topbella

Tuesday, February 1, 2011

மாப்பிள்ளை பெஞ்ச்...!

படிக்கும் காலங்களில் நடந்த நிகழ்வுகளை நிறைய பேர், எழுதி இருக்கீங்க... அதை எல்லாம் படிக்கும் போது, எனக்கு இந்த விஷயம் ஞாபகம் வந்தது..! படிக்கும் போது, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கிளாஸ்-ல எதாச்சும் வம்பு பண்ணி மாட்டுறது உண்டு....! கிளாஸ்-கு வெளில போய் நிக்க விட்டாங்கன்னா.. குஜாலா வெளில வந்து... காற்றோட்டமா நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க வேண்டியது... தெரிந்த மேடம் யாராச்சும் வந்தா மட்டும்... ரொம்ப அவசரமா.. மறைந்து நிக்க வேண்டியது... ஒரு ஸ்டுடென்ட்-க்கு இதெல்லாம் லட்சணம் இல்லியா? அதெல்லாம்  ஒழுங்கா கடைபிடிப்போம்.... நாங்க ரொம்ப சின்சியர் ஸ்டூடண்ட்ஸ்..! (நம்பணும்....போ போ.. உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா-ன்னு திட்ட கூடாது)

சரி ஓகே.. மேட்டர்-க்கு வாங்க.. மாப்பிள்ளை படம் ரிலீஸ் ஆகி இருந்தது... என்னோட பிரண்ட்ஸ் ஒரு ஆறு பேர் சேர்ந்து கிளாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போலாம்னு கூப்டாங்க... அது வரைக்கும், அப்படி கட் அடித்தது இல்லை.. அதனால கொஞ்சம் பயமா இருந்துச்சு... நா வரல... நீங்க போங்கன்னு சொல்லிட்டேன்... தலைவர் படம்.. செமையா இருக்கும்... முக்கியமான கிளாஸ் ஏதும் இல்ல சும்மா வான்னு ரொம்ப டெம்ப்ட் பண்ணாங்க.. எங்க கெமிஸ்ட்ரி மேடம், வேற லீவ் அன்னிக்கு.. அவங்க எங்க வீட்டு பக்கம், சரி அவங்களும் வரலன்னு... இன்னும் தைரியமா.... ஒரு வழியா கிளம்பிட்டோம்.

தியேட்டர்ல போயி... நல்ல இடமா பார்த்து.. செட்டப்பா.. உக்கார்ந்தாச்சு... படம் ஆரம்பம் முதல் இறுதி வரை... ரஜினி வரும் இடங்கள் எல்லாம் விசில் அடிச்சு... இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணியாச்சு.. அப்புறம், அவங்கவங்க வீட்டுக்கும் வந்து சேர்ந்தாச்சு... விதி வலியதுன்னு சொல்வாகளே... அது எனக்கு அடுத்த நாளே ரொம்ப நல்ல்ல்ல்லா புரிஞ்சது...!

மறுநாள், ஒண்ணுமே நடக்காதமாதிரி கிளாஸ்-ல போயி உக்கார்ந்தோம்.. ஹ்ம்ம் எல்லாம் நல்லாத் தான் போச்சு... கெமிஸ்ட்ரி கிளாஸ், வர வரைக்கும்...! மேடம் வந்ததும், ஏதோ, கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க.... திடீர்னு.... எங்களை கை காமிச்சு....மாப்பிள்ளை பெஞ்ச் எந்திருங்கன்னு சொல்லி... எங்கள எழுப்பி விட்டு.. "என்ன..?? படம் எல்லாம் பிடிச்சதா?? பாட்டெல்லாம் ஓகே தானான்னு கேட்டாங்க...!" அவ்ளோ தான்.. நாங்க எல்லாம், பேயறஞ்ச மாதிரி.... திரு திருன்னு ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம்... இவங்களுக்கு எப்படி தெரியும்ன்னு ஒரே டென்ஷன்.... அப்புறம் தான் மேட்டர் வெளில வந்தது... மேடம் லீவ் போட்டது, அவங்க கல்யாண நாளைக்காம்... அதனால அவங்களும், சார்-ம் மாப்பிள்ளை படம் பார்க்க வந்திருக்காங்க...  (அவ்வ்வ்வவ்வ்வ்வ்... லீவ் போட்டா எதுக்கு போடுறீங்க... எங்க போறீங்கன்னு விவரமா சொல்லப்பிடாதா??? ) அதுவும், எங்களுக்கு பின்னாடியே வேற, உக்கார்ந்து இருந்திருக்காங்க, நாங்க பண்ற கூத்தெல்லாம் பாத்துக்கிட்டு...!

அப்புறம் என்ன.........? ஸ்டார்ட் மூஜிக்க்க்க்க்... தான்.. நல்ல வாங்கி கட்டினோம்... கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?? னு கேட்டாங்க..  (அது இருந்தா... நாங்க ஏன் நீங்க வந்த தியேட்டர்-க்கு வரோம்.. அவ்வ்வ்வ்). நல்லா கேக்குறாங்க டீடைல்ஸ்ஸு...!). அப்புறம் மேடம் ஏதோ, பெரிய மனசு பண்ணி வெறுமனே.. திட்டிட்டு விட்டுட்டாங்க.. அதுல இருந்து, மாப்பிள்ளை பெஞ்ச் ஆகி போச்சு.... எங்க ஏரியா...!

பின்குறிப்பு: கிளாஸ் கட் அடிக்கிறது பெரிசு இல்ல, செட்டப்பா உக்காரும் முன்னாடி... முன்ன பின்ன,  யாரு இருக்காங்கன்னு பார்த்து உக்காரணும்..!!

சரி ஓகே.. நேரம் ஆச்சு.. போயி சமையல் பண்ற வேலைய பாக்குறேன்..
அப்போ நா வரட்டுங்களா...!  நீங்களும் சட்டு புட்டுன்னு கிளம்பி சாப்பிட வாங்க..!!





60 comments:

Sanjay said...

அவ்வ்வ்வவ்வ்வ்வ்... லீவ் போட்டா எதுக்கு போடுறீங்க... எங்க போறீங்கன்னு விவரமா சொல்லப்பிடாதா???
அதானே.....!!!!:D :D

கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?? னு கேட்டாங்க.. (அது இருந்தா... நாங்க ஏன் நீங்க வந்த தியேட்டர்-க்கு வரோம்.. அவ்வ்வ்வ்). நல்லா கேக்குறாங்க டீடைல்ஸ்ஸு...!).//
:D :D :D

SUPER EXPERIENCE!!!

போயி சமையல் பண்ற வேலைய பாக்குறேன்..//
பார்ரா...சமைக்கிராங்கலாமாம்..!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

(அது இருந்தா... நாங்க ஏன் நீங்க வந்த தியேட்டர்-க்கு வரோம்.. அவ்வ்வ்வ்). நல்லா கேக்குறாங்க டீடைல்ஸ்ஸு...!).


ஹி.... ஹி... இங்கேயும் காமெடி களை கட்டுது! பதிவு சூப்பருங்க! நீங்க சொன்ன மாதிரி கட்டடிச்சு படத்துக்கு போறது முக்கியமில்ல! பின்னாடி யாரு இருக்காங்கன்னு பாக்கணும் இல்லையா? சூப்பர்!

மதுரை சரவணன் said...

மாப்பிள்ளைப்பெஞ்சு கதை அருமை... சுவையாக உள்ளதால் சாப்பிட நாளை வருகிறேன்...வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

காலேஜ்ன்னாலே சுகமான நினைவுகள்தான் :-)))))

சீமான்கனி said...

ஆஹா...அடடா.....அட...அட....டா.....
:)))

புது வீடு நல்லாக்கு,,,,

அமுதா கிருஷ்ணா said...

நல்லா வேணும்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
உங்களுக்கு தெரிது.. எங்க மிஸ்-க்கு தெரியலயே.. :D
ரொம்ப தேங்க்ஸ்..
என்ன நக்கலா..? நல்ல சமைப்போமாக்கும்... :-))
தேங்க்ஸ் சஞ்சய்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@மாத்தி யோசி
வாங்க.. ஆமாங்க.. கரெக்ட் தான்..
நீங்க ரசித்து படித்து கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@மதுரை சரவணன்
ஹா ஹா.. கண்டிப்பா வாங்க.. கருத்துக்கு நன்றிங்க :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@அமைதிச்சாரல்
ஹி ஹி ஹி... காலேஜ் இல்லைங்க...
ஸ்கூல்-ல தான்... இந்த அனுபவம்... :-))
நன்றிங்க

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சீமான்கனி
வாங்க.. என்ன ஆச்சுங்க..? :-)
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@அமுதா கிருஷ்ணா
ஹா ஹா.. ரொம்ப நன்றி உங்க கருத்திற்கு :-)

ஆயிஷா said...

மாப்பிள்ளைப்பெஞ்சு கதை அருமை.

வாழ்த்துக்கள்.

Unknown said...

ஆகா ஸ்கூல்லயே ஆரம்பிச்சுட்டீங்களா? ஸ்ஸ்...ஸ..ப்பா! :-)

Priya said...

மாப்பிள்ளை பெஞ்ச்...இனிமையான நினைவுகள்!

Mythili (மைதிலி ) said...

schooleye class kattadikka arambichchaachaa... kizhinjuthu po.. appa nalla poruppaana pilla thaan. Ithai thaan namma valluvar "murpagal sinimaa paarppin pirpagal maattikkolveer" nu ezhithiyiruppaaro?? suvaarasyamaa irunthathu.

Nandhini said...

////லீவ் போட்டா எதுக்கு போடுறீங்க... எங்க போறீங்கன்னு விவரமா சொல்லப்பிடாதா?////


ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா...

நல்லா இருக்கு....அருமை...

Asiya Omar said...

நல்ல காமெடி & சுவாரசியம்.

Philosophy Prabhakaran said...

ஆஹா... நீங்க சரியான அராத்து பேர்வழியா... அதனாலதான் மீரா மல்லிகை அம்மையாரின் புகைப்படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கிறீர்களா... நீங்க சண்டக்கோழி படத்துல வர்ற மீரா மல்லிகை கேரக்டர் தானே...

அதுசரி, அந்த சமையல் செய்யும் பொம்மை அழகாக இருக்கிறதே... எங்கிருந்து எடுத்தீர்கள்.,...

sulthanonline said...

ஸ்கூல்லேயே இப்படின்னா! காலேஜ்ல எவ்வளவு அலப்பரய கொடுத்திருப்பிங்க. அரசியல்ல இதெல்லாம் சாதா(ரண)மப்பா..!

Anonymous said...

ரைட்டு! ”மாப்பிள்ளை பெஞ்சு”க்கு ஏத்த சம்பவம்! என்னா ஒரு ஒற்றுமை.. :)

சி.பி.செந்தில்குமார் said...

haa ஹா செம காமெடி.. மன்னன் படத்துல இதே மாதிரி ஒரு சீன் வரும்.

சௌந்தர் said...

! படிக்கும் போது, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கிளாஸ்-ல எதாச்சும் வம்பு பண்ணி மாட்டுறது உண்டு....! ////

இந்த நல்ல பழக்கம் அப்போ இருந்து இருக்கா வெரி குட்

தியேட்டர்ல போயி... நல்ல இடமா பார்த்து.. செட்டப்பா.. உக்கார்ந்தாச்சு... படம் ஆரம்பம் முதல் இறுதி வரை... ரஜினி வரும் இடங்கள் எல்லாம் விசில் அடிச்சு... இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணியாச்சு.. ///

இது எப்படினா சண்டகோழி படத்தில் மீராஜாஸ்மின் பண்ணுவாங்களே அந்த மாதரி தானே


பின்குறிப்பு: கிளாஸ் கட் அடிக்கிறது பெரிசு இல்ல, செட்டப்பா உக்காரும் முன்னாடி... முன்ன பின்ன, யாரு இருக்காங்கன்னு பார்த்து உக்காரணும்..!!///

உங்க பொண்ணுக்கு இதை படிச்சு காட்டுங்க ஓகே வா

சரி ஓகே.. நேரம் ஆச்சு.. போயி சமையல் பண்ற வேலைய பாக்குறேன்.////

எம்புட்டு நேரம் சமைக்குறாங்க...

அப்போ நா வரட்டுங்களா...! நீங்களும் சட்டு புட்டுன்னு கிளம்பி சாப்பிட வாங்க..!!////

ஏன் ஏன் ஏன் நல்லா தானே போயிட்டு இருந்தது ஏன் இப்படி திடீர் முடிவு இப்படி எல்லாம் செய்யபிடாது என்ன சரியா..?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாபிள்ள பெஞ்சுக்கு இருக்கிற மதிப்பே தனி தானே.... மூணு வருசமும் நாங்க மாப்பிளை பெஞ்ச் மன்னர்கள் தான்.. அதானால் கிளாஸ்ல எவன் தப்பு பண்ணினாலும் முதல்ல வெளிய போறது நாங்களா தான் இருக்கும்,.... அவ்வளவு நம்பிக்கை வாத்திகளுக்கு எங்க மேல...

நினைவுகளை கிளரும் நல்ல பதிவு..

சௌந்தர் said...

இந்த தலைப்பை பார்த்து நான் கூட உங்க மாப்பிளை கதை நினைத்தேன்....!

ஆமா இப்போதும் நீங்க உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு செய்றிங்களா...?

மாணவன் said...

//"மாப்பிள்ளை பெஞ்ச்...!//

நல்லாருக்குங்க சகோ...

அனுபவங்களை யாதார்த்தமாக சொல்லியிருக்கீங்க சூப்பர்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஆயிஷா
ரொம்ப நன்றிங்க.. :-)



@@ஜீ...
ஹா ஹா.. ஆமா..
கருத்துக்கு நன்றிங்க.. :)



@@Priya
எஸ்.. இப்ப நெனச்சாலும் ஹாப்பி தான்.. :-)
ரொம்ப நன்றி :)


@@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
ஹா ஹா ஹா.. எஸ் எஸ்..
ஹிஹி... ரொம்ப பொறுப்பு.. ;-)
செம செம.. என்ன ஒரு குறள் போங்க.. கலக்குறீங்க..
தேங்க்ஸ் மைதி..!! :-))



@@Nandhini
ஹா ஹா ஹா.. என்ன ஆச்சுடா...?? தேங்க்ஸ் :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@asiya omar
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@@Philosophy Prabhakaran
அச்சோ.. அப்படி எல்லாம் ரொம்ப மோசம் இல்லை.. :)
படிக்கும் காலத்தில் எல்லாரையும் போல், கொஞ்சம் வால்தனம் உண்டு.. அவ்ளோ தான்..
அந்த ஸ்மைலி ...கூகிள் உபயம் தான்..
நன்றிங்க.. :)


@@sulthanonline
ஹா ஹா ஹா.. அப்படி எல்லாம் திட்ட கூடாது..
கருத்துக்கு நன்றிங்க :)



@@Balaji saravana
ஹா ஹா ஹா.. நாங்க படம் பாத்துட்டு வந்த பிறகு தான், மாப்பிள்ளை பெஞ்ச் ஆச்சு.. :-)
நன்றிங்க


@@சி. பி. செந்தில்குமார்
எஸ்.. நானும் பார்த்திருக்கேன்.. நன்றிங்க :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்
ஹி ஹி.. எஸ் எஸ்.. ரெம்ப நல்ல பழக்கம்..... :-)
அவ்வ்வ்வ்..
ஏன் ஏன் இப்பிடி... படிச்சிட்டு சும்மா இருக்க முடியாதா??
அதெல்லாம் சமையல்னா கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்... :-))
ஹா ஹா ஹா... அப்படி எல்லாம் சொல்ல பிடாது.. நீங்க அவசியம் சாப்பிட்டு தான் போகணும்....!!

தேங்க்ஸ் சௌந்தர்.. :)

@@வெறும்பய
ஹா ஹா.. ஓ...அப்படியா...!
அது என்னவோ உண்மை தான்.. நம்பிக்கைக்கு உரிய பெஞ்ச்... :D
ரொம்ப சந்தோசங்க.. :-) நன்றி


@@சௌந்தர்
ஹா ஹா ஹா.. அது சரி
ஏன்... இப்போ எதுக்கு இந்த விஷ பரீட்சை.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@மாணவன்
வாங்க.. கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)

middleclassmadhavi said...

டீச்சருக்கு ஒருத்தரை மட்டும் தெரியும்னா, நீங்க பார்த்தது என் தங்கைன்னு தில்லுமுல்லு பண்ணியிருக்கலாம்..:)))

S Maharajan said...

தலைவர் படத்துக்கு கட் அடிச்சுட்டு போற சுகமே தனிதான்..........

//நீங்களும் சட்டு புட்டுன்னு கிளம்பி சாப்பிட வாங்க..!!//

சாப்பாடு நல்லா இருக்குமா?

sathishsangkavi.blogspot.com said...

மாப்பிள்ளை பெஞ்ச் ஒரு சுகமான அனுபவம்...

'பரிவை' சே.குமார் said...

மாப்பிள்ளைப் பெஞ்சுன்ன உடனே கிளாஸ்ல கடைசிப் பெஞ்சுக்கு மாப்பிள்ளை பெஞ்சின்னு பேரு.... சகோதரி மாப்பிள்ளை பெஞ்ச் கேஸான்னு பாத்தா, கதை ரொம்ப நல்லா இருக்கு.... சிரிக்க முடியலை...

சாருஸ்ரீராஜ் said...

மாப்பிள்ளை பெஞ்ச் செம ரகளை

Anonymous said...

உங்க பின்குறிப்பு தான் என்னோட அட்வைசும்...

இளங்கோ said...

மாப்பிள்ள பெஞ்ச்னா - இதுதானா ? :)
அவ்வ்வ்வ்..

மோகன்ஜி said...

ஆனந்தி! உங்கள் கொட்டத்தை ரசித்தேன்.. கடைசியிலே ஏதோ சமையல்ன்னு....

ஹேமா said...

ஆனந்தி நேற்றே வந்து மாப்பிள்ளை பெஞ்சில் இருந்தேன்.ஏனோ கருத்திட இணையம் மறுத்துவிட்டது.
பாடசாலைக்கால நினைவலைகள் எப்போதுமே குறும்புடன் ரசிக்கக்கூடியவைதான் !

Jaleela Kamal said...

மாப்பிள்ளை பெஞ்ச் அருமை

Jaleela Kamal said...

செம்ம சிரிப்பு போங்க,

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அவ்வ்வ்வவ்வ்வ்வ்... லீவ் போட்டா எதுக்கு போடுறீங்க... எங்க போறீங்கன்னு விவரமா சொல்லப்பிடாதா??? //
அதானே... அவ்வ்வ்வவ் .... (மேடம் லீவ்னு சொன்னப்பவே இந்த ட்விஸ்ட் நான் எதிர்பாத்தேன்... ஹா ஹா ஹா)

//அதுல இருந்து, மாப்பிள்ளை பெஞ்ச் ஆகி போச்சு.... எங்க ஏரியா//
சரித்தர விளக்கம் குடுத்ததுக்கு நன்றிங்கோ... :))

//நீங்களும் சட்டு புட்டுன்னு கிளம்பி சாப்பிட வாங்க..!!//
உங்க மேல கொலை பழி எதுக்கு... நான் தற்கொலைக்கே போறேன்... (ஐ மீன்...என் சமையலே சாப்ட்டுகறேன்...ஹா ஹா...:))

சிவகுமாரன் said...

ஒரே காமெடி போங்க.
பசங்களோட கடைசி பெஞ்சைத் தான் மாப்பிள்ளை பெஞ்சுன்னு சொல்வாங்க.
... அந்தப் பட்டத்தை வாங்குன முதல் பொண்ணுங்க நீங்கதான்ன்னு நெனக்குறேன்
வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

சுகமான நினைவுகள்தான் ஆனந்தி

Anisha Yunus said...

//மேடம் லீவ் போட்டது, அவங்க கல்யாண நாளைக்காம்... அதனால அவங்களும், சார்-ம் மாப்பிள்ளை படம் பார்க்க வந்திருக்காங்க... (அவ்வ்வ்வவ்வ்வ்வ்... லீவ் போட்டா எதுக்கு போடுறீங்க... எங்க போறீங்கன்னு விவரமா சொல்லப்பிடாதா??? )//


ஹ ஹா இதேதான் நான் காலேஜ் படிக்கறப்ப நடந்தது. கட்டடிச்சிட்டு பாதி காலேஜ் தியேடர்லதான் இருந்தது. பின்னாடி பாத்தா எங்க ஃபிஸிக்ஸ் சாரும் அவங்க வுட்பீயும். ஹெ ஹெ...அடுத்த நாள் அவர் எங்களை கலாய்க்க, நாங்க அவரை கலாய்க்க...இன்னமும் மனதை விட்டு விலகாத தருணங்கள்... பதிவுக்கு நன்றிங்.. :))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@middleclassmadhavi
ஹா ஹா ஹா.. ஆமா.. ஆனா.. நம்ம தான் எங்க போனாலும், குரூப்-ஆ போய் மாட்டிப்போமே..
கருத்துக்கு நன்றிங்க :-)


@@S Maharajan
ஆமாங்க.. செம த்ரில்லிங் ஆ இருந்தது.. :-)
வாங்க.. கண்டிப்பா நல்லா இருக்கும் :-)
வருகைக்கு நன்றி


@@சங்கவி
ஆமாங்க.. உண்மை தான்.. நன்றிங்க :-)



@@சே. குமார்
ஆமாங்க. மாப்பிள்ளை படம் பார்த்து பேர் வாங்கின பெருமை.. எங்களுக்கு தான் உண்டு.. :-)
நன்றிங்க..



@@சாருஸ்ரீராஜ்
ஹா ஹா.. ஆமாங்க.. மறக்க முடியாத நினைவலை..
நன்றிங்க சாரு.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@இந்திரா
ஹா ஹா.. ஆமாங்க..
வருகைக்கு நன்றிங்க :-)



@@இளங்கோ
ஹா ஹா ஹா.. இது படம் பார்த்ததால வந்த பேரு... :-))
நன்றிங்க..



@@மோகன்ஜி
ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க..
எஸ்.. சாப்பாடு ரெடி.. நீங்க எப்போ வேணா வரலாம்.. :-)
நன்றிங்க



@@ஹேமா
ஹா ஹா ஹா.. வாங்க வாங்க.. கருத்திட மீண்டும் வந்ததில் ரொம்ப சந்தோசங்க..
தேங்க்ஸ் ஹேமா :-))



@@Jaleela Kamal
வாங்க.. ரொம்ப சந்தோசங்க.. நன்றி :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@அப்பாவி தங்கமணி
ஹா ஹா.. நீங்க ஒரு பெரிய கதாசிரியர் இல்லையா.. அதான்.. ;-))
ஹா ஹா ஹா... முடியல.. :-))
அப்பிடி எல்லாம் சொல்லப் பிடாது, நாம அப்படியா பழகி இருக்கோம்...
கண்டிப்பா நீங்க சாப்பிட வந்தாகணும்.. :-))
தேங்க்ஸ் பா..


@@சிவகுமாரன்
ஹா ஹா ஹா.. எஸ்.. எஸ்...
உங்க வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க (ஹி ஹி.. என்ன ஒரு பெருமை பாருங்க..)



@@r. v. saravanan
ஆமாங்க.. வருகைக்கு நன்றிங்க :-)



@@அன்னு
ஹா ஹா ஹா.. கண்டிப்பா உங்களுக்கும் த்ரில்லர் அனுபவம் தான் போங்க.. ;-)
சரியா சொன்னிங்க.. இந்த மாதிரி நினைவுகள்.. என்றும் மறக்க முடியாதவை தான்..
வருகைக்கு நன்றிங்க :-))

logu.. said...

\\ படிக்கும் போது, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கிளாஸ்-ல எதாச்சும் வம்பு பண்ணி மாட்டுறது உண்டு....! \\

unmaiya sollunga..
nesama padikirathukuthan schooluku poneengala?

logu.. said...

\\(நம்பணும்....போ போ.. உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா-ன்னு திட்ட கூடாது)\\mm.. manasu kekala..
athu nallave therium

கோநா said...

ஹா ஹா...

செந்தில்குமார் said...

நல்லாவே
லூட்டி அடிச்சியிருக்கிங்க ஆனந்தி...
மாப்பிளை பெஞ்சு ம்ம்ம்... நல்லயிருக்கு...பெயர்
சமையலாவது கட்டடிக்காம...அதாங்க ...செய்ரிங்களா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@logu
ஹா ஹா.. இல்ல படம் பாக்க போனோம்.. :-)
தெரியுமே... இப்படி சொல்லுவீங்கன்னு..
நன்றிங்க



@@கோநா
வாங்க.. நன்றிங்க :-))



@@செந்தில்குமார்
வாங்க செந்தில்..
ஹா ஹா ஹா.. எஸ் எஸ்... நல்லாவே லூட்டி..தான்.. :-)
அட.. அதெல்லாம் ஒழுங்கா செய்வேன்.. :-))
ரொம்ப தேங்க்ஸ் செந்தில்.

Prabu M said...

Superb!! :)))

Thanglish Payan said...

etho oru padathoda copy mathiri irukku
unmaiya mappillai bench ah nenga?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@பிரபு எம்.

ரொம்ப நன்றிங்க :-)




@@Thanglish Payan
இல்லங்க.. நெஜமாவே நடந்த விஷயம் தான் இது.. அந்த படம் பார்த்ததால எங்க பெஞ்ச்.. மாப்பிள்ளை பெஞ்ச் ஆச்சு.. :-)

கருத்துக்கு நன்றி

Unknown said...

En kalloori vaazhkkai nyabagam vandhu vittadhu.........miga arumayana post......naanga hostel la irundhapo,yaarukkavadhu udambu sariyillai nu sollitu,2 2 va pair pottu (only girls) kelambittu aprom evening varai.orey cinema,shopping and hotel dhan......jolly ana natkal.thanks for making me to remember

Unknown said...

kaka poo....

:)

Learn said...

அருமை கலக்கீட்டீங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Anonymous said...

(அது இருந்தா... நாங்க ஏன் நீங்க வந்த தியேட்டர்-க்கு வரோம்.. அவ்வ்வ்வ்)..//

ஹா ஹா ஹா ஹா

//போயி சமையல் பண்ற வேலைய பாக்குறேன்..//
இதோப்பாரு. இவங்க‌ சமைக்கறாங்களாம். எங்க அக்காக்களில் பாதிக்கு மேல் ஒழுங்கா சமைக்கறதில்லை. இதப் பாத்தப்புறம் நீங்களும் அவங்க குரூப்போஓஓஓஓஓஓன்னு சந்தேகமாக இருக்கு.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)