topbella

Monday, September 10, 2012

காத்திருப்பு...!



கவிதையே என்னை
காதல் செய்ய
கண்மூடி நேசிக்கிறேன்...

உன் வரிகளை
புரட்டிப் பார்த்தே
உன் வார்த்தைகளில் 
வசந்தமாய் வசிக்கிறேன்...

அரைக் கணத்தில்
ஆயிரம் கவிதை செய்தே
அங்கங்கே எனை
ஆளுமை செய்தே
ஆட்கொண்டாயே அன்பே...

உன் நினைவுகளில்
என் நிமிடங்கள் கரைய
நெஞ்சுக்குள் நீ ஒரு
கவிதை வரைய
கண்ணா உன் வருகைக்காய்
என் காத்திருப்பு...!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

9 comments:

Unknown said...

"உன் நினைவுகளில்
என் நிமிடங்கள் கரைய
நெஞ்சுக்குள் நீ ஒரு
கவிதை வரைய" நினைவுகளுடன் காத்திருப்பதில்தான் எத்தனை சுகம்!

அம்பாளடியாள் said...

அரைக் கணத்தில்
ஆயிரம் கவிதை செய்தே
அங்கங்கே எனை
ஆளுமை செய்தே
ஆட்கொண்டாயே அன்பே...

சிறப்பான வரிகள் தொடர வாழ்த்துக்கள்
தோழி !.....

கவி அழகன் said...

Sirappana kavithai

செய்தாலி said...

ம்ம்ம் ..அஹா
வரியும் சொல்லாக்கமும் அழகு தோழி

Vijaya Vellaichamy said...

ரசனை மிகுந்த கவிதை!

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை சகோதரி...

மாதம் ஒன்று என்ற கணக்கா என்ன நிறைய எழுதுங்கள்...

நம்ம பக்கமெல்லாம் வந்து நீண்ட நாளாச்சு... மறந்திட்டிங்களா?

இந்திரா said...

last para super
:-)

MARI The Great said...

சூப்பர்! :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@வியபதி
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.


@அம்பாளடியாள்
தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி.


@கவி அழகன்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.



@செய்தாலி
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.



@விஜி
ரொம்ப நன்றி விஜி. ;)



@சே. குமார்
மிக்க நன்றி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வருகிறேன்.



@இந்திரா
ரொம்ப நன்றி இந்திரா. :)



@வரலாற்று சுவடுகள்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)