinkyrose said...

ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க. அப்பாடா அம்மா டார்ச்சர்ல இருந்து விடுதலைன்னு நினைச்சிருப்பாங்களோ :).

repeatuuuuu

ok ok ok
அழாதிங்க மசாலா பால் கொண்டு வரச் சொல்ரேன்

சௌந்தர் said...

///அதென்னங்க கணக்கு.. ??? 8 வரைக்கும் போர்.. அப்புறம் ஜாலி....! விளக்கம் ப்ளீஸ்...////

@@@தேவா ஹா ஹா ஹா கமெண்ட் போட்ட விளக்கம் எல்லாம் கேக்குறாங்க

@@@ஆனந்தி இதோட விட்டு விடுங்கள் விளக்கம் சொன்ன இன்னும் குழப்பமா இருக்கும்....

Akila said...

simply superb...


http://akilaskitchen.blogspot.com

Unknown said...

Hi Anandhi,

My first time here...

arumaiyaana karuthugal...

Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com

அன்புடன் பிரசன்னா said...

ஆஹா நல்ல ஒரு தலைப்பிலே கவிதையும் விளக்கமும்... பழைய நினைவெல்லாம் மீட்க வச்சிட்டீங்க.

செந்தில்குமார் said...

ம்ம்ம்ம்... ஆனந்தி....

பாசம்னா இதுதான்....

பள்ளிதிறக்கும் வரை அம்மாக்களின் பாடு ம்ம்ம்ம்....
பள்ளிதிறந்தபின் மகனின் பாடு...

அதென்ன 8 வது வரைதான் எல்லாம்..ம்ம்ம் நண்பர்களே ?

நசரேயன் said...

// இன்று நான் வசிக்கும் பகுதியில்
பள்ளித் துவக்கம்//

எல்லோர் வசிக்கும் இட பள்ளியும் தான்,பள்ளி திறந்தாலே உங்களுக்கு கவுஜை கிடைச்சி இருக்கு

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)