topbella

Thursday, April 2, 2026

வான் மழையே வா - நூல் விமர்சனம் - R. சேகர் - திரு.வி.க. பேச்சுப் பயலரங்கம்

திரு.வி. க. அமைப்பைச் சார்ந்த அன்பிற்கினிய ஆளுமை R_சேகர் ஐயா அவர்கள் எனது 6-ஆம் நூலான #வான்_மழையே_வா நூலினை வாங்கிப் படித்து தனது அன்பான கருத்தினைப் பதிவிட்டு இருக்கிறார்கள். 

இது போன்ற அன்பான கருத்துகள் பின்னூட்டங்கள் ஒரு எழுத்தாளரை மென்மேலும் செதுக்கக்கூடிய ஊக்கம் தரக்கூடிய வித்துகள். அத்தகைய வித்தினை அன்போடு விதைக்கும் ஆளுமைகளுக்கும் தோழமைகளுக்கும் என் அன்பும் நன்றியும்.

மனமார்ந்த நன்றி #R_சேகர் ஐயா..
*****

#R_சேகர் ஐயா அவர்களின் பின்னூட்டம்:

🍋🍎🍌📜📜🍌🍎🍋

     *வான் மழையே வா !* 
    *குறள்* *அமுதைத் தா !* 

             உலக உயிர்களின் ஜீவிதத்தில்,மனித உயிர் மட்டுமே உண்ணும் கனி குறள்கனி. 

           ஆனாலும்,அக்குறள் கனிகளை உண்ணும் கோடானு கோடி மனிதர்களுள் ஒரு சிலர் மட்டுமே அதன் கருத்து விதைகளை மனித மனங்களில் விதைக்கும் பேறு பெறுகிறார்கள் . 

    அத்தகைய பாவலர்களுள் ஒருவராக,  அற்புதக்குறள்கள் 200ன் ஆழ்ந்த நுட்பங்களை, சிறுச்சிறு கவிதை விதைகளாய் சுருக்கி விதை
த்திருக்கும் தங்களின், அணுவைத் துளைத்து சிறுகத் தரித்த நல்லுரை

        வானுயர் வள்ளுவரின் குமரிச் சிலை நாற்பதோடும் ஜமாலின் குறள்சிந்தும் ஓவியங்களோடும், ராஜனின் மழைக்குடை சிறுமியின் துள்ளல் போன்றும்,மணிவா
சகத்தால் மிளிரும் தங்கள் குறள் எண்ணங்கள் அத்தனையும்,

சின்னக் குழந்தைகளின் எண்ண வானில் சிந்தும் தேன் மழை போன்றது. அதில் நனைந்து மகிழ்ந்த போது ….. நானும் ஓர் சிறு குழந்தையானேன் .

பரிமேலழகர்,ஜி.யு. போப், W.H.ட்ரூ, வ.வே.சு, மு.வ, கலைஞர் எனும் உலகத் திருக்குறள் உரை நாயகர்களின் வரலாற்று வரிசையில் இனி தங்களது பெயரும் 

    *நெல்லை அன்புடன்* 
            *ஆனந்தி *

என்று , *தங்கமென* *மின்னும்* *மேடம்* .

🌏🌏  🌟🌟🌟 🌏🌏

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)