topbella

Friday, April 12, 2024

நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்

#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்

பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளும் செய்து அசத்திய நூலேணி பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் #கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறோம்.

இந்த நூலில் எழுதிய அத்துனை கவிகளின் கவிதைகளையும் தனது வேலைப்பளுவிற்கு மத்தியிலும் #எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ என்று தினமும் வடிவமைப்பு செய்து கவிதைகளைப் பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

படைப்பாளர்களின் படைப்புகளை எப்போதும் மேடையேற்றி அழகு பார்க்கும் சிறுவர் இலக்கியச்செம்மல் திரு #கன்னிகோவில்_இராஜா அவர்களுக்கு அனைவர் சார்பிலும் வாழ்த்துகளும்  பாராட்டுகளும்.

உடன் இந்த நூலை சீரிய முறையில் தொகுத்து, கவிகளின் ஐயப்பாடுகளை அவ்வப்போது பதில் அளித்து வழி நடத்திய தொகுப்பாசிரியர் பாவலர் #புதுவைத்_தமிழ்நெஞ்சன் ஐயா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி 
நூலேணி - புத்தக வீதி Book Street 
நூலேணி பதிப்பகம்