topbella

Sunday, October 4, 2026

சர்ப்ரைஸ் பார்ட்டி...!!


        
          எல்லாரும் அவங்கவங்க  பிறந்த நாளை குடும்பம் அல்லது நண்பர்களுடன் கொண்டாடுறது வழக்கம்..  கொண்டாடியும் இருக்கோம்.. (பின்ன நாங்க மட்டும் என்னவாம்னு எதிர் கேள்வி எல்லாம் கேக்கப் பிடாது) அதுவே ஒரு சந்தோசம்னா... சில நேரம் நமக்கு தெரியாம அவங்களே பிளான் பண்ணி, சர்ப்ரைஸ் பார்ட்டி-களும் வைப்பதுண்டு. (ஹ்ம்மம்ம்ம்ம்... அப்படி என் பிறந்த நாளைக்கு எனக்கு எந்த பயபுள்ளையும் வைக்கலங்க... )
       
          இப்படி தான் என் கணவரோட பிறந்த நாளுக்கு, சரி எல்லாரும் தான் சர்ப்ரைஸ் பண்றாங்க... நம்மளும் பண்ணலாம்னு.. ஒரு நல்ல எண்ணத்துல... நெருங்கிய சில நண்பர்கள் கிட்ட.. பேசி... ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சேன்.. முதல் முயற்சியா.. (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தேன் இருந்துச்சு......) வீட்டில் நான் விருந்து சமையல் மாதிரி பண்ணினா சந்தேகம் வந்திரும்னு சொல்லி... ஒரு பிரண்ட் கிட்ட... இவருக்கு போன் பண்ணி... அவங்க வீட்டுக்கு கூப்பிடச் சொல்லி (சந்தேகம் வராத படிக்கு தான்...) பேசிட்டு இருக்குறதா பிளான் பண்ணேன்.

          சரின்னு இவரும் கிளம்பி போய்ட்டார்.. அவசரம் அவசரமா சமையல் பண்ணி முடிச்சு, மத்த பிரண்ட்ஸ் எல்லாம் வர வச்சு... (என் பிரண்ட்ஸ் வேற.. பாவம்.. வீட்டு முன்னாடி கார் பார்க் பண்ணினா.. இவுக கண்டு பிடிச்சிரப் போறாகன்னு... கார்-ஐ தள்ளி பார்க் பண்ணிட்டு... நடந்து வந்தாங்க...) அந்த அவசரத்துலயும் பலூன் எல்லாம் ஊதி... எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு... இவர் வீட்டுக்கு வர நேரம் ஆயிருச்சேன்னு... லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு... எல்லாரும் ஒரு ரூம்-இல் ஒளிஞ்சு இருந்தாங்க...!

          எல்லாரும் அவர் கதவை திறக்கப் போற அந்த, சத்தத்துக்காக கவனமா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க... இவர் கதவை திறந்ததும்... சர்ப்ரைஸ்ன்னு சத்தம் போடுறதா பிளான்... மனுஷன் கார் பார்க் பண்ணிட்டு..... நடந்து வந்து.... டோர் நாப் திறக்கற வரைக்கும்... ஏதோ த்ரில்லர் படம் பார்க்கற எஃபக்ட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கோம்... இந்த மனுஷன் கதவ திறந்ததும்.... "சர்ப்ரைஸ்"ன்னு அவரே கத்தினார் பாருங்க... நாங்க எல்லாரும் ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம... (என்னாது இது??? கிர்ர்ரர்ர்ர்ர் ) ஒரு செகண்ட் அமைதி ஆய்ட்டோம்.

          அப்புறம் என்ன?? எல்லாரும் சுதாரிச்சு.... அவருக்கு விஷ் பண்ணிட்டு... கலகலப்பா பேசிட்டு, இருந்து போனாங்க.. (பின்ன வேற என்னத்த பண்றது...?) எனக்கு செம கடுப்பு... ஏங்க அப்படி பண்ணீங்க.. நாங்க எல்லாரும் எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்ன்னு கேட்டா..... அதுக்கு அவரு எனக்கு முதல்லயே டவுட் வந்திருச்சும்மான்னு பெருமையா சொன்னார்..... ஹலோ.... டவுட்-ஏ வந்தாலும் அதுக்கு இப்படியா போட்டு உடைக்கறதுன்னு........ கேட்டு புலம்பிட்டு இருந்தேன்.. (ஒரு மனுஷி எவ்ளோ ப்ளான்ன்னன்.... பண்ணி.... பார்ட்டி வச்சேன்... இப்படி தான் ஆப்பு வைக்கணும்.. ரெம்ப நல்லவரு போங்க ..... இப்புடி எத்தன பேர் கிளம்பி இருக்காங்கன்னு தெரியலயே...இனிமே சர்ப்ரைஸ் பார்ட்டி வைப்ப வைப்பன்னு.....................சரி விடுங்க.. அத வேற விளக்கமா சொல்லிக்கிட்டு... )

            அதென்ன நம்ம எது செய்யப்போனாலும்..... இப்புடி ஏடாகூடமாவே நடக்குது......! இத்தன கூத்துல நாங்க எல்லாரும் தீவிரமா.... டிஸ்கஸ் பண்ணி எப்படி கண்டுபிடிச்சிருப்பாருன்னு... அதுல உள்ள குறைகள் எல்லாம் பார்த்து... ச.... நம்ம இப்படி பண்ணி இருக்கணும்... அப்படி பண்ணி இருக்கணும்னு ஒரே டிஸ்கசன்....என் பிரண்டு ஒருத்தங்க... அடுத்த தரம் பக்காவா பண்ணிரலாம் பா... ன்னு சொன்னாங்க... (திரும்பவுமா???????? ஹ்ம்ம் ஹும்ம்ம்ம்)

              எத்தன தரம் அடி வாங்குறது??? நா வரல இந்த விளையாட்டுக்கு...!!!

பகிர்வைப் படித்த அனைவருக்கும் நன்றிங்க.


...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

22 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களை பற்றி நல்லா புரின்ந்து கொண்ட கணவர்... நீங்க சந்தோஷபடுங்கள் உங்களை புரிந்து கொண்ட கணவர் கிடைத்துள்ளாரென... எம்மை புரிந்து கொண்டவர்கள் எமது ஒவ்வொரு அசைவிலும் நாம் என்ன செய்கின்றோம் என்பதை துள்ளியமாக தெரிந்து வெிடுவார்கள். அடுத்தமுறை வீட்டில செய்யாமல் வேறு எங்காவது செய்யுங்கள்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா... என்ட்ரி ஓகே... பட் எண்டு நாட் ஓகே.... ஆனந்தி நீங்க பாவம்.

r.v.saravanan said...

பிளான் கரெக்டா பண்ணாமே எதுக்கு புலம்பல்

உங்கள் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு பகிர்வுக்கு நன்றி ஆனந்தி

Anonymous said...

he he. 1000W Bulb!

ஷர்புதீன் said...

:)

Kousalya Raj said...

பதிவை படிச்சதுக்கு நன்றி எல்லாம் சொல்றீங்க !? :))

ரொம்ப சிரிச்சிட்டேன் ஆனந்தி ! அந்த நேரத்தில் உங்க நிலைமை ரொம்ப பாவம். ஆனா என்ன பண்ண உங்க கணவர் புத்திசாலியாகவும் உங்களை நல்லா புரிஞ்சவராகவும் இருக்கிறாரே ?!! :)))

இராஜராஜேஸ்வரி said...

சர்ப்ரைஸ் பார்ட்டி...!!
உங்கள் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

உங்களுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி தான்! :-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஹ்ம்மம்ம்ம்ம்... அப்படி என் பிறந்த நாளைக்கு எனக்கு எந்த பயபுள்ளையும் வைக்கலங்க...//

you no peel my friend... next b'day... I coming u home... making spl idli for u... and cutting ...and eating... and paralogam going...:))



//இந்த மனுஷன் கதவ திறந்ததும்.... "சர்ப்ரைஸ்"ன்னு அவரே கத்தினார் பாருங்க... //

enakkum indha bulb anubavam undu...avvvvv.... vidunga vidunga...:))

Mahi said...

உங்க கணவர் குடுத்ததுதான் சூப்பர் சர்ப்ரைஸுங்க ஆனந்தி! ஹிஹி!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

மோகன்ஜி said...

நகைச்சுவை அழகாய் இழையோடும் எழுத்து ஆனந்தி! உங்கள் கணவருக்கு என் வாழ்த்துக்கள்.. கெட்டிக்கார கணவர்கள் சங்கம் சார்பாக...

KRISHNAMMAL FIREWORKS said...

Madam இந்த பிறந்த நாள் பார்ட்டி உங்க Life ல நடந்த உண்மை சம்பவமா...

சௌந்தர் said...

உங்களை பத்தி தான் அவருக்கு நல்லா தெரியுமே.... நம்ம ஆளுக்கு சுறு சுறுப்பு அதிகம்..!!! நீங்க பார்டி சொன்னாலே பெரிய சர்ப்ரைஸ் நினைச்சு இருப்பார்...!!!


(ஹ்ம்மம்ம்ம்ம்... அப்படி என் பிறந்த நாளைக்கு எனக்கு எந்த பயபுள்ளையும் வைக்கலங்க... )///

ஆமா ஆமா அப்படியே பண்ணிட்டாலும்....

Madhavan Srinivasagopalan said...

திரும்பவுமா????????

Aurangazeeb had 17 failed attempts..
but, 18th one was success, you know.

Menaga Sathia said...

தங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்தி!! ஹா ஹா அடுத்தமுறை நல்லா யோசித்து செய்ங்கப்பா...

நெல்லை விவேகநந்தா said...

ஆனந்தி... காமெடி வார்த்தைகளை அழகா... கரெக்ட்டான இடத்துல யூஸ் பண்ணுறீங்க... ஏன் நீ ஒரு காமெடி கதை எழுதக்கூடாது...
?

Sanjay said...

அவரு சர்ப்ரைஸ்னு சொல்லி இருக்க கூடாது, "தொப்பி தொப்பி" னு சொல்லி இருக்கணும்...!!!:D :D :D

Nandhini said...

காமெடி பார்ட்டி போல் இருந்தது உங்கள் சர்ப்ரைஸ் பார்ட்டி.....

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தோழி பிரஷா
ஹ்ம்ம்.. உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)
நல்ல ஐடியா தான்.. பண்ணலாம்..


@தமிழ்வாசி
ஹா ஹா ஹா.. அதே தாங்க.. தேங்க்ஸ்.. :)


@r. v. saravanan
ஹா ஹா.. அதை சொல்லுங்க.. இனி கரெக்ட்-ஆ பண்றேங்க..
கருத்திற்கு நன்றி :)


@அனாமிகா துவாரகன்
ஹா ஹா ஹா.. அதே அதே.. தேங்க்ஸ் :)


@ஷர்புதீன்
வருகைக்கு நன்றி.. :)


@Kousalya
எல்லாம் ஒரு பாசம் தான்.. அதே தாங்க.. என்னத்த பண்றது..!
ரொம்ப தேங்க்ஸ் :)



@ராஜராஜேஸ்வரி
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :)



@middleclassmadhavi
அதே தாங்க.. எல்லாம் ஒரு அனுபவம் தான்..
நன்றிங்க.. :)


@அப்பாவி தங்கமணி
ஹா ஹா ஹா.. நீங்க வரதெல்லாம் சரித்தேன்... அது ஏன் அந்த இட்லி மேட்டர்.. நான் என்ன தவறு செய்தேன் தோழி.. ஏன் இந்த கொலை வெறி?? (சும்மா தாம்பா.. தேங்க்ஸ் )

ஒய் ப்ளட்... சேம் ப்ளட்...!! :))


@மகி
எஸ் எஸ்.. தேங்க்ஸ் பா :)


@மோகன்ஜி
ஹா ஹா ஹா. இதுக்கும் ஒரு சங்கமா? சரி ரைட்ட்டு.. ஓகே..!! :)
ரொம்ப நன்றிங்க..! :)



@Gold
ஆமாங்க அதில் என்ன சந்தேகம்..! உண்மையாய் நடந்தது தாங்க..!
நன்றி :)


@சௌந்தர்
ஹலோ.. இதானே வேனாம்கறது.... என் சுறுசுறுப்பை.. பற்றி இந்த நாடே பேசுதே..! :)
ரெம்ப நன்றி..!


@Madhavan Srinivasagopalan
ஹா ஹா ஹா... அது சரி.. :)
ரொம்ப நன்றிங்க



@S. Menaga
ஹ்ம்ம்... யோசிக்கிறேன்.. ;)
தேங்க்ஸ்பா..!


@நெல்லை விவேகானந்தா
உங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி..
முயற்சி செய்கிறேன்..! :)


@சஞ்சய்
ஹா ஹா ஹா... அதேன் பார்த்தேன்.. எங்கடா.. ஆளையே காணமேன்னு.. நினச்சேன்.. வந்தாச்சுன்னு.. தெரிது.. :)


@FOOD
ரொம்ப நன்றிங்க :)



@நந்தினி
ஹா ஹா ஹா.. அதே தாண்டா...!! ;))
தேங்க்ஸ் மா..

How2GetXtraIncome said...

நெல்லை விவேகநந்தா said...
ஆனந்தி... காமெடி வார்த்தைகளை அழகா... கரெக்ட்டான இடத்துல யூஸ் பண்ணுறீங்க... ஏன் நீ ஒரு காமெடி கதை எழுதக்கூடாது...?

நெல்லை விவேகநந்தாவை நான் ஆமோதிக்கிறேன். ரோம்பவே சிரிச்சுட்டேன். (அடுத்தவுங்க துன்பத்துல என்னவொரு இன்பம்) பகிர்வுக்கு நன்றி,

செந்தில்குமார் said...

அன்புடன் ஆனந்தி....

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
உங்கள் கனவருக்கு

உங்களை நன்கு புரிந்து வைத்திருக்கிரார்....உங்களைவிட அதனால்தான்....இப்படியேல்லாம்

ஆனா அந்த பல்பு வாங்கின நேரத்துல உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு.....

சாந்தி மாரியப்பன் said...

//எத்தன தரம் அடி வாங்குறது??? நா வரல இந்த விளையாட்டுக்கு//

இது ஜூப்ப்பரு..

பெட்டர் லக் நெக்ஸ்ட்டு டைமு :-)))))))

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)