topbella

Saturday, April 19, 2025

என்னவளே...அடி...என்னவளே...

அத்தனை அழகையும்
மொத்தமாய்க் கொண்டவள்
நித்தமும் என்னையே
நீங்காது வெல்பவள்!

நெல்லை அன்புடன் ஆனந்தி


Thursday, April 17, 2025

உலக ஹைக்கூ கவிதை நாள் 2025

#உலக_ஹைக்கூ_கவிதை_நாள்_வாழ்த்துகள்

உலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் ஜப்பானில் ஹைக்கூ தந்தை பாஷோவின் காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஹைக்கூ இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்ரியு கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன. 1984 முதல் 2025 வரை சுமார் 800க்கும் மேற்பட்ட நூல்கள் வந்துள்ளன என ஆய்வு சொல்கின்றது.

இதுவரை ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவங்களில் வெளிவந்த எனது நூல்களைப் பகிர்வதில் பெருமை கொள்கிறேன். 

நூல்களைப் பதிப்பித்த நூலேணி பதிப்பகம் Nooleni publications மற்றும் உரிமையாளர் #கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு மனமகிழ் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#தும்பியின்_தூறல்கள் 2024
(அமெரிக்காவில் இருந்து வெளிவந்த்
 முதல் தமிழ் - தமிழி லிமரைக்கூ நூல். இந்நூல் புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்திய 16-ஆம் ஆண்டு விழாவில் முதல் பரிசை வென்றது)

#ஒற்றை_மரக்காகம் 2024
(அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் தமிழ் ஹைக்கூ நூல்)

#நெல்லையப்பர்_வீதி 2024 (லிமரைக்கூ) 

#மௌன_புத்தன் 2025
(அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் தமிழ் படுகு மொழிபெயர்ப்பு நூல்)

#அடைமழைக்குள்_தனிக்குடை 2024
(அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் தமிழ் கன்னட மொழிபெயர்ப்பு நூல்)

ஹைக்கூ பயணம் இன்னும் தொடரும்...

தொடர்ந்து ஹைக்கூ எழுதி வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி 
ஏப்ரல் 17. 2025

https://www.facebook.com/share/p/1EUagYzVfj/

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)