வருவாய் வருவாய் என்றே
வக்கணையாய் ஏற்பாடுகள்..
வந்தாய் நீயும் வந்த சுவடே
பார்ப்பதற்குத் தெரியாமல்..
வரும் வேளைகளில்..
சாலை எங்கும் சரமாரியாய்
உப்பை வாரி இறைத்தும்
உன் மழுமழுப்பில்
உற்சாகமாய் செல்ல இயலாமல்
ஊரையே கலங்கச் செய்வாய்...
வெளியே வந்து வண்டியேறி
வேகமாயும் செல்ல இயலாது
வேடிக்கை காட்டவென்றே
வெட்டும் வெயிலிலும்
கட்டுக் குலையாமல்
கல் போன்றே காத்திருப்பாய்..
வாராது போனாலோ..
அரசிற்கோ வைப்புத் தொகை
ஆயிரமாயிரம் கணக்கில்
ஆண்டு முழுமைக்கும் மிச்சம்...
உனை நம்பி வாடிக்கையாய்
தொழில் செய்யும் மக்கட்கோ
நித்தம் கடத்துவதே
நீண்ட சுமையாகும் சொச்சம்..
வெண் பனியே
வெள்ளிச் சரமே.... உனை
வீட்டுக்குள் இருந்து கொண்டே
வேடிக்கை பார்ப்பதில்
வேட்கை சிலருக்கு...
புதுப்பனி வீழும் போது
புத்துணர்ச்சியோடு பனிப்
பொம்மை செய்யும் நிமிடமே
பாக்கியமாய் பலருக்கு...
இன்பமும் துன்பமும்
இரண்டற கலந்ததே
இவ்வுலக வாழ்வென்பதற்கு
இதை விட வேறென்ன
இனிய சான்று வேண்டும்...!!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
(படம்: கூகிள், நன்றி)
9 comments:
Azhagu Kavithai Sago. Thodarungal. Vaalthukkal!
சில் என்று ஒரு கவிதை! மனதின் உள்ளே குளிர்!
ரொம்ப அழகா ரசிச்சி எழுதி இருக்கிங்க ஆனந்தி... படமும் சூப்பர்!
ஜில்லுன்னு இருக்குப்பா.. படமும் ஜூப்பர் :-)
ரசனையோடு ரசித்து வார்த்துள்ளீர்கள் வரிகளை அருமை சகோ...
எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
புதுப்பனி வீழும் போது
புத்துணர்ச்சியோடு பனிப்
பொம்மை செய்யும் நிமிடமே
பாக்கியமாய் பலருக்கு...
பனிப்பூ கவிதை சிறப்பு.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வரும் வேளைகளில்..
சாலை எங்கும் சரமாரியாய்
உப்பை வாரி இறைத்தும்//
ATHU SARI, UPPU NU UNGALUKKU EPDI THERIYUM???!!!!!
ADIKKADI VILUNTHU VILUNTHU NERAYA SAPTTEENGALO???!!!! :D :D
Post a Comment