topbella

Sunday, May 31, 2026

நெல்லை அன்புடன் ஆனந்தி | 3 நூல்கள் அறிமுக நிகழ்வு | நிமிர் இலக்கிய வட்டம்

மே 30, 2026

நிமிர் இலக்கிய வட்ட புத்தகப்பட்டறை நிகழ்வில்..

நெல்லை அன்புடன் ஆனந்தி யின் 3 நூல்கள் அறிமுக நிகழ்வு

#ஒற்றை மரக்காகம் ஹைக்கூ
#சோர்விலாள் பெண் தன்முனை
#நெல்லையப்பர் வீதி லிமரைக்கூ

இலக்கிய வரலாற்றில்.. இந்த 3 நூல்களும் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் நூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 நூல் அறிமுக நிகழ்வின் காணொளி:

ஒற்றை மரக்காகம், (ஹைக்கூ) நூலை சிறப்பாக அறிமுகம் செய்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும்...

சோர்விலாள் பெண் (திருக்குறள் தன்முனைக் கவிதைகள்) நூலினை சிறப்பாக திறனாய்வு செய்த கவிஞர் சிந்துஜா கணேஷ் அவர்களுக்கும்...

நெல்லையப்பர் வீதி (லிமரைக்கூ) நூலினை வெகு சிறப்பாக ஆய்வுரையாக அறிமகம்  செய்த கவிஞர் பரிமளாதேவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நிகழ்வினைத் தொய்வின்றி நெறியாள்கை செய்த அன்புத்தோழி கவிஞர் செ.ரா. கிருஷ்ணகுமாரி அவர்களுக்கு என் அன்பின் வாழ்த்துகள்.

நிகழ்வினை ஏற்பாடு செய்து சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கிய நிமிர் இலக்கிய வட்ட நிறுவனர் கவிஞர் பாபு சசிதரன் அவர்களுக்கும்..

நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துகளை வழங்கிய நூலேணி பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய திரு. சண்முகம் ஐயா அவர்களுக்கும், 

நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்த தமிழ் உறவுகள்/நட்புகள் 

திரு. அழகுராஜா
கவிஞர் சொர்ணதீபா
கவிஞர் மேனகா நரேஷ்
கவிஞர் உமா இராமலிங்கம்
கவிஞர் அன்பழகி ஸ்ரீதர்
திருமதி. தேவிகா
திரு. யேசுதாஸ்
திரு. மாணிக்கம்
திரு. சஞ்சய் 
கவிஞர் பத்மா
மற்றும் இணைந்திருந்த அத்தனை தமிழ்ச் சொந்தங்களுக்கும் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நூல்களைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

சென்னை +91 9841236965
அமெரிக்கா +1 7346527592

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)