படிக்கும் காலங்களில் நடந்த நிகழ்வுகளை நிறைய பேர், எழுதி இருக்கீங்க... அதை எல்லாம் படிக்கும் போது, எனக்கு இந்த விஷயம் ஞாபகம் வந்தது..! படிக்கும் போது, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கிளாஸ்-ல எதாச்சும் வம்பு பண்ணி மாட்டுறது உண்டு....! கிளாஸ்-கு வெளில போய் நிக்க விட்டாங்கன்னா.. குஜாலா வெளில வந்து... காற்றோட்டமா நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க வேண்டியது... தெரிந்த மேடம் யாராச்சும் வந்தா மட்டும்... ரொம்ப அவசரமா.. மறைந்து நிக்க வேண்டியது... ஒரு ஸ்டுடென்ட்-க்கு இதெல்லாம் லட்சணம் இல்லியா? அதெல்லாம் ஒழுங்கா கடைபிடிப்போம்.... நாங்க ரொம்ப சின்சியர் ஸ்டூடண்ட்ஸ்..!
(நம்பணும்....போ போ.. உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா-ன்னு திட்ட கூடாது)
சரி ஓகே.. மேட்டர்-க்கு வாங்க.. மாப்பிள்ளை படம் ரிலீஸ் ஆகி இருந்தது... என்னோட பிரண்ட்ஸ் ஒரு ஆறு பேர் சேர்ந்து கிளாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போலாம்னு கூப்டாங்க... அது வரைக்கும், அப்படி கட் அடித்தது இல்லை.. அதனால கொஞ்சம் பயமா இருந்துச்சு... நா வரல... நீங்க போங்கன்னு சொல்லிட்டேன்... தலைவர் படம்.. செமையா இருக்கும்... முக்கியமான கிளாஸ் ஏதும் இல்ல சும்மா வான்னு ரொம்ப டெம்ப்ட் பண்ணாங்க.. எங்க கெமிஸ்ட்ரி மேடம், வேற லீவ் அன்னிக்கு.. அவங்க எங்க வீட்டு பக்கம், சரி அவங்களும் வரலன்னு... இன்னும் தைரியமா.... ஒரு வழியா கிளம்பிட்டோம்.
தியேட்டர்ல போயி... நல்ல இடமா பார்த்து.. செட்டப்பா.. உக்கார்ந்தாச்சு... படம் ஆரம்பம் முதல் இறுதி வரை... ரஜினி வரும் இடங்கள் எல்லாம் விசில் அடிச்சு... இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணியாச்சு.. அப்புறம், அவங்கவங்க வீட்டுக்கும் வந்து சேர்ந்தாச்சு...
விதி வலியதுன்னு சொல்வாகளே... அது எனக்கு அடுத்த நாளே ரொம்ப நல்ல்ல்ல்லா புரிஞ்சது...!
மறுநாள், ஒண்ணுமே நடக்காதமாதிரி கிளாஸ்-ல போயி உக்கார்ந்தோம்.. ஹ்ம்ம் எல்லாம் நல்லாத் தான் போச்சு... கெமிஸ்ட்ரி கிளாஸ், வர வரைக்கும்...! மேடம் வந்ததும், ஏதோ, கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க.... திடீர்னு.... எங்களை கை காமிச்சு....மாப்பிள்ளை பெஞ்ச் எந்திருங்கன்னு சொல்லி... எங்கள எழுப்பி விட்டு.. "என்ன..?? படம் எல்லாம் பிடிச்சதா?? பாட்டெல்லாம் ஓகே தானான்னு கேட்டாங்க...!" அவ்ளோ தான்.. நாங்க எல்லாம், பேயறஞ்ச மாதிரி.... திரு திருன்னு ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம்... இவங்களுக்கு எப்படி தெரியும்ன்னு ஒரே டென்ஷன்.... அப்புறம் தான் மேட்டர் வெளில வந்தது... மேடம் லீவ் போட்டது, அவங்க கல்யாண நாளைக்காம்... அதனால அவங்களும், சார்-ம் மாப்பிள்ளை படம் பார்க்க வந்திருக்காங்க...
(அவ்வ்வ்வவ்வ்வ்வ்... லீவ் போட்டா எதுக்கு போடுறீங்க... எங்க போறீங்கன்னு விவரமா சொல்லப்பிடாதா??? ) அதுவும், எங்களுக்கு பின்னாடியே வேற, உக்கார்ந்து இருந்திருக்காங்க, நாங்க பண்ற கூத்தெல்லாம் பாத்துக்கிட்டு...!
அப்புறம் என்ன.........? ஸ்டார்ட் மூஜிக்க்க்க்க்... தான்.. நல்ல வாங்கி கட்டினோம்... கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?? னு கேட்டாங்க..
(அது இருந்தா... நாங்க ஏன் நீங்க வந்த தியேட்டர்-க்கு வரோம்.. அவ்வ்வ்வ்). நல்லா கேக்குறாங்க டீடைல்ஸ்ஸு...!). அப்புறம் மேடம் ஏதோ, பெரிய மனசு பண்ணி வெறுமனே.. திட்டிட்டு விட்டுட்டாங்க.. அதுல இருந்து, மாப்பிள்ளை பெஞ்ச் ஆகி போச்சு.... எங்க ஏரியா...!
பின்குறிப்பு: கிளாஸ் கட் அடிக்கிறது பெரிசு இல்ல, செட்டப்பா உக்காரும் முன்னாடி... முன்ன பின்ன, யாரு இருக்காங்கன்னு பார்த்து உக்காரணும்..!!
சரி ஓகே.. நேரம் ஆச்சு.. போயி சமையல் பண்ற வேலைய பாக்குறேன்..
அப்போ நா வரட்டுங்களா...!
நீங்களும் சட்டு புட்டுன்னு கிளம்பி சாப்பிட வாங்க..!!