topbella

Thursday, April 2, 2026

என்னுயிர் நீயன்றோ - நூல் விமர்சனம்

நூல்:
என்னுயிர் நீயன்றோ

நூல் விமர்சனம்:
வாழும் வரலாறு அ. சுப்ரமணியன்

வெளியீடு:
மணிவாசகர் பதிப்பகம்

கவிதை நூல்கள் என் கைகளில்.
நன்றி மட்டும் சொல்வது நயமல்ல.
நானறிந்த நல்லவற்றை
நவில்கின்றேன் கருத்தாக.
அன்றலர்ந்த பூப்போல
நன்று மலர்ந்த நல் கவிதை.
அது அந்தக்காலம்
தைமகளின் தளிர்க்கரத்தில்
தாய் தந்த மலர்கரம்.

ஏகாந்தம் இதுவே
இளமையின் இன்பமெல்லாம்
இப்போதும் நினைவில்.

என் இறுதியென்றால்
வாழ்வின் வசந்தம்

உள்ளமேகோயிலாய்
வாழ்கையின் வழிகாட்டி

மனிதர்கள் பலவிதம்
மனம் போல் வாழ்வு

மேகமே
நீல வானம் நிகழ்த்தும்
நித்த நித்த அதிசயங்கள்.

நிதர்சனம் நீ
காதலுக்கு விமர்சனம்

எதுவென்றேன்
காதலும்‌‌ காமமும் கலந்துதான் வாழ்வு

சூழ்கொண்ட மங்கை
வானம் சூழ் கொள்ள
வையம் நலம் கொள்ளும்.

விடியல்
கதிரவனின் ஆட்சியில்
கண்ட காட்சி.

என்னுயிரில். சித்திரமாய்
காதலின் தவிப்பு

யாருமில்லா வானத்தில்
அகநானூற்றின் அடையாளம்

அன்னைக்காக
பெண்ணே அன்பின் பெருவடிவம்.
மண்ணே விதைக்கு உயிர் வடிவம்.

நீங்காத அழகு
நிலவின் ஒளியழகு
நீங்காத தனியழகு.

புதுக்கவிதை
இலக்கணம் தாண்டிக்கிடைக்கும்
இன்பப்புதையல்.

தயைசெய்
விடியாத இரவே
முடியாத இன்பம்

முழுதாய் என்னை
கோயிலிலே வரும் காதல்.
கூடுமென நினைத்தாலும்
இடையில் வந்தகாதல்
இடம் மாறிப்போய்விடும்.

இத்தனையும் மொத்தமாய் என்னுயிர் நீயன்றோ எடுத்தியம்பும்
நித்தில வார்த்தை யன்றோ.

எனக்காய் பிறந்தவளே.
வண்டாடும் சோலையிலே
மலர்ச்சென்டாக நானிருந்தேன்
கொண்டாட வந்தவளே எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்.
என்னுயிர் நீயன்றோ
மனதை வருடும் வரிகள்
மனதை நிறைத்த கவிதை.
வாழ்த்துக்கள்

மதிப்புறு முனைவர் அ. சுப்ரமணியன்
தலைமைச் செயலர், தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கம்

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)