நம்பிக்கைக்கு உரியவர்கள்:
"அரிது அரிது.. இது போல் அமைதல் அரிது.......
அப்படியே அமைந்தாலும் அடுத்தவர் பிரித்து விடாமல் இருத்தல் அரிது..."
இவர்களிடம் நீங்கள் எதையும்.. அதாவது எதையும் பகிர்ந்து கொள்ளலாம்.. எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு எதிராக அதை உபயோகிக்க மாட்டார்கள்.. எந்த ஒரு மன கஷ்டம் என்றாலும் இவர்களிடம் சொல்லும் போது அறிவுரையும், ஆறுதலும் கண்டிப்பாக கிடைக்கும்... அக்மார்க் கேரண்டி..!!
சுயநலமற்றவர்கள்:
"பாசக்கார பயபுள்ளைங்க....."
சில பேர் உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அவர்கள் மட்டும் நம்மிடம் அளவுக்கு அதிகமான பாசத்துடன் இருப்பார்கள்.. இப்படி நண்பர்கள் அமைவதும் அபூர்வமே.. அப்படி ஏற்கனவே அமைந்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலி..!!
தன்னலமிக்கவர்கள்:
"ஏண்டா.. எனக்கு முடியுமா? முடியாதான்னாவது கேட்டியாடா??....அவ்வ்வ்வ்வ்"
தனது சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள். பிறரிடம் எதையும் கேட்கும் போது இது அவர்களால் முடியுமா? அவர்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்குமா? என்றல்லாம் எண்ணமே இல்லாதிருப்பார்கள்... அவங்க வேலை நடந்தால் சரி.... இப்படி உங்களுக்கு அமைந்தால் அயம் வெரி சாரி.. ஒன்னும் பண்ண முடியாது...!!
ரெண்டுங் கெட்டான்ஸ்:
"ஆத்துல ஒரு காலு... சேத்துல ஒரு காலு கேஸ்..."
இதையெல்லாம் லிஸ்டிலயே வைக்க முடியாது.. இவங்க எப்போ, எப்படி, எந்த மாதிரி பல்டி அடிப்பாங்கன்னே சொல்ல முடியாது.. அதையும் மீறி, ரிஸ்க் எடுத்து பழகும் போது... அவங்க ரியாக்ஷன் வேலை எல்லாம் பார்த்து.... "நல்லாத்தான போயிட்டு இருந்தது... ஏன்.. ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன்டா இப்படின்னு கேட்டுட்டு இருக்க வேண்டியது தான்.."
பச்சோந்திகள்:
"அவ்வ்வ்வ்வ்வ்வ..... அவனா நீயியியியியி.."
உங்களுடன் இருக்கும் போது, அடுத்தவரை பற்றி குறை கூறுவது, இங்கு தான் மிகுந்த கவனம் தேவை.. அவர்கள் சொல்வதை சும்மா கேட்டு கொண்டிருக்காமல் "உம்" என்றோ "ஆம்" என்றோ, சொல்லி விட்டீர்கள் என்றால்.. ரொம்ப சாரி.. இட்ஸ் டூ லேட்.... எங்க நியூஸ் போடணுமோ அங்க வாசிச்சிருவாங்க... எதையாவது சொல்லி உங்க கிட்ட கருத்து கேட்டார்கள் என்றால், " ஹி ஹி ஹி....." என்று மட்டும் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவது உங்க உடம்புக்கும் நல்லது, மனசுக்கும் நல்லதுங்கோ..!!
இம்சை மன்னர்கள் (பொறுமையை சோதிப்போர்):
"என்ன கொடும சரவணா...??"
இவங்க ஒரு தினுசான வகை.. ஒரு வகையில சொல்லனும்னா "ரொம்ப நல்லவங்கப்பா" னு தான் சொல்லணும்.. நம்ம பொறுமையா இழுத்து பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்கோம்னே தெரியாமலயே, அதுங்க பாட்டுக்கு வறுத்துட்டு இருக்கும்.. கடைசியிலே "ஒய் ப்ளட்.... சேம் ப்ளட்......"னு சொல்லற மாதிரி ஆயிரும்..!!
நலமா.. நலம் இங்கே:
"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."
நீங்க நல்லா இருக்கிங்களா? நா நல்லா இருக்கேன்.. எங்கேயாவது வெளில பார்த்தால், ஹலோ....... எப்படி இருக்கீங்க?? என்ன பாக்கவே முடியறதில்ல.... கண்டிப்பா நம்ம மீட் பண்ணனும்பா.... (இப்படி பல வருடமாக சொல்லிக் கொள்வதுண்டு....) சரிங்க.. அப்ப பாக்கலாங்க.... வெரி நைஸ் மீட்டிங் யூ.....!! ஒரு வகையில பார்த்தால் இதுவே பெட்டெர்... எந்த பிரச்னையும் இல்லாத பிரெண்ட்ஷிப்....!!
**********************************
"இத்துடன் எனது பதிவை முடித்து கொள்கிறேன்... இதுக்கு மேல அறுத்தா அப்புறம் படிக்கிற உங்க காதுல ரத்தம் வந்திர போகுது.... பொறுமையாக படித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..."