கூடி இருக்கும் சனங்களுக்கு
சேதி ஒன்னு சொல்லுறேன்..
கூலிக்கு வேலைக்குப் போயி
கொஞ்ச நஞ்ச காச மிச்சம் பண்ணி
குடிசை வீட்டில கஞ்சித் தண்ணி
குடிக்கிற நமக்கு
குடும்பம்தேன் எல்லாம்
குடிச்சிட்டு வர புருசங்கள
கூராப் பேசி நேராக்கப் பாருங்க
சரிப்பட்டு வரலேன்னா
சாதி சனத்துக்கு காத்துக் கிடக்காம
சாப்பாடு போடாம வெளிய தள்ளி
கதவ சாத்துங்க
வீதில கெடக்கட்டும் விட்ருங்க...
படிச்ச புள்ளைகளும் இங்க
பயந்துகிட்டு இல்லாம
பாரதியார் சொன்ன
புதுமைப் பொண்ணா
பத்திரமா உங்கள பாத்துக்கங்க..
உயிர்க்கொல்லி நோயி
ஊரவிட்டு இன்னும் போல தாயி
ஊட்டுக்குள்ள கிடந்தா
உன் கவுரவம் ஒன்னும் ஆயிடாது..
உதவிக்கு கூட ஆளு வர முடியாது
உசுரு முக்கியம் சொல்லிப்புட்டேன்
உசாரா இருந்துக்கங்க கண்ணுகளா
சூதானமா இருந்துக்கங்க
சுருக்கமா சொல்லிப்புட்டேன்..!!