topbella

Monday, May 4, 2026

வான் மழையே வா - திருக்குறள் சிறார் பாடல்கள்

#திருக்குறளை_சிறார்_பாடலாக்கிய_கவிஞர்

கொரோனா காலத்தில்  பெண்களும் குழந்தைகளும் சிறார் இலக்கியப் படைப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருவது வரவேற்புக்குரியது.

 அமெரிக்காவில் வசித்து வரும் கவிஞர் நெல்லை அன்புடன்‌ ஆனந்தி   Nellai Anbudan Ananthi அவர்கள் புதுக்கவிதை, மரபுக் கவிதை, கட்டுரை என ஐந்து நூல்களை வெளியிட்டு இருந்தாலும் முதல் முறையாக சிறுவர்களுக்காக திருக்குறள் சார்ந்த பாடல்களை எழுதி வெளியிட தயாராக உள்ளார்.

 அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களுக்கு பாடல்களை எழுதி  அதற்கு தகுந்த ஓவியத்தையும் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகள் விரும்பும் வண்ணம் #வான்_மழையே_வா என்று தலைப்பிட்டுள்ள இந்த நூலுக்கு உள் பக்க ஓவியங்களை ஓவியர் #ஜமால் அவர்களும் அட்டைப்பட ஓவியத்தை #டி_என்_ராஜன் அவர்களும் வரைந்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.. இந்த நூலை பெருமைமிகு பதிப்பகமான மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. லாலிபாப் சிறுவர் உலகம் வடிவமைத்து உள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை திருவிக பேச்சுப் பயலரங்க நிறுவனர் #பா_தாமோதரன் அவர்களும்

 வாழ்த்துரை முனைவர் #சுடர்கொடிகண்ணன், முதல்வர் அரசு கலைக் கல்லூரி ஆகியோர் வழங்கி உள்ளார்கள்.

இந்த நூல் சிறார் இலக்கியத்தில் நுழைவதற்கான நுழைவுச்சிட்டாகவே காண்கிறேன். கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களை சிறார் இலக்கிய உலகம் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்.

Nellai Anbudan Ananthi 
Elamaran Perumal 
Lollipop Children's World 
Kannikovil Raja 
நூலேணி - புத்தக வீதி Book Street 
Sudarkodi Kannan 

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)