
Thursday, November 6, 2025
அவளின் இனிய உலா
பேருந்து நிறுத்தத்தில்
பெரிய திருவிழா
இருக்கையை அழகாக்கிய
அவளின் இனிய உலா
மெதுவாய் ஊர்ந்தபடி
நிறுத்தத்திற்கு வந்தது
ஜன்னல் கம்பிகள் வழியாய்
துழாவிய அவள் விழிகள்
அதைத் துரத்தியபடி
என் விழிகள்
சட்டென்று மோதியது
சந்தித்தது ஒரு கணமே
இதயத்திற்குள் இம்சித்து
இனிதாய் வருடிய
ஒரு நிமிடச் சாரல்
உள்ளம் உரசி நின்றது
அவளுடன் பேருந்து நகர்ந்தது!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
Subscribe to:
Comments (Atom)
