எனது #மௌனபுத்தன் ஹைக்கூ நூல் குறித்து ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையை..
முனைவர் பட்ட ஆய்வாளர் #ஜானகி (தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்) எழுதி இருக்கிறார்.
இந்தக்கட்டுரை #தமிழ்_கூறும்_நல்லுலகம் என்ற ஆய்வு நூலில் இடம் பெற்றுள்ளது.
இந்நூல் இன்று (பிப்ரவரி 28,2026) தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வெளியிடப்படுகிறது.
முனைவர் பட்ட ஆய்வாளர் வழியாக ஆய்வு செய்யப்பட்டு கல்லூரி ஆய்வு நூலில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஆற்றுப்படுத்திய நூலேணி பதிப்பக உரிமையாளர் #கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கும், முனைவர் #வ_மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment