
Saturday, May 16, 2020
வெறும் வார்த்தையில்..!
வெறும் வார்த்தையால் உணர்வதும்
சற்றே மௌனத்தால் மலர்வதும் பேரமைதியில் ஆனந்தம் கொள்வதும்
சொல்லாத மொழியில் நெகிழ்வதும்
வெல்லாத யுத்தத்தில் மகிழ்வதும்..
அருகாமை தந்த அணைப்பில்
பெருகி வரும் பரிதவிப்பில்
உருகிடும் மனத்திளைப்பில்
பருகிடும் உள்ளக் களிப்பில்
மருகிடும் விழிக் கோர்ப்பில்
கடக்கும் நீயில்லா வெறுமையை..!
~அன்புடன் ஆனந்தி🌻
Subscribe to:
Posts (Atom)