மிச்சிகன் தமிழ் சங்கத்தில்... தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இளம் குழந்தைகள் இனிதாய் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க.. இளைஞர் பட்டாளம் இன்னிசையாய் அமெரிக்கன் தேசிய கீதம் பாட... கங்கா ராஜ்குமார் அவர்கள்.. குத்துவிளக்கு ஏற்றி.. விழா துவங்கியது. "தூள் பறக்கும் தீபாவளி..." பேரை கேட்டாலே சும்மா அதிருதுதில்ல....! உள்ளே நுழையும் போதே.. நம்ம ஊர் தியேட்டர் வாசலில் நின்ற உணர்வு தான் வந்தது.... ஏனென்றால் வாசலின் முகப்பிலேயே அங்கங்கே... "ஹவுஸ் ஃபுல்" மற்றும் "டிக்கெட்ஸ் சோல்ட்" அறிவிப்புகள் கண்ணில் பட்டன. அரங்கம் நிறைந்து வழிந்த காட்சி கண்டு ஏதோ, திருவிழா வந்த பூரிப்பு மனதினுள்...!!!
குழந்தைகளின் குதூகலமான கலை நிகழ்சிகள்... ஒவ்வொன்றாய் அணி வகுக்க பார்ப்பவர்களுக்கு பட்டாசு வெடிப்பதைப் பார்ப்பது போன்ற பரவசம்...! "ந்ருத்ய வந்தனத்தில் ஆரம்பித்து... "iDanz School of Modern Dance" வரை.. அத்தனை நிகழ்ச்சியும் முத்துக்கள்..!
யூத் கமிட்டி நடனமாடிய "தீபாவளி டைனமைட்ஸ்" நிகழ்ச்சி பங்கு பெற்ற இளைஞர்களின் ஆர்வத்தையும், நளினத்தையும் காட்டியது. "மிச்சிகன் மைனாக்கள்" தங்களின் ஜிங் சிக்கா... பாடலில் அனைவரையும் கவர்ந்து உடன் கைதட்ட வைத்தனர்.
அருபதின் அரும்புகள்.. பெயருக்கு ஏற்றார்போல அரும்புகளே தான்.. அவர்களின் ஆடலும் அசைவும் அருமை...! "Canton தீப்பொறிகள்" தங்களின் குத்தாட்டத்தில் அரங்கமே கைதட்டி உற்சாகமாய் "ஒன்ஸ் மோர்" கேட்க வைத்தனர்.
இதற்கு இடையில், முருகப்பன் அவர்களின்.. சிறிய நகைச்சுவை விருந்து.. கலாட்டாவான நிகழ்ச்சியாக இருந்தது. எதை எடுத்துச் சொல்ல.. எதை விட என்றே தெரிய வில்லை... அத்தனை நிகழ்ச்சியும் அரங்கம் அமர்ந்தோர் மனதை கொள்ளை கொண்டு சென்றது.
கலை நிகழ்ச்சிகள் முடியவும் தீபாவளி விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். குறை கூற முடியாத படி சுவையான உணவு பரிமாறப்பட்டது சிறப்பு..! உணவு இடைவேளைக்கு பின், விஜய் டிவியின் "நீயா? நானா?" புகழ் கோபிநாத் அவர்களின் விவாத மேடை அரங்கேறியது.
கோட் போடாவிட்டாலும் நான் தான் கோபிநாத்... யாரும் சந்தேகபட வேண்டாம்னு என்ட்ரிலயே கலகலக்கச் செய்தார் கோபிநாத். கொடுக்கப்பட்ட தலைப்பு "அன்றாட வாழ்க்கையில் அதிகம் அனுசரித்துப் போவது கணவனா? மனைவியா?"..! இரு புறத்திலும்.. சுமார் இருபது பேர் பங்கேற்று விவாதிக்க ஆரம்பித்தனர்.
சுத்தி வளச்சு எல்லாம் எனக்கு சொல்ல வேண்டாம்.. டக் டக்..ன்னு பாயிண்ட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு கோபி உற்சாகப் படுத்த... அவரவர் பார்வையில்.. மனதில் பட்டதை ஆர்வமாய் சொல்லி வந்தனர். இடையில்.. கணவனே.. என்ற அணியில் பேசிய ஒருவர், "அந்த காலத்துலேயே அந்த ஆண்டவனே அர்த்தநாரீச்வரறாய்.. உடலில் பாதி தந்து அனுசரித்து போய் விட்டார்.. " என்று சொல்லவும்.. கோபிநாத்.. "சார்.. நீங்க அர்த்தநாரீஸ்வரரை விடுங்க.. இப்போ அமெரிக்காவுக்கு வாங்க..ன்னு" சொல்ல அரங்கம் அதிர சிரிப்பொலி கிளம்பியது.
அதே போல மனைவியே! என்ற அணியில் ஒருவர் பெண்கள் மட்டும் புகுந்த வீட்டு உறவுகளை கலையாமல், அடிக்கடி பேசி கச்சிதமாக உறவு வைத்திருக்கிறோம். இந்த கணவர்கள், அப்படி எல்லாம் செய்வது இல்லை.. எங்கள் வீட்டில் கூட சேர்ந்தாற்போல் ஒரு வாரம் தங்குவது இல்லை.. என்று வருத்தப்பட்டார். அதற்கு எதிர் அணியினர் ஏதோ கூறி விவாதிக்க... இடை புகுந்த கோபிநாத்.. "ஏங்க... நீங்களே சொல்லுங்க.. உங்க வீட்டுக்காரர் உங்க வீட்டு ஹால்-ல உள்பனியன் மட்டும் போட்டுக்கிட்டு, ஒரு கைல ரிமோட் வச்சிக்கிட்டு.. விஜய் டிவி-ல நீயா? நானா? பாத்துக்கிட்டு.. நல்ல பேசுரான்யா.. ன்னு இருந்தா.. எப்படி இருக்கும்? மாமனார்.. உடனே கூப்பிட்டு ஏம்ப்பா.. அந்த மாட்டை பிடிச்சு.. பின்னாடி கட்டுப்பா...ன்னு சொல்லிற மாட்டாரா..? மாப்பிள்ளைக்குன்னு ஒரு கெத்து வேணுங்கன்னு சொல்லி கலாட்டாவாக கருத்தை பகிர்ந்தார்.
இரு அணியிலும்.. தங்கள் சொந்தக்கதை, சோகக்கதை, பந்தக்கதை, பார்த்த கதை...ன்னு எல்லாவற்றையும் அருமையாக சொல்லி விவாதித்தார்கள். இறுதியில், அதிகம் அனுசரித்து போவது மனைவியே...!! (பெண்களே) என்று சொல்லிய கோபிநாத்... அப்படி ஆண்கள் அனுசரித்துப் போகாமைக்கு காரணமும் பெண்களே..! என்று முடித்தார்.
அதற்கு அவர் சொன்ன விளக்கம்.. அருமை. அதாவது சிறு வயது முதலே ஆண் பிள்ளைகளை.. வீட்டில் எந்த வேலையும் செய்ய விடாது... நீ சாப்பிட்ட தட்டை நீ ஏண்டா எடுக்கற... ? நீ ஆம்பிளை... அதெல்லாம் செய்யக் கூடாது...ன்னு சொல்றது, மனம் வெம்பி அவன் அழுதாலோ... நீ ஆம்பிளைடா.. அழக்கூடாதுன்னு சொல்றது... இப்படி அவர்களை வளர்த்து விடுவது யார்?? தாயாகிய பெண்கள் தானே?
அத்தனை வருஷம் சுக போகமாய் வாழ்ந்த அவனை... திருமணம் முடிந்து வந்ததும்... இவர் என்ன கூட மாட ஒரு வேலை செய்யறது இல்ல..ன்னு மனைவிமார்கள் கோபித்துக் கொள்வதில் எந்த நியாயமும்.. இல்லை. ஏனென்றால் அவனுக்கு அது புதிது... அனுசரித்து போக காலம் பிடிக்கும்...ன்னு சொல்லி கலகலப்பாக, போர் அடிக்காமல் மிக நன்றாக பேசினார்.
இது தவிர.. எப்போது ஒரு மனைவி குடும்பத்திற்காய் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வாசல் இறங்கி வேலை செய்ய தொடங்கி விட்டாளோ, அப்போதே அவர்கள் இருவரும் ஒன்றே... வீட்டு வேலை தொடங்கி அத்தனையும் நீ பாதி.. நான் பாதி.. என்று எடுத்துச் செய்வது தான் முறை..! அன்பான இல்லறம் தொடர வேண்டுமென்றால்... அந்த இடத்தில் அனுசரணை தானாக வந்தே ஆக வேண்டும்ன்னு சொன்னார். இப்படி பல விஷயங்கள் ரசிக்கும் படியாய் அமைந்தது.
விவாத மேடை முடிந்து... வெளியில் வந்ததும்... "Cafeteria"வில் DJ & Dance ஏற்பாடு செய்திருந்தார்கள்... குழந்தைகளும், பெரியவர்களும்... குழுமி குத்தாட்டம் போட்டு தீபாவளியை.... வெகு வெகு சிறப்பாக கொண்டாடி முடித்து இல்லம் சென்றனர். மொத்தத்தில் பெயருக்கு ஏற்றாற்போல் "தூள் பறக்க........" தமிழ் சங்கத்தினர் தீபாவளி விழாவை சிறப்பாய் நடத்தி முடித்து விட்டனர்.

0 comments:
Post a Comment