அழகன் உன் கை கோர்த்து
அருகருகே நடந்து வந்து
அடுக்கடுக்கான படிகளில்
அம்சமாய் அருகில் அமர்ந்து
அன்பன் உன் தோளில் சாய்ந்தேன்
கொளுத்தும் வெயிலில் கூட
கொண்டவன் உன் கூட இருந்தால்..
குளிர் நிலவின் குளுமை
என்னைக் கூடியே ஆளும்...
எனைப்பற்றி நீ எல்லாமறிய
அடுக்கடுக்காய் பேசிச் சென்றேன்..
அமைதியாய் கேட்டு வந்தே
அழுத்தமாய் என் கைகள் பற்றினாய்..
பற்றிய உன் கை பிடித்தே
பலப் பல கனவுகள் சொன்னேன்..
பதறாமல் நீயும் என் கவனம்
சிதறாது எல்லாம் சேகரித்தாய்..
எத்தனை நேரம்
என்னுடன் நீ இருந்தும்...
எதார்த்தமாய் என்னால்
விடை சொல்ல இயலவில்லை..
படரும் என் எண்ண ஓட்டத்தில்
தொடரும் இந்தப் போராட்டம்...!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
19 comments:
நன்று தொடரட்டும்
அருமையான கவிதை
இனிதே தொடர வாழ்த்துக்கள்
கொளுத்தும் வெயிலில் கூட
கொண்டவன் உன் கூட இருந்தால்..
குளிர் நிலவின் குளுமை
என்னைக் கூடியே ஆளும்...////
கொண்டவன் பக்கத்துல இருந்தா அப்பா, அம்மா கூட கண்ணுக்குத் தெரியாதுங்கோ.....
"கொளுத்தும் வெயிலில் கூட
கொண்டவன் உன் கூட இருந்தால்.. குளிர் நிலவின் குளுமை
என்னைக் கூடியே ஆளும்..."
அருமையான வரிகள்....தொடரட்டும் உங்கள் எழுத்து...வாழ்த்துக்கள் ....
ஒரு நல்ல காதல் கவிதை!
அருமை.
வாழ்த்துகள்.
//எத்தனை நேரம்
என்னுடன் நீ இருந்தும்...
எதார்த்தமாய் என்னால்
விடை சொல்ல இயலவில்லை..
படரும் என் எண்ண ஓட்டத்தில்
தொடரும் இந்தப் போராட்டம்...!//
அருமையான உணர்வுபூர்வ வரிகள் அக்கா.வாழ்த்துக்கள்.
அழகன் உன் கை கோர்த்து
அருகருகே நடந்து வந்து
அடுக்கடுக்கான படிகளில்
அம்சமாய் அருகில் அமர்ந்து
அன்பன் உன் தோளில் சாய்ந்தேன்///
லிப்ட் வொர்க் பண்ணலையா..???
லிப்ட் சர்விஸ் போன்நம்பர் 123456789 உடனே தொடர்பு கொள்க...
கொளுத்தும் வெயிலில் கூட
கொண்டவன் உன் கூட இருந்தால்..
குளிர் நிலவின் குளுமை
என்னைக் கூடியே ஆளும்...///
அப்போ A/C யும் தேவையில்லையா... இப்படி பண்ணா எப்படி பொழப்ப ஓட்டுறது...
யார்ப்பா அது கைல கிடைச்சா அம்புட்டு தான் :)
எத்தனை நேரம்
என்னுடன் நீ இருந்தும்...
எதார்த்தமாய் என்னால்
விடை சொல்ல இயலவில்லை..
படரும் என் எண்ண ஓட்டத்தில்
தொடரும் இந்தப் போராட்டம்...!///
விடை சொல்ற பழக்கம் தான் உங்களுக்கு ஸ்கூல் படிக்கும் போது இருந்தே இல்லையே.. இப்போ ஏன் வருத்தப்படுறீங்க..??
கவிதை நல்லா இருக்கு... உங்கள எல்லாம் பார்த்து தான் நான் கவிதை எழுத ஆரம்பிச்சேன் :)
அருமை தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
படரும் என் எண்ண ஓட்டத்தில்
தொடரும் இந்தப் போராட்டம்...!
அழகான என்னப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
நல்லாயிருக்கு ஆனந்தி.தொடர்ந்து பதிவிடுங்கள்.
simply superb...;)
அருமையான வரிகள்
Good one - Venkat
www.hellovenki.blogspot.com
ஆக, அருகில் இல்லாத போது தோன்றும் எண்ணங்கள் அருகில் வந்ததும் பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ என்று ஆகி விடுகிறது என்கிறீர்கள்!
@மனசாட்சி
மிக்க நன்றி :)
@Ana Kavya
தேங்க்ஸ் ஷோபி.! :)
@சசிகலா
ரொம்ப நன்றிங்க :)
@தமிழ்வாசி பிரகாஷ்
ஹா ஹா... உண்மை தான்.
கருத்துக்கு நன்றி :)
@நந்தினி..
தேங்க்ஸ் டா... ;)
@விஜி
தேங்க்ஸ் விஜி ;)
@ரத்னவேல்
மிக்க நன்றி ஐயா. :)
@சித்தாரா மகேஷ்
ரொம்ப நன்றி மகேஷ்.. :)
@சௌந்தர்
ஹா ஹா.... நினச்சேன்..! :)
ரொம்ப தேங்க்ஸ் சௌந்தர்.
@பட்டி காட்டு தம்பி
மிக்க நன்றி :)
@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நன்றிங்க. :)
@ஆசியா ஒமர்
ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா செய்றேன். :)
@அப்பாவி தங்கமணி
ரொம்ப தேங்க்ஸ்.. புவனா. :)
@பாரு
தேங்க்ஸ் டா.... ;)
@வெங்கட்
மிக்க நன்றி! :)
@ஸ்ரீராம்
ஹ்ம்ம்.. அதுவே தான்....!
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. :)
Post a Comment