தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
- பாதாம் பருப்பை குறைந்தது ஒரு நான்கு மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை, நீக்கி விடவும்.
- பின்னர் அதனுடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (ரொம்ப மையாக அரைக்க வேண்டாம்)
- பின்னர் ஒரு அடி பிடிக்காத கனத்த பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு, அது நன்கு கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கிளற வேண்டும்.
- குறைந்தது ஒரு 30 நிமிடமாவது ஆகும். விடாமல் கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.
- முதலில் கிளறும் போது, வெளியில் தெறிக்கும்... நேரம் ஆக ஆக.. தெறிப்பது குறைந்து விடும்.
- இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி வந்தால்... பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி வரும் போது.. ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி... நன்கு ஆறிய பிறகு வில்லைகள் போடவும்.
~அன்புடன் ஆனந்தி
9 comments:
முதலில் கிளறும் போது, வெளியில் தெறிக்கும்... நேரம் ஆக ஆக.. தெறிப்பது குறைந்து விடும்.//
ரொம்ப Difficult இருக்கும் போல ஹெல்மெட் போட்டுக்கலாமா..??
வில்லைகள் போடவும்.//
வில்லை அப்படின்னா..???
ஸ்வீட்டான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பகிர்வுக்கு நன்றி புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு ஸ்பெஷலா ஆனந்தி....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! பாதாம் கேக் ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.
இனிப்புக்கு நன்றிப்பா..
பாதாம் கேக் நல்லா இருக்குங்க ஆனந்தி! இனிப்புடன் துவங்கிய புத்தாண்டு இனிமையாகக் கழிய வாழ்த்துக்கள்!
//குறைந்தது ஒரு 30 நிமிடமாவது ஆகும். விடாமல் கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.//
பரவாயில்லை ஒரு வேளை வராட்டி ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊற வச்சி சாப்பிடலாம் ஹி...ஹி.... :-)))
பார்க்கும் போதே சுவைக்க தூண்டுது அருமை
Post a Comment