topbella

Saturday, February 28, 2026

மலாயாப் பல்கலைக்கழகத்தில் எனது நூல்கள்

எனது நூல்களை மலாயாப் பல்கலைக்கழகத்தில் கொண்டு சேர்த்த 

அன்புத்தோழி Punitha Prakash அவர்களுக்கும், நூலேணி பதிப்பகம் Nooleni publications உரிமையாளர் Kannikovil Raja அவர்களுக்கும் நன்றி.

நெல்லை அன்புடன் ஆனந்தி

மௌன புத்தன் ஹைக்கூ நூல் - ஆய்வுக்கட்டுரை - தமிழ் கூறும் நல்லுலகம் ஆய்வு நூல் - ஜானகி, முனைவர் பட்ட ஆய்வாளர்

எனது #மௌனபுத்தன் ஹைக்கூ நூல் குறித்து ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையை..

முனைவர் பட்ட ஆய்வாளர் #ஜானகி  (தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்) எழுதி இருக்கிறார்.

இந்தக்கட்டுரை #தமிழ்_கூறும்_நல்லுலகம் என்ற ஆய்வு நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்நூல் இன்று (பிப்ரவரி 28,2026) தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வெளியிடப்படுகிறது.

முனைவர் பட்ட ஆய்வாளர் வழியாக ஆய்வு செய்யப்பட்டு கல்லூரி ஆய்வு நூலில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது கூடுதல் மகிழ்ச்சி.

ஆற்றுப்படுத்திய நூலேணி பதிப்பக உரிமையாளர் #கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கும், முனைவர் #வ_மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நெல்லை அன்புடன் ஆனந்தி


Friday, February 27, 2026

குருவி வாயில் பருந்து - வாழ்த்துரை

அண்மையில் தமிழ்க்கவிதை உலகில் ஹைக்கூ கவிதைகளை பலர் விரும்பி எழுதி வருகிறார்கள்.

அவ்வகையில் நூலேணி பதிப்பகம் வாயிலாக எனக்கு அறிமுகமான கவிஞர் அனுராதா சௌரிராஜன்
Anuradha Sowrirajan  அவர்களின்..

#குருவி_வாயில்_பருந்து

ஹைக்கூ நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மகிழ்ச்சியான தருணம்..

கவிஞருக்கு அன்பான வாழ்த்துகள்.

நூலை சிறப்பாக வடிவமைத்த..
நூலேணி பதிப்பகம் Nooleni publications உரிமையாளர்

கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆனந்த சந்திரிகை பிப்ரவரி 15, 2026 இதழ்

ஆனந்தசந்திரிகை பிப்ரவரி 15, 2026 இதழ்

இதழை வாசிக்க:
Anandachandrikai 2026-02-01
https://drive.google.com/file/d/1ye35VdQtAkwveDe5Q_j04NIcswXqtHRh/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/14UraB1RC6d/

Please Use this link to watch video of Tackle Team:
https://tackleteamusa.com/

நெல்லை அன்புடன் ஆனந்தி

Thursday, February 26, 2026

காற்றில் உதிரும் கணம்

#பண்புடன் இதழில் எனது கவிதை

தலைப்பு: காற்றில் உதிரும் கணம்

சாளரத்தைத் திறந்தவள்
சன்னமாய்ச் சிரித்தாள்
காத்திருப்பின் ரகசியம்
காற்றில் கலந்த கணம்

உள்ளக் கிளர்ச்சி எல்லாம்
ஊர்வலமாய்ப் போகுது
வெள்ளம் திரண்டது போல்
வெகுளித்தனம் மீறுது

கள்ளத்தனம் எல்லாம்
காணாமல் போனது
கரை கடந்த அன்பு இங்கே
கரம் கோர்க்கப் பார்க்குது

ஒற்றை மலர் தனியே
ஒய்யாரமாய் நின்றது
எட்டிப் பார்த்த அவளை
ஏறெடுத்துப் பார்த்தது

சாய்வது போல் நடித்தது
சாளரத்தை முறைத்தது
வாய் திறந்து சிரித்தவளை
வாய் பிளந்து ரசித்தது

தன்னை விட அழகவளை
தனிப்பூவென நினைத்தது
உள்ளத்தில் நிறைத்தது
உதிரும் வரை நினைத்தது

உணர்வும் உயிரும்
உதிரும் மலருக்குண்டு
உறவும் பகையும்
உணர்ந்தால் நன்று!

நெல்லை அன்புடன் ஆனந்தி

பண்புடன் லின்க்:

ஊடலின் உச்சம்

ஊடலின் உச்சம்
உணர்வுகளின் எச்சம்
பேசிடக் கெஞ்சும்
பேசாமல் கொஞ்சும்

நெல்லை அன்புடன் ஆனந்தி

Monday, February 23, 2026

அயலகத் தமிழ் எழுத்தாளர் #1 | நெல்லை அன்புடன் ஆனந்தி | ஒரு இலக்கியப்பாலம்

https://youtu.be/W0H2OMMrD2c?si=fTqqXNanxyVisdGQ

Sunday, February 22, 2026

பாட்டும் கதையும் - பிப்ரவரி 2026 - லாலிபாப் சிறுவர் உலகம் & தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி


பிப்ரவரி 28 சனிக்கிழமை இந்தியக் காலை 8:00 மணி

தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம்
இணைந்து நடத்தும் *"பாட்டும் கதையும்"*

நெறியாள்கை:
நெல்லை அன்புடன் ஆனந்தி

*பங்கேற்கும் பிள்ளைகள்*

*கதை சொல்லும் குழந்தைகள்*

1. ஹ.அர்ஜுன் ஸ்ரீவத்ஸன்
2. அ.இ.நன்மாறன்
3. ல. கவிஸ்ரீ

*பாடல் பாடும் குழந்தைகள்*

1. மு.உ. ஸ்ரீ லக்சன்யா
2. G. ரோஷிணி, பப்ஸ் அப்பந்தாங்கல்
3. மு. வர்ஷினி, வந்தவாசி

தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி - திரைக்காவியங்கள் திறனாய்வு #39


கண்ணதாசன் கலைக்கூடம் அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும் 

திரைக் காவியங்கள் – திறனாய்வு

SPECIAL SHOW:  39 -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் “முதல் மரியாதை” - திரைப்படம் இடம்பெறுகிறது!

  

  • (1985) தமிழ்த் திரையுலகின் ஒரு காவியத் திரைப்படமாகக் கருதப்படுகிறது. 

  • இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், நடுத்தர வயதுடைய ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான ஆழமானநட்பையும் காதலையும் மையமாகக் கொண்டது. 

  • நடிகர்கள்: 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் (மலைச்சாமி), ராதா (குயில்), வடிவுக்கரசி (பொன்னாத்தா), சத்யராஜ் மற்றும் பலர்.

  • இசை: இளையராஜா. 

  • இப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளன (உதாரணம்: "பூங்காற்று திரும்புமா", "வெட்டி வேரு வாசம்"). 

  • விருதுகள்: சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. 

  • பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தேசிய விருதுகளைப் பெற்றனர். 

நெறியாளர்:  நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆய்வுரை:   

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிகையாளர், 

                                      கலைமாமணி சித்ரா லக்ஷ்மணன்

கருத்துரை – தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:

திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார் 

பாடல்கள் பற்றி: கவிஞர் காவிரிமைந்தன் 

பாடும் குயில்கள்:  

திரு. சாம் டேனியல், 

திருமதி.கீதம் கனிமொழி

திருமதி. அன்புடன் ஆனந்தி

பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித் 

ஒருங்கிணைப்பாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி

கருவாக்கம் – உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்

PROGRAMME FLOW:

நெறியாளர்: 

நெல்லை அன்புடன் ஆனந்தி

சிறப்பு அழைப்பாளர்: கலைமாமணி சித்ரா லஷ்மணன் அவர்கள் அறிமுகம்..

சித்ரா லட்சுமணன் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். 

  • இவர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு பல தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

  • சித்ரா லட்சுமணன் அவர்கள் தனது ஆரம்பக் காலத்தில் ஒரு திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

  • அதன் பிறகு இயக்குநர் பாரதிராஜாவின் அழைப்பை ஏற்று அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

  • பின்னர் அவரது சகோதரர் சித்ரா ராமுவுடன் இணைந்து அவரது அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.

  • அவ்வப்போது தனது சொந்த தயாரிப்பு திரைப்படங்களில் சில காட்சிகளில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்தும் வந்தார்.

  • பின்னர் 1983 ஆம் ஆண்டில், காயத்ரி பிலிம்ஸ் என்ற சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதில் முதல் முறையாக மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தார். 

  • இப்படம் வணிக ரீதியான வெற்றிகளையும் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றது.

  • மேலும் 1980 களில் தமிழ் படங்களுக்கான பத்திரிகை உறவு அதிகாரியாகவும் பணியாற்றினார்.

  • பின்னர் ஒரு நடிகராக உத்தம வில்லன் (2015) திரைப்படத்தில் நடித்தார்.

  • கமல்ஹாசனுடன் சூரா சம்ஹாரம் (1988), பிரபுவுடன் பெரிய தம்பி (1997) மற்றும் கார்த்திக்குடன் சின்ன ராஜா (1999) படங்களை இயக்கினார். 

  • ஜப்பானில் கல்யாண ராமன் (1985) திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் பாராட்டுகளைப் பெற்றது. 

  • பாஸ் என்கிற பாஸ்கரன் (நேனே அப்பாயி) (2010) மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் இவரது நகைச்சுவை போற்றப்பட்டது.

  • மேலும் தனது வாழ்க்கை முழுவதும் லட்சுமணன் பொறுப்பான பதவிகளையும் வகித்து அதிலும் திறம்பட செயல்பட்டு வந்துள்ளார்.

  • பின்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்

  • தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 

  • 2011 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் 80 ஆண்டு தமிழ் சினிமா என்ற புத்தகத்தை வெளியிட்டார். 

கலைமாமணி சித்ரா லஷ்மணன் அவர்களின் திரைக்காவியத் திறனாய்வுரை 

இசையும் பாடலும்: கவிஞர்  காவிரிமைந்தன் 

பாடல் 1: பூங்காற்றே திரும்புமா - திரு. சாம் டேனியல் 

கருத்துரை: எஸ்.கே.ராஜேந்திரகுமார் 

இசையும் பாடலும்: கவிஞர்  காவிரிமைந்தன் 

பாடல் 2: வெட்டிவேரு வாசம் -  கீதம் கனிமொழி 

இசையும் பாடலும்: கவிஞர்  காவிரிமைந்தன் 

பாடல் 3: ராசாவே உன்னை நம்பி – நெல்லை அன்புடன் ஆனந்தி

திரைக்காவியத் திறனாய்வு நிறைவுரை  - கலைமாமணி சித்ரா லஷ்மணன்

பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித் - 8 நிமிடங்கள்

நிறைவுரை: கவிஞர் காவிரிமைந்தன் - 2 நிமிடங்கள்

உலக தாய்மொழி தினம் - திணை அமெரிக்கா

திணை அமெரிக்கா வழங்கும் 

உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி

நெல்லை அன்புடன் ஆனந்தி

 

திணை அமெரிக்கா அமைப்பு வழங்கும் தமிழ் மொழி தின சிறப்பு நிகழ்ச்சி

*மொழிப்போர் தியாகிகள் தினம்* பற்றி 6 குழந்தைகள் பேச்சு


Session Flow:

1) Welcome Speech by Ananthi

2) Kids Session - 6 Tamilnadu Kids, 2 NewJersey Kids


*பேசும் தலைப்பு*

1. ஆதவன், நியூசெர்சி

     (*Importance of International Mother Language Day - Short Speech in Tamil*)

2.ஆதிரை, நியூசெர்சி

     (*சி. இலக்குவனார்*)

3. அமிழ்தினி, ஆம்பூர் (*தாளமுத்து*)

4. G. ரோஷிணி, அப்பந்தாங்கல் (*சாரங்கபாணி*)

5. மஹிமா, அப்பந்தாங்கல் (*சத்தியமங்கலம் முத்து*)

6. ஷம்யுக்தா, பொள்ளாச்சி (*பாடல்*)

7. ஸ்நிகிதாஸ்ரீ,  பொள்ளாச்சி (*பீளமேடு தண்டபாணி*)

8. நமச்சிவாயம், ஈரோடு (*ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார்*)



Special Guest "Thozhar Vennila" Speech

திருமதி.ஜே. வெண்ணிலா


தொழில்முறை அனுபவம்:

  • தொழில்துறை ஆலோசனை, மாணவர்கள் ஆலோசனை மற்றும் சமூக, மனித சேவைகள், திட்டம் மற்றும் திட்ட மேலாண்மை (சிஎஸ்ஆர்) ஆகியவற்றில் இருபத்தைந்து ஆண்டுகள் நிபுணத்துவம். 

  • ஐசிஎம்ஆர், போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் ஒரு வருட சேவை, 

  • காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஒரு சமூக சேவகர்,

  • மனநல வழக்கு மேலாண்மையுடன் இணைந்து ,  ஒருங்கிணைப்பாளர் மற்றும் கள ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

  • குடும்ப ஆலோசனை, போதைப்பொருள் மறுவாழ்வு ஆலோசனை, தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்

  • மேலும் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்வதிலும் தொடங்குவதிலும் திறமையானவர்.

  • பன்முகத் திறன், குடும்ப ஆலோசனை மற்றும் நபருக்கு நபர் ஆலோசனை, குழுக்களுடன் பணிபுரிதல், 

  • சுய உதவிக் குழுக்களுடன் பணிபுரிதல், கடன் மற்றும் சேமிப்புத் திட்டங்களை திறம்பட நிர்வகித்தல், 

  • பெண்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்களுக்கான பல்வேறு கல்வி / மறுசீரமைப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்தல்.


திறன்கள்:

  • பிரச்சனைகளை விரைவாகக் கண்டறிந்து தீர்க்க திறந்த தொடர்பு வழிகளைப் பராமரித்தல்.

  • வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் நம்பிக்கை, தனிப்பட்ட உறவு மற்றும் வலுவான பணி உறவுகளை வளர்த்தல்.

  • சிக்கல்களை பகுப்பாய்வு செய்தல், மாற்று வழிகளை வகுத்தல் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகளில் சரியான முடிவுகளை எடுக்க வழிநடத்துதல்.

  • சுய உதவிக் குழு உறுப்பினர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த அவர்களின் பயிற்சி பெற்ற, கண்காணிக்கப்பட்ட, ஊக்கப்படுத்தப்பட்ட மற்றும் மேற்பார்வையிடப்பட்ட சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள்.


Educational Qualification:

  • Certified NLP Practitioner

  • Certified Cognitive Hypnotherapy practitioner

  • Postgraduate Diploma in Counselling 

  • Masters of Science in Psychology  

  • Masters of Science in Social Work 



4) Vote of Thanks by Kannikovilraja 

சிறுவர் இலக்கியச்செம்மல், குழந்தை ரத்னா, பதிப்பக உரிமையாளர், எழுத்தாளர், கவிஞர், லாலிபாப் சிறுவர் உலக நிறுவனர், பன்முகத் திறமையாளர் 


5) Wrapup/Ending Speech by Ananthi

சிறுவர் இசை அரங்கம் - பிப்ரவரி 2026

YouTube link:

அனைவருக்கும் இனிய வணக்கம்.

தமிழால் இணைவோம் வழங்கும்..

*சிறுவர் இசை அரங்கம்*

நாள்: *பிப்ரவரி 22*

நேரம்: *இந்திய இரவு 8 மணி*

பங்கேற்கும் சிறுவர்கள்:

1.அவ்யயா உப்பிலி முகுந்தன் 
2.ஜனனி இடிகா 
3.நிஹிரா இடிகா
4.நிஹால் மேகலா
5.நமீஷ் அருண்குமார்
6.நிவேதா ஹரிஷ்
7.தாரிணி நாயர்
8.கார்த்திகேயா குண்டூரூ
9.தன்விதா ஶ்ரீராம்
10.க்ருதி முச்சுகோடா
11.ஹரித் முலா
12.சாயி சஞ்சனா நரேஷ்

மெட்டுக்குப் பாட்டு - பிப்ரவரி 2026


YouTube link:

அனைவருக்கும் இனிய வணக்கம்.

தமிழால் இணைவோம் வழங்கும்..

மெட்டுக்குப்பாட்டு

நாள்: *பிப்ரவரி 22* இந்திய இரவு 7:00 மணி

நேரம்: *இந்திய இரவு 7 மணி*

பங்கேற்கும் பாடகர்கள்:

1. பாலநேத்திரம்
2. சொர்ணதீபா
3.மேனகா நரேஷ்
4. வித்யாலட்சுமி
5. நெல்லை அன்புடன் ஆனந்தி

Friday, February 20, 2026

மூழ்கிய நினைவுகள்...

மூளை மடிப்புகளுக்குள்
முகவரி தொலைத்த குழந்தையாய்
மூழ்கிய நினைவுகளை
முழுமூச்சாய் தேடும் உள்ளம்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

மூடுபனிப்போர்வை


மயக்கும் மாலை
மார்கழி உணர்வாய்
மூடுபனிப் போர்வை
மெதுவாய் நகரும்
மென்மையான நொடிகள்
குசலம் விசாரிக்கும்
குதூகல மரங்கள்
இன்னிசையும்
இயற்கையும்
இனிது இனிது
வாழ்தல் இனிது!

நெல்லை அன்புடன் ஆனந்தி

Saturday, February 14, 2026

ஆனந்தசந்திரிகை பிப்ரவரி 15, 2026 இதழ் டல்லஸ், டெக்ஸாஸ்

#ஆனந்தசந்திரிகை 
டல்லஸ், டெக்ஸஸ்
பிப்ரவரி 15 2026 இதழில்

எனது பங்களிப்பு

#இதழை_வாசிக்க:

Please use this link for reading Anandachandrikai 2026-02-01

#கருத்துரைக்க:
Please use this link for your review and comments:

Please Use this link to watch video of Tackle Team:

நெல்லை அன்புடன் ஆனந்தி 
வாசகர் தொடர்புச் செயலாளர்

கவிதை உறவு - பிப்ரவரி 2026 இதழ்

கவிதை உறவு 
பிப்ரவரி 2026 இலக்கிய இதழில் எனது கவிதை

ஆசிரியர் குழுவிற்கு நன்றியும், வாழ்த்துகளும்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

Thursday, February 12, 2026

கொக்கரக்கோ பிப்ரவரி 2026 இதழ்

Tuesday, February 10, 2026

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் நிகழ்ச்சி - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா

#மொழிநூல்_ஞாயிறு
#தேவநேயப்_பாவாணர் 
#பிறந்த_நாள்_விழா 
#புரட்சிக்கவிஞர்_பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா

சிறப்புரை வழங்கிய மகிழ்வான தருணம்

நெல்லை அன்புடன் ஆனந்தி
காணொளியைப் பார்க்க:

காற்றின் கால் தடங்கள் - கவிதையும் காலண்டரும்


#காற்றின்_கால்_தடங்கள் 

நூலேணி பதிப்பகம் Nooleni publications வெளியீடு

பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைத் தொகுப்பு நூல்

இந்நூலில் ஒவ்வொரு கவிஞருக்கும் அவர்களின் கவிதைகள் மற்றும் 2026 காலண்டரை வண்ணத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் QR CODE இணைத்திருப்பது சிறப்பான முன்னெடுப்பு.

தன்முனை வரலாற்றில் இது முதல் முயற்சி மற்றும் முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதுபோல் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வரும் நூலேணி பதிப்பக நிறுவனர் 

#கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு மனமகிழ் வாழ்த்துகள்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

Sunday, February 8, 2026

இலை சொட்டும் மழைத்துளி - நூலேணி பதிப்பக வெளியீடு

பிப்ரவரி 08, 2026

உறைபனி உதிர்த்த இறகு 
கனல் எழுப்பும் பெருங்காடு 
காற்றின் கால் தடங்கள் 

இந்த மூன்று தன்முனைத் தொகுப்பு நூல்களின் வெற்றியைத் தொடர்ந்து..

நூலேணி பதிப்பகம் வெளியீடு

பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைக் கவிதைத் தொகுப்பு நூல்

இலை சொட்டும் மழைத்துளி

தொகுப்பில் இணைய:

தொகுப்பாசிரியர்கள்:
நெல்லை அன்புடன் ஆனந்தி 
கன்னிக்கோவில் இராஜா

தமிழால் இணைவோம் நிகழ்வுகள் (பிப்ரவரி 08, 2026)

Thursday, February 5, 2026

கதை அரும்புகள் - விரைவில்...

விரைவில்...

#லாலிபாப்_சிறுவர்_உலக_பதிப்பகம் 

பதிப்பித்து வெளிவரும்..

#பன்னாட்டு_மாணவர்களின்_சிறார்_கதைகள் நூல்

நூலின் பெயர்:
கதை அரும்புகள்

நூலின் விலை: ₹130

நூலைப்பெற: 9841236965

தங்கள் இல்ல நூலகங்களில் இணைத்திட, சிறந்த நூல்.

நெல்லை அன்புடன் ஆனந்தி
---------
அன்னைத் தமிழுக்கு முதல் வணக்கம்! கொரொனா காலத்தில் தொடங்கப்பட்டு இன்று வரை குழந்தைகளுக்காகச் சிறப்பாக இயங்கி வரும் லாலிபாப் சிறுவர் உலக அமைப்பின் நிறுவனர் திரு. கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 

கதைகள் என்றாலே நம் அனைவருக்கும் அலாதிப் பிரியம் தான். யாருக்குத்தான் கதை கேட்பது பிடிக்காது? 

அதுவும் ஆர்வத்தைத் தூண்டும் படியாக ஏதேனும் கதைகள் சொல்லி விட்டால், அடுத்து என்ன? என்ன? என்று நம்மை மற்ற வேலைகள் எதையும் செய்ய முடியாத படிக்கு அதிலேயே நம் சிந்தனைகளை சுழற்றி விட்டு விடும்.

பொதுவாக வீட்டில் பெரியவர்கள் சிறுவர்களுக்குக் கதைகள் சொல்வதுண்டு. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் நமக்குக் கதை சொல்லும் அளவிற்கு சிறந்த கதை சொல்லிகளாக, கதாசிரியர்களாக வளர்ந்து வருவது நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது.

லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், கதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறை, விடுகதைகள், பன்முகத் திறமைகளை வெளிக்கொணர்தல் எனப் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற பல குழந்தைகள் தனி நூல்கள் பல வெளியிட்டும் இருக்கிறார்கள்.

லாலிபாப் சிறுவர் உலகத்தில் தொடர்ந்து பயணிக்கக்கூடிய பன்னாட்டுக் குழந்தைகள் 17 பேர் எழுதி “கதை அரும்புகள்” என்ற பெயரில் இந்நூல் வெளிவருகிறது.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”   (குறள்:69)
என்று வள்ளுவம் சொல்வது போல நாம் கதை சொல்லிக் கேட்ட குழந்தைகள் இன்று அவர்களே கதைகள் எழுதி ஒரு கதாசிரியராக வளர்ந்து நிற்பது நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. 

ஒரு கதையைக் கேட்பவர்கள் ரசிக்கும் படியாக எழுதுவதற்கு நல்ல சிந்தனை ஓட்டம் வேண்டும். நம் சிந்தனை சக்தியைத் தூண்டுவதற்கும், விரிவடையச் செய்வதற்கும் கதை எழுதுதல் ஒரு நல்ல பயிற்சியாக அமையும். 

அப்பயிற்சியை திறமையாகக் கையாண்டு கதைகள் படைத்திருக்கிற 17 பிள்ளைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இக்கதை நூல், நூலைப் படிக்கும் மற்ற குழந்தைகளிடமும் கதை எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

கதைகளைப் படித்து இக்குழந்தைகளுக்கு தங்கள் வாழ்த்தையும் கருத்தையும் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்நூலை திறம்பட வடிவமைத்து பதிப்பித்திருக்கும் லாலிபாப் சிறுவர் உலக பதிப்பகத்திற்கு மனமகிழ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வாழ்க செந்தமிழ்!

நெல்லை அன்புடன் ஆனந்தி

#newkidsstrorybook
#KathaiArumbugal
Lollipop Children's world

Sunday, February 1, 2026

கவிச்சிறகுகள் - ஜனவரி 2026 இதழ்

அனைவருக்கும் இனிய வணக்கம்!

*ஜனவரி 2026 கவிச்சிறகுகள் இதழ்*

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 
*கவிச்சிறகுகள்* ஜனவரி 2026 இதழை மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அமெரிக்கா 

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு 
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா சென்னை 

*ஜனவரி 2026 இதழ் வாசிக்க...*

(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)

Flip book link:

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற: 

- ஆசிரியர் குழு

Saturday, January 31, 2026

கதையாடல் நிகழ்வு - ஜெர்மனி தமிழ் வான் அவை

#ஜெர்மனி_தமிழ்_வான்_அவை
#கதையாடல்_நிகழ்வு 

சிறுகதை:
மாற்றங்கள் காணாமல்

எழுத்தாளர்:
பவானி சற்குணசெல்வம்

விமர்சக சிறப்புரை:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி 

அருமையான நிகழ்விற்கு..
அழைப்பு விடுத்த 
அன்புத்தோழி Gowry Sivapalan கௌசி அவர்களுக்கு
மனமகிழ் நன்றி.

எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

காணொளி பார்க்க:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)