கோபமா என்கிறாய்..
உயிர்வலி என்னவென்று
உணர்ந்து கொண்டிருக்கும்
எனக்குள் என்ன.. கோபம்
எட்டிப் பார்க்கப் போகிறது..?
ஜென்ம பந்தம் இது
சேர்ந்த சொந்தம் இது
சொற்போரில் என்னை
சோதிக்க எண்ணினாய்..
மௌன யுத்தத்தில் உன்
மனதிற்குள் மறைந்து
நிறைந்து கொண்டேன்
சொல்லிப் புரியாது இது
சொர்க்கத்தில் முடிவானது..
அருகில் உனைக் கண்டால்
அலையடிக்கும் அடிமனதில்..
ஆயிரமாயிரம் சிந்தனைகள்
அளவில்லாது பாய்ந்தோடும்..
இன்பம் துன்பம் இரண்டும்
இமையளவில் இசைத்தே
இயன்ற வரை இச்ஜென்மம்
ஈடேற இக்கணம் துதித்தேன்...
எனக்கென்று எதுவும்
உன்னிடத்து கேட்டதில்லை
என்னாசை எதுவும் சொல்லாது
எதையும் நான் கேட்காது
எண்ணியது எல்லாம்
எவர் தடுத்தும் நில்லாது
எக்குறையும் இன்றி
எப்போதும் தரும் இறைவா
என்னவனை என்னிடத்து
எச்ஜென்மம் சேர்ப்பாய்...!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
7 comments:
//கோபமா என்கிறாய்..
உயிர்வலி என்னவென்று
உணர்ந்து கொண்டிருக்கும்
எனக்குள் என்ன.. கோபம்
எட்டிப் பார்க்கப் போகிறது..?//
உங்க கவி மூலம் உயிர்வலி என்னவென்று உணர்ந்து கொண்டேன் அக்கா.அருமை.
நன்றாக உண்ணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் ! அருமை!
எவர் தடுத்தும் நில்லாது
எக்குறையும் இன்றி
எப்போதும் தரும் இறைவா
என்னவனை என்னிடத்து
எச்ஜென்மம் சேர்ப்பாய்...!
உண்மையான வரிகள் தோழி என் வரமும் அதுவே
கோபமா எனக் கேட்ட ஒருவார்த்தை கொடுத்த கவிதை அருமை....
கவிதை உணர்வு பூர்வமா அருமையாயிருக்கு..
சூப்பர் ஆனந்தி!நன்றாக எழுதி இருக்கிறீர்கள்!
ஜென்ம பந்தம் இது
சேர்ந்த சொந்தம் இது
சொல்லிப் புரியாது இது
சொர்க்கத்தில் முடிவானது...
கவிதை கவிதை அருமை.
Post a Comment