
Sunday, February 8, 2026
Thursday, February 5, 2026
கதை அரும்புகள் - விரைவில்...
விரைவில்...
#லாலிபாப்_சிறுவர்_உலக_பதிப்பகம்
பதிப்பித்து வெளிவரும்..
#பன்னாட்டு_மாணவர்களின்_சிறார்_கதைகள் நூல்
நூலின் பெயர்:
கதை அரும்புகள்
நூலின் விலை: ₹130
நூலைப்பெற: 9841236965
தங்கள் இல்ல நூலகங்களில் இணைத்திட, சிறந்த நூல்.
நெல்லை அன்புடன் ஆனந்தி
---------
அன்னைத் தமிழுக்கு முதல் வணக்கம்! கொரொனா காலத்தில் தொடங்கப்பட்டு இன்று வரை குழந்தைகளுக்காகச் சிறப்பாக இயங்கி வரும் லாலிபாப் சிறுவர் உலக அமைப்பின் நிறுவனர் திரு. கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதைகள் என்றாலே நம் அனைவருக்கும் அலாதிப் பிரியம் தான். யாருக்குத்தான் கதை கேட்பது பிடிக்காது?
அதுவும் ஆர்வத்தைத் தூண்டும் படியாக ஏதேனும் கதைகள் சொல்லி விட்டால், அடுத்து என்ன? என்ன? என்று நம்மை மற்ற வேலைகள் எதையும் செய்ய முடியாத படிக்கு அதிலேயே நம் சிந்தனைகளை சுழற்றி விட்டு விடும்.
பொதுவாக வீட்டில் பெரியவர்கள் சிறுவர்களுக்குக் கதைகள் சொல்வதுண்டு. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் நமக்குக் கதை சொல்லும் அளவிற்கு சிறந்த கதை சொல்லிகளாக, கதாசிரியர்களாக வளர்ந்து வருவது நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது.
லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், கதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறை, விடுகதைகள், பன்முகத் திறமைகளை வெளிக்கொணர்தல் எனப் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற பல குழந்தைகள் தனி நூல்கள் பல வெளியிட்டும் இருக்கிறார்கள்.
லாலிபாப் சிறுவர் உலகத்தில் தொடர்ந்து பயணிக்கக்கூடிய பன்னாட்டுக் குழந்தைகள் 17 பேர் எழுதி “கதை அரும்புகள்” என்ற பெயரில் இந்நூல் வெளிவருகிறது.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” (குறள்:69)
என்று வள்ளுவம் சொல்வது போல நாம் கதை சொல்லிக் கேட்ட குழந்தைகள் இன்று அவர்களே கதைகள் எழுதி ஒரு கதாசிரியராக வளர்ந்து நிற்பது நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.
ஒரு கதையைக் கேட்பவர்கள் ரசிக்கும் படியாக எழுதுவதற்கு நல்ல சிந்தனை ஓட்டம் வேண்டும். நம் சிந்தனை சக்தியைத் தூண்டுவதற்கும், விரிவடையச் செய்வதற்கும் கதை எழுதுதல் ஒரு நல்ல பயிற்சியாக அமையும்.
அப்பயிற்சியை திறமையாகக் கையாண்டு கதைகள் படைத்திருக்கிற 17 பிள்ளைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கதை நூல், நூலைப் படிக்கும் மற்ற குழந்தைகளிடமும் கதை எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கதைகளைப் படித்து இக்குழந்தைகளுக்கு தங்கள் வாழ்த்தையும் கருத்தையும் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்நூலை திறம்பட வடிவமைத்து பதிப்பித்திருக்கும் லாலிபாப் சிறுவர் உலக பதிப்பகத்திற்கு மனமகிழ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க செந்தமிழ்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
#newkidsstrorybook
#KathaiArumbugal
Lollipop Children's world
Sunday, February 1, 2026
கவிச்சிறகுகள் - ஜனவரி 2026 இதழ்
அனைவருக்கும் இனிய வணக்கம்!
*ஜனவரி 2026 கவிச்சிறகுகள் இதழ்*
அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
*கவிச்சிறகுகள்* ஜனவரி 2026 இதழை மகிழ்வோடு பகிர்கிறோம்.
ஆசிரியர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அமெரிக்கா
துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா சென்னை
*ஜனவரி 2026 இதழ் வாசிக்க...*
(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)
Flip book link:
இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அடுத்த இதழில் பங்கு பெற:
- ஆசிரியர் குழு
Subscribe to:
Posts (Atom)
