சும்மா வெறுமே ரெசிப்பி கொடுத்து போர் அடிச்சிருச்சு... உங்களுக்கும் ஒரு டெஸ்ட்.. இதில் நிறைய பொருட்கள் சுருக்கமான எழுத்துக்களாய் கொடுத்திருக்கேன்..! எத்தனை பேர்.. சரியா கண்டுபிடிச்சு ரசம் வைக்க போறீங்க? (யாரும் திட்ட பிடாது... நீங்க எல்லாரும் படிச்ச பிறகு.. விளக்கமா ரெசிப்பி போட்டு விடுகிறேன்.. இந்த டீல் ஓகே-யா? )
தக்காளி - 2
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
(உங்க நன்மை கருதி.. முக்கியமான பொருளாச்சேன்னு முழுசா சொல்லிட்டேன்.. அப்புறம் நீங்க எதாச்சும் ஒரு பொடிய போட்டு.. ஏதும் ஏடாகூடம் ஆயிருச்சுன்னா... எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தான்... :) )
ம. பொடி- சிட்டிகை
மிளகு பொடி - 1 / 4 ஸ்பூன்
பெ.கா.பொடி - சிட்டிகை
பூண்டு - 2
உப்பு - தேவைக்கேற்ப
எ.ப. சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கொ.ம.இலை - சிறிது
க.வே. இலை - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 ஸ்பூன்
மி.வ - 2
கடுகு - 1 / 4 ஸ்பூன்
உ.ப - 1 / 4 ஸ்பூன்
க. வே - சிறிது
செ.முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் கடுகு, உ. ப., க.வே., மி. வ., போட்டு.. கடுகு வெடித்ததும், அதில் நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு சிறிது வதக்கவும். இதில், பூண்டை இடித்து போடவும்.
தக்காளி சிறிது வதங்கியதும், அதில் ர.பொடி, மி. பொடி, ம. பொடி, பெ.கா. பொடி, உப்பு கலந்து... வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து... மிதமான தீயில், கொதிக்க விடவும்.
நுரை சேர்த்து வரும் போது... க.வே.இலை, கொ.ம.இலை போட்டு , எ.ப.சாறு விட்டு இறக்கவும்.
என்னங்க.. ரசம் சரியா வச்சிருவீங்க தானே...? குட் லக்..!
...நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment