topbella

Saturday, March 20, 2010

கண்ணாமூச்சி ஏனடா.....!


உன்னருகில் நானிருக்க
என் மனமோ தவிக்கிறதே...
உன் நினைவில் இருந்ததனால்
என் நினைவும் மறந்ததடா..
கண்களை மூடினேன் கனவு வந்தது...
அட கனவு தானே என்றிருந்தேன்..
கண்ணெதிரே நீயும் வந்தாய்...
கண்ணெதிரே வந்தவனை
கையணைக்க நான் துடிக்க
கனவே தான் என்று சொல்லி
கண்முன்னே மறைந்ததேனோ?
உனதுயிரில் எனதுயிரும்
ஒன்றெனவே கலந்ததுபோல்
எனை நீங்கிப் பிரியாமல்
என்னோடே இருப்பாயா?
உன்னிடம் ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்வாயா??
உனக்குள் தொலைந்த என்னை
உயிராய் நீ காப்பாயா??
... அன்புடன் ஆனந்தி

20 comments:

Chitra said...

காதலில் அப்படியே உருகி போய் விட்டீர்களே........!!!!

படமும் அருமை, அழகு.........!

எல் கே said...

மிக அருமை...

Aparna Sriram said...

Super ananthi! kavithai arumai!

Sanjay said...

கண்ணெதிரே வந்தவனை
கையணைக்க நான் துடிக்க
கனவே தான் என்று சொல்லி
கண்முன்னே மறைந்ததேனோ?

அழகிய வரிகள்.....வாழ்த்துக்கள் :-)


ராதையை பார்த்து கண்ணன் இப்படி பாடி இருப்பாரோ??

தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா
தவிக்குது மனசு தவிக்குது.. :P :D :D

ISR Selvakumar said...

தங்கை ஆனந்தி,
வரிகள் ஒரு புறம் அசத்தினால், அதற்கு உகந்த படம் இன்னொரு புறம் அசத்துகிறது.

கலக்கல்!

கருணையூரான் said...

/// உன்னிடம் ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்வாயா??
உனக்குள் தொலைந்த என்னை
உயிராய் நீ காப்பாயா??///
காதல் காதல் காதல்.......
வாழ்த்துக்கள்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா, கார்த்திக், அபர்ணா, சஞ்சய், செல்வா அண்ணா, கருணையூரான்,

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...
என்னை மேலும் எழுத உற்சாகப்படுத்தியதற்கு நன்றி..

@சஞ்சய்,
பாடினாலும் பாடியிருக்கலாம்... மாடர்ன் கிருஷ்ணா தானே... :P :P

Priya Venkat said...

கவிதை மிகவும் அருமை !!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நன்றி..பிரியா.

அண்ணாமலையான் said...

ஆஹா

கவி அழகன் said...

தரமான கவிதை

'பரிவை' சே.குமார் said...

விதை அழகு.

அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் படம்.

அருமை.

'பரிவை' சே.குமார் said...

தங்கள் கவிதை அழகு.

அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் படமும் நன்று.

உங்கள் வரிகள் தேன்.
மொத்தத்தில் அருமையான கவிதை.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலையான், யாதவன், சே. குமார்,

உங்கள் ஆதரவிற்கு நன்றி.. :)

R.Gopi said...

//கண்ணெதிரே வந்தவனை
கையணைக்க நான் துடிக்க
கனவே தான் என்று சொல்லி
கண்முன்னே மறைந்ததேனோ?//

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Thenammai Lakshmanan said...

அருமை ஆனந்தி

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேன்அக்கா..

ரொம்ப நன்றி அக்கா.. :)

Ahamed irshad said...

காதல் கவிதை அழகு.... வாழ்த்துக்கள் ஆனந்தி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@R .கோபி

ரொம்ப நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ அஹமது இர்ஷாத்

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)