தேவையான பொருட்கள்:
அரைக்க:
சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)
மல்லி விதை - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
வதக்க:
சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
கத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)
புளி கரைசல் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
- பின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
- வெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.
...அன்புடன் ஆனந்தி