இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழி
கௌசல்யா-விற்கு, நன்றி..! 2010 -ல் நான் செய்த பெரிய சாதனை
(ஹி ஹி.. உங்களுக்கெல்லாம் சோதனைன்னு சொல்லலாம்) இந்த பதிவுலகிற்கு வந்தது தாங்க...! அதில் உண்மையான உறவாகவும், நட்பாகவும்...நிறைய பேர் கிடைச்சிருக்கீங்க... ரொம்ப நன்றி..!
அப்புறம் சென்ற வருடம் நடந்த சில, பல விசயங்களை சொல்றேன்..!
லக்ஷ்மன் ஸ்ருதி கான்செர்ட்
இங்க உள்ள தமிழ் சங்கத்தில் நடந்த கான்செர்ட்-டிற்கு பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போனோம்.. அங்கே கிருஷ், மகதி, மாலதி லக்ஷ்மன் இவங்களை எல்லாம் சந்தித்தது.....அப்புறம் முதல் தடவையா டான்ஸ் எல்லாம் வேற ஆடினோம்..
(ஹி ஹி.. அதப் பாத்து எத்தனை ஜீவன் பாதிக்கப் பட்டாங்களோ.. தெரியல.. இன்னும் புள்ளி விவரம் கைக்கு வரலை.. சரி அதை விடுங்க.. அது நடந்து முடிந்த கதை.. இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வாரும்.. அச்சச்சோ.... ஒன்னுமில்லைங்க.. நேத்து திருவிளையாடல் படம் பார்த்தேன்.. அந்த பாதிப்பு தான்... நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.. )
சின்னக் குயில் சித்ரா கான்செர்ட்
இது நடந்தது ஒரு மலையாள சங்கத்தில்...
(அதெல்லாம் இருக்கட்டும்மா.. நீ அங்க போயி என்ன பண்ணினன்னு தானே கேக்க நினச்சீங்க...) எல்லாம் ஒரு இசை ஆர்வம் தான்.. சித்ராவின் இனிமையான குரலில்.. நிறைய மலையாள பாட்டு பாடினாங்க.. இசைக்கு ஏது மொழி? நாங்களும் ரசித்தோம்.. அப்புறம் சித்ரா, அவங்க.. இங்க யாராச்சும் தமிழ் ரசிகர்கள் இருக்கிங்களான்னு கேட்டாங்க.. உடனே... எச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ் ன்னு.... விசில் அடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணியாச்சு. அதுக்கு பின்னாடி நிறைய தமிழ் பாட்டு பாடினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது..!
தமிழ் சங்கம்.. கதம்பம் பத்திரிக்கை
நான் எழுதிய கவிதைகள்... "என்னுயிர் நீயன்றோ....", "எனக்காய்ப் பிறந்தவனே.." மற்றும் "பாடுவோர் பாடினால்..." லக்ஷ்மன் ஸ்ருதி கான்செர்ட் குறித்த எனது ஆர்டிகிள் இவை எல்லாம், கதம்பம் இதழில் வெளியானது.. இப்படி அங்கீகாரம் கிடைத்தது, இதுவே முதல் முறை..! மனதிற்கு சந்தோசமா இருந்தது..!
எந்திரன் படம்
பொதுவா இங்கே வெளியாகிற எல்லா படங்களும் பார்ப்பதில்லை.. ஒரு சில படங்களுக்கு தான் போறதே.. எந்திரன்... ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் தியேட்டர் போனோம்.. முதல் பாதி படம் முழுக்க.. சீட் ஓரத்துல உக்காந்து பாக்குற மாதிரி விறு விறுன்னு தான் இருந்தது.. அப்புறம் இரண்டாம் பாதி..தான் கொஞ்சம் படம் எப்போ முடியும்னு நினைக்க வச்சிருச்சு.. ரஜினி எப்பவும் போல்.. சூப்பர் ஸ்டார் தான்.. இப்படத்திலும்..! ஆனாலும் எனக்கென்னவோ ரஜினியை படத்தில் இங்கும் அங்கும் சொருகியது போல இருந்தது.. ஏன்னா ரஜினி வருவதை விட.. படத்தில் ரோபோட், கிராபிக்ஸ்.. தான் ஜாஸ்தி ஆக்கிரமிப்பு.
தெலுங்கு அசோசியேஷன் தீபாவளி ப்ரோக்ராம்
(சரி சரி.. உங்க பீலிங்க்ஸ் புரிது... இங்க என்ன பண்ணேன்னு தானே யோசிக்கிறீங்க..) மீண்டும் அதே..
இசை, கலை ஆர்வம் தாங்க.. கலைக்கு மொழி ஒரு தடையா இருக்கலாமா? இங்கே என் பொண்ணு, மற்றும் அவள் கூட உள்ள குட்டீஸ்...சேர்ந்து MSS அவர்களின், "கீதகுனிக்குதக்க...." பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினாங்க.. அதில் கிருஷ்ண லீலைகள் குறித்த காட்சிகள் எல்லாம் வரும், குழந்தைகளின் முகபாவம் எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோசமா இருந்தது..
(இன்னும் திருத்தமா வரலை.. ஆனா..விடா முயற்சியா நானும், என் பொண்ணும் அடி பிடி சண்டை போட்டு கத்துக்கறோம்.. சாரி.. கத்துக்க வைக்கிறேன்.....)
பால ராமாயணம்.. டிராமா
இங்கே என் குழந்தைகள் செல்லும் ஸ்லோகம் வகுப்பில், பால ராமாயணம் டிராமா போட்டோம்.. அதில் எல்லா பசங்களும்.. ரொம்ப அழகா.. வசனம் எல்லாம் மறக்காம பேசி, நடிச்சாங்க.. ரொம்ப பெருமையா இருந்தது.. நினைத்ததை விடவும், குழந்தைகளின் பங்களிப்பு.. அபாரமா இருந்துச்சு.. சந்தோசமா இருந்தது.. :-) அது எனக்கு மிகவும் மறக்க முடியாத நிகழ்வு...!
மன்மதன் அம்பு
அவ்வ்வ்வவ்.. இது ஒரு பெரிய சோக கதை.. ஒரு பிரண்ட் தீவிர கமல் ஃபேன்... அவங்க என்னை படத்துக்கு கூப்டாங்க.. நா என்ன பண்ணி இருக்கணும், சிவனேன்னு அவங்களோட போயிருக்கனும்.. அத விட்டு போட்டு... என்னோட மத்த பிரண்ட்சையும் வாங்க...போலாம்னு கிளப்பிட்டு போனேன்.... என்னை ஒரு கொடுமை.. நொந்து போய்ட்டேன்... முதல் பாதியாவது ஏதோ, பார்க்கிற மாதிரி இருந்துச்சு..... ரெண்டாம் பாதி.... ஹ்ம்ம் ஹும்ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்லங்க..
ஏதோ, கூட்டிட்டு போனதுக்கு.. கொல பண்ணாம விட்டாகளே.. அது வரையில் ஓகே... :D
கரோகியில் பாடியது
பிரண்ட் ஒருத்தங்க.. ரொம்ப அழகா பாடுவாங்க... அவர், கரோகி மெஷின், வச்சிருக்கார்.. ஒரு கெட் டுகதர் பார்ட்டி-க்கு.. அவருடன் சில பாடல்கள் பாடுவதாய் ஏற்பாடு..
(இது நாள் வரை வீட்டில் சும்மா பாடுறது, அப்புறம் ஐயப்பன் பூஜையில் பாடுறது.. அவ்ளோ தான்...இப்போ மட்டும் என்ன? சூப்பர் சிங்கர்-லயா பாடிட்டேன்னு கேக்கத் தோணுமே...) அப்புறம்.. பாட ஆரம்பிக்கும் போதே.. மைக் கைல வந்ததும்...உதறல் தான்.. முதல்.. பாட்டு சகிக்கல... ஏதோ, பாத்து வாசிச்ச மாதிரி இருந்தது... அப்புறம் போக போக.. ஏதோ சுமாரா வந்தது...
(ஹலோ பாட்டைத் தான் சொல்றேன்.... ஏடாகூடமா தின்க் பண்ணப் பிடாது... என்ன கொடும சரவணா? ன்னு தானே.. சொல்ல நினச்சீங்க.. ஹிஹி.. தெரியுமே.. தெரியுமே..!) கரோகி-யில் பாடியது இது தான் முதல் முறை..!!
சரி சரி பேச்சு பேச்சா இருக்கட்டும்... நோ வயலன்ஸ்... நினைவலை கொஞ்சம் ஓவரா தான் அடிச்சிருச்சு.. இத்தோட நிறுத்திக்கிறேன்...! பொறுமையாய் படித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...நன்றிகள் பல..!
உங்க எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!
முத்தான தை திரு நாளில்
நம் சொத்தான சூரியனை
வணங்கி தத்தம் வித்தான
குடும்பத்தாருடன் எல்லா
வளமும் பெற்று வாழ்வாங்கு
வாழ வாழ்த்துக்கள்...!!
....அன்புடன் ஆனந்தி