50 வயதுக்கு மேல் வரும் கால் வலி, உடல் சோர்வு நீங்க அவசியம் பார்க்கவும்
காலை எழுந்ததும் காலை ஊன்றும் போது வலிக்கிறதா?
ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டு எழும் போது மூட்டு வலிக்கிறதா?
இரவில் உறக்கத்தில் கால் தசை இழுக்கிறதா?
40+ ல் வரும் குதிங்கால் வலி, மூட்டுவலி, உடல் தளர்ச்சி, சோர்வுகள் நீங்க அவசியம் செய்ய வேண்டியவை.
உணவுப் பொருட்கள்:
1. வறுத்த வேர்க்கடலை, வெல்லம் (தினமும் ஒரு கைப்பிடி, மென்று சாப்பிடவும்)
2. மக்கானா (ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடவும்)
3. ராகி ரொட்டி, ராகி தோசை, ராகி கூழ் (வாரம் 3 முறை)
4. முருங்கை இலை, முருங்கைக்காய் (குழம்பு, பொரியல் சாப்பிடலாம். அதைவிட நல்லது முருங்கை இலை, காய்களை வேகவைத்து உப்பு மசாலா சேர்த்து சூப்பாக குடிக்கலாம்)
5. வால் நட், பாதாம் (தினமும் இரவு படுக்குமுன் 2 வால் நட் + 4 பாதாம் ஊறவைத்து, காலையில் தோல் நீக்கி மென்று விழுதாக்கி சாப்பிடவும்)
6. பசும் நெய் (தினமும் ஒரு சிறு கரண்டி நெய்யை சமைத்த உணவின் மேல் ஊற்றி சாப்பிடவும்)
7. மஞ்சள் பால் (தினமும் இரவு படுக்குமுன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், ஒரு சிறு இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்)
8. பேரீச்சம்பழம் (2 மட்டும் பாலில் கொதிக்க வைத்து குடித்து, பழத்தை மென்று சாப்பிடவும், அல்லது அப்படியே மென்று சாப்பிடவும்)
தினமும் செய்யவேண்டியவை:
1. மிதமான காலைச் சூரியனில் 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்
2. தினமும் உடற்பயிற்சி காலை, மாலை 15 நிமிடங்கள்
3. தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்


0 comments:
Post a Comment