அன்னை தந்தை பாசம் பெற்று
அறுசுவை உணவும் பெற்று
அடைக்கலமாய் இடமும் கிடைத்து
அணிவதற்கு நல்லாடை அமைந்து
அவனியில் எத்தனை பேர் உள்ளனர்?
இவையனைத்தும் இயல்பாய்
இலகுவாய் பெற்ற பலர்
இறுமாப்புடன் அருமை தெரியாது
அலட்சியமாய் அனுபவித்தே
அவர் வாழ்வு வாழ்கின்றார்...
அனைத்தும் படைத்த ஆண்டவா
படைக்கும்போதே பாகுபாடு எதற்கு?
அளவற்ற செல்வம் ஓரிடத்தே
அன்றாட வாழ்வை அசைக்கவே
படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும்
பல பேர்கள் பேரிடத்தே...!
புத்தாண்டு பொலிவுடன் சிறக்க
புறவேற்றுமை ஒழிய வேண்டும்
அரசியலை மட்டும் அண்டாது
ஆண்டவனை மட்டுமே நம்பாது
அவரவர் அறிவினை நம்பி
அயராது உழைத்து
அரியாசனம் ஏறவேண்டும்
எரிமலைகள் எம் தேசத்தில்
எங்கும் எரியும் ஏழ்மைத் தீயும்..
எதையும் செய்யத் தூண்டும்
பதவிப் பேயும் எட்டி ஓடவே
இளைஞர் சமுதாயமே
இந்நேர நிலையுணர்ந்து
எடுக்கும் முயற்சியை
ஏற்றமுறச் செய்தே
எதிர்கால இந்தியாவை
இமயம் அடையச் செய்வீர்....!
எவரேனும் வந்து
ஏதேனும் புரட்சி செய்து..
எம் வாழ்வு செழிக்கச்
செய்ய வல்லாரோ
என்றெண்ணியே....
ஏமாற்றம் அடையாது
அவரவர் சக்திக்கு
ஆக்க முடிந்ததை
அக்கறையாய் செய்தே
அகிலம் காப்போம்!
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
14 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
:-)
நன்றி.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :)
தங்கள் எண்ணமும் எழுத்தும் இந்த புத்தாண்டு முதல் உயிர் பெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
புத்தாண்டு சிறப்புப் பதிவு அருமை
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 3
என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ரைட்டு...
கவிதைக்கு ஒரு சபாஷ்...
மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... :)))
விடியல் வரும் என்று காத்திராமல்
விடியலை படைப்போம்..
மகிழ்வோம்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அழகிய கவிதை ..
@விஜி
ரொம்ப சந்தோசம் விஜி.. தேங்க்ஸ். :)
@ரமணி
மிக்க நன்றி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)
@மகேந்திரன்
ரொம்ப நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)
@கவிதை வீதி சௌந்தர்
கருத்துக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள். :)
@சௌந்தர்
தேங்க்ஸ் சௌந்தர்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)
@சூர்யாஜீவா
மிக்க நன்றி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)
@சசிகலா
ரொம்ப நன்றி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)
@ஜெய்லானி
ரொம்ப நன்றி ஜெய். உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)
@என் ராஜபாட்டை ராஜா
மிக்க நன்றி. வருகைக்கும் நன்றி. :)
Post a Comment