*முதல் பனி*
இலைகள் உதிர்ந்து
இதமாய் கடந்தது
மரங்கள் சலனமின்றி
மௌனமாய் நின்றது
பனிமழை முதல் நாள்
பார்த்திடத் திருநாள்
மண் மறைத்து
மனம் நிறைத்த நாள்
புல் நுனிகளில்
பனி மரங்கள்
கொட்டிய பனியின்
எச்சங்கள்
சில்லிடும் குளிர் பனி
சூரியக்கதிர் தீண்ட
மெல்ல கரைந்தது
மெதுவாய் மறைந்தது!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment