topbella

Saturday, January 14, 2012

மங்கலமாய் பொங்கல்...!

மஞ்சள் கிழங்கு கட்டி
மங்கலமாய் பொட்டும் வைத்து..
திங்கள் வெளிவரும் முன்..
திகட்டும் பொங்கல் வைத்தே...

தலை வாழை இலை விரித்து..
தனித்தனியாய் வகை பிரித்து..
பழங்களுடன் காய்கறிகள்
பாங்காய் அடுக்கி வைத்து...

அதிகாலை சூரியனும்..
அடி எழும்பி வருமுன்னே..
அவனுக்கு படையல் வைத்து
அதிலே சிறிதெடுத்து...

காக்கைக்கு வைத்து விட்டு
கட்டிக் கரும்பை கடித்து கொண்டு
அம்மாவின் கைச்சமையலை..
அணு அணுவாய் ரசித்தே உண்டு

தொலைகாட்சி பெட்டியில்
தொடர்ந்து வரும் நிகழ்ச்சி கண்டு
அக்கம் பக்கம் வீடு சென்று
அங்கே சிறிது பொங்கல் உண்டு..

ஆதவன் மறையும் வரை
ஆத்மார்த்தமான கொண்டாட்டம்
அதுவும் முடிந்து உறங்கி
அடுத்த நாளைக்கு எடு ஓட்டம்..!


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!

~அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

12 comments:

Unknown said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

Prem S said...

பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே

Unknown said...

இனிய தமிழர் தின நல் வாழ்த்துக்கள் http://en-iniyaillam.blogspot.com/

Paru said...

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பாட்டாகவே சொல்லிட்டிங்க
இடையில் மானே தேனே போடனும் ல ல லா ல ல

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!

Vijaya Vellaichamy said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! இனிப்பான கவிதை!

Vijaya Vellaichamy said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! இனிப்பான கவிதை!

Admin said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

அன்புடன் நான் said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

அருமையான வரியகள் சகோ ... நான் படிக்கவில்லை பாடினேன்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Sanjay said...

திங்கள் வெளிவரும் முன்..
திகட்டும் பொங்கல் வைத்தே...

தலை வாழை இலை விரித்து..
தனித்தனியாய் வகை பிரித்து..//

SUPER..!!

அதுவும் முடிந்து உறங்கி
அடுத்த நாளைக்கு எடு ஓட்டம்..!//

ARUMAIYYAA ARUME...!!

Nandhini said...

அருமையான பொங்கல் கவிதை ....வாழ்த்துக்கள் ஆனந்தி....

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)