தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
- பாதாம் பருப்பை குறைந்தது ஒரு நான்கு மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை, நீக்கி விடவும்.
- பின்னர் அதனுடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (ரொம்ப மையாக அரைக்க வேண்டாம்)
- பின்னர் ஒரு அடி பிடிக்காத கனத்த பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு, அது நன்கு கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கிளற வேண்டும்.
- குறைந்தது ஒரு 30 நிமிடமாவது ஆகும். விடாமல் கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.
- முதலில் கிளறும் போது, வெளியில் தெறிக்கும்... நேரம் ஆக ஆக.. தெறிப்பது குறைந்து விடும்.
- இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி வந்தால்... பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி வரும் போது.. ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி... நன்கு ஆறிய பிறகு வில்லைகள் போடவும்.
~அன்புடன் ஆனந்தி


