topbella

Wednesday, March 11, 2026

காற்றின் கால் தடங்கள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கரங்களில்...


மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் கரங்களில்
'காற்றின் கால் தடங்கள்'

பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைத் தொகுப்பு நூல் (தொகுப்பாசிரியர்கள்: நெல்லை அன்புடன் ஆனந்தி, கன்னிக்கோவில் இராஜா)

கடந்த பிப்ரவரி 28ம் தேதி, திருச்சியில் நடைபெற்ற காவேரி முத்தமிழ்ச் சங்க நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். 

பல தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் இத்தொகுப்பு நூலில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த கவிஞர் குருசங்கர் அவர்கள் கலந்து கொண்டு, பல எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வரும் நூலேணி பதிப்பகத்தின் அண்மை வரவான 'காற்றின் கால் தடங்கள்' பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைக் கவிதை தொகுப்பு நூலை வழங்கினார். 

இந்த நூல் தன்முனைக் கவிதை வரலாற்றில் பல சிறப்புகளைக் கொண்டது. இதில் ஒவ்வொரு கவிஞர்களின் அருகில் கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடில் 2026-ஆம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் வண்ணத்தாளில் கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நூலேணி பதிப்பகம்  தன்முனைக் கவிதை வரலாற்றில் பல புதிய முயற்சிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
இந்நூலில் இடம் பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)