
Saturday, October 4, 2025
Friday, August 29, 2025
தூரமும்கரைந்தது...
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
நெல்லை அன்புடன் ஆனந்தி
Thursday, August 28, 2025
Sunday, July 6, 2025
கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!
கவிதையைப்
படித்திருந்தேன்
கண்களுக்குள்
நீ விரிந்தாய்..
வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..
காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்குள்
நீ கசிந்தாய்..!
#நெல்லை அன்புடன் ஆனந்தி
Monday, June 30, 2025
நூல் வெளியீடு - விஜய் ஆனந்த் - வாழ்த்து
Join the writer Nellai Anbudan Ananthi 's Books Release Function to be held day after tomorrow by 10 AM @ Tamil Virtual Academy, Kottur, Chennai
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா நாளை மறுநாள்.
வாருங்கள்; வாழ்த்துங்கள்!
உலகக் கவிதை நாள் கவிதை - நெல்லை அன்புடன் ஆனந்தி - அன்புப்பாலம்
உலகக் கவிதை நாளில் மார்ச் மாத *அன்புப் பாலம்* இதழில் எனது கவிதை...
நன்றி ஆசிரியர் குழு
@விஜய் ஆனந்த்
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
நெல்லை அன்புடன் ஆனந்தி - நூல் வெளியீடு, அன்புப்பாலம் செய்தி
அன்புப்பாலம் இதழின் விழா உலாப் பகுதியில் மார்ச் 16 2025 ல் நடைபெற்ற எனது 11 நூல்கள் வெளியீட்டுச் செய்தி...
ஆசிரியர் குழுவிற்கும் அன்பு நண்பர் Vijay Anand அவர்களுக்கும் நன்றி.
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
தும்பியின் தூறல்கள், அன்புப்பாலம், நூல் விமர்சனம்
தற்கால இலக்கியமான லிமரைக்கூ கவிதைகளை கல்வெட்டு #தமிழியில் பதிவிட்டோம்.
நூலேணி பதிப்பகம் Nooleni publications பதிப்பித்த இந்நூல் ஹைக்கூ இலக்கியத்தில் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் கல்வெட்டு லிமரைக்கூ நூல் என்ற பெருமையைத் தந்தது.
இந்த ஆண்டு புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நடத்திய 16 ஆம் ஆண்டு இலக்கியப் போட்டியில் #முதல்பரிசு பெற்றது.
நூலாசிரியர் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி Nellai Anbudan Ananthi அவர்களுக்கும்
நூலேணியின் நல்வாழ்த்துகள்
Saturday, June 21, 2025
வழிமேல் மலர் வைத்து..
வழிமேல் மலர் வைத்து
வரவேற்பு தந்தவளே..
புன்னகைக்கப் பூக்கிறாய்
பூரிப்பில் உதிர்கிறாய்..
கண்ணசைவில் விழுகிறாய்
கை தொடக் கரைகிறாய்
விரல் தீண்டிப் பார்க்கவோ
தரை தொடுகிறாய்..
விண்ணுயர்ந்த நெடு மரமாய்
விழாக்காணும் பூச்சரமாய்
மண்ணிலே புரள்கிறாய்..
மனதிற்குள் எழுகிறாய்!
என்னவளே..
எனக்காகக் பார்த்திருந்தாயா
மலர் தூவிக் காத்திருந்தாயா?!
✍️ *நெல்லை அன்புடன் ஆனந்தி*
Photos by: @nellaianbudanananthi
விரிகின்ற வேளை..
விரிகின்ற வேளையின்
விமரிசையோ?!
விதைக்கின்ற இன்பத்தின்
முகவரியோ?!
✍️ *நெல்லை அன்புடன் ஆனந்தி*
Photo by: @umaramalingam
இதழ்களின் சிவப்பில்
இதழ்களின்
சிவப்பில்
என்னைத்
தொலைக்கிறேன்
எழுதிட
வேண்டுமென்றே
நித்தமும்
தவிக்கிறேன்!
✍️ *நெல்லை அன்புடன் ஆனந்தி*
Photo by: @umaramalingam
பூவுக்குள் புன்னகை
பூவுக்குள் புன்னகை கண்டேன்
பூரிப்பில் ஆனந்தம் கொண்டேன்
வேருக்குள் விருட்சம் கண்டேன்
வேதனைகள் வீழக் கண்டேன்!
✍️ *நெல்லை அன்புடன் ஆனந்தி*
Photo by: @umaramalingam
Thursday, June 19, 2025
பட்டினப்பாலை - பாகம் 1
பட்டினப்பாலை - 1
https://youtu.be/rsCZg1X-MFI?si=kXr4u8JhpsCA3y3l
பட்டினப்பாலை Playlist
பத்துப்பாட்டு
பட்டினப்பாலை
https://youtube.com/playlist?list=PLIxPEaAHQi09pBMhSOb-l0PxjigJHqlx5&si=Eru58rNrtvlYKlqw
Monday, May 26, 2025
தூறல் துளியாய்
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
Thursday, May 22, 2025
இலை நழுவவிட்ட துளிகள்
மழை விட்ட நேரம்
மரக்கிளைகளில்
அங்கங்கே
மழைத்துளிகள்
விளையாடின
நகர்ந்த காற்று
சற்றே அவற்றை
நாட்டியம் ஆடச் செய்தது
இலை நழுவவிட்ட துளிகள்
தரையைத் தொட்டது
தரை தொட்ட துளிகள்
பூமியின் தாகம் தீர்த்தது
நிலத்தடி மண்புழுக்கள்
மெதுவாய் வெளிவந்து
மேகம் பார்த்தது
இரைக்குக் காத்திருந்த
பறவை ஒன்று
இதை இதமாய்ப் பார்த்தது
நொடிப்பொழுதில்
தரையிறங்கி
மண்புழுவைக்
கொத்தத் தொடங்கியது
விடுவித்துக் கொள்ள
மண்புழுவும்
விதவிதமாய்
முயற்சி செய்தது
பாவம் புழு என நினைத்தே
பாய்ந்து பறவையை
விரட்டினேன்
வேகமாய்ப் பறந்து
வெகு அருகில்
மரத்தில் அமர்ந்தது
அமர்ந்த பறவை
எங்கும் போகவில்லை
அசையாது
பார்த்துக் கொண்டிருந்தது
சற்றே மணல் நோண்டி
மண்புழுவை
பத்திரமாய்ப்
பதுக்கி வைத்தேன்
திருப்தியுடன்
திரும்பிய கணத்தில்
திடீரெனப் பாய்ந்து
தரையிறங்கியது
அந்தப் பறவை
எங்கு வைத்தேன் என்று
எப்படி அறிந்தது?!
எனக்குத் தெரியவில்லை
சரியான இடத்தில்
கொத்தித் தோண்டி
மண்புழுவை வாயில்
கவ்விக்கொண்டு
வானை நோக்கிப்
பறந்தது
இயற்கையின்
இயக்கத்தை
யார் தான்
நிறுத்த முடியும்?
அவரவர் வாழ்வை
அவர்களே தான்
வாழ்ந்தாக வேண்டும்
பெரிதாய் ஏக்கப்
பெருமூச்சு விட்டபடி
வீட்டிற்குள் சென்றேன்
நானும்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
மே 21, 2025
Friday, May 9, 2025
Saturday, April 19, 2025
என்னவளே...அடி...என்னவளே...
அத்தனை அழகையும்






மொத்தமாய்க் கொண்டவள்
நித்தமும் என்னையே
நீங்காது வெல்பவள்!
நெல்லை அன்புடன் ஆனந்தி