தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரத்தில் நான்..
தொடர்ந்தேனே உன்னை..
உன்னில் தொலைத்தாயே என்னை..
சுடும் காதல் என்னுள் தீ மூட்ட
சுக வீணை உன்னிமை தான் மீட்ட..
நான் படுந்துயர் நீ கண்டாய்
உனக்குள் பொய் வேலி கொண்டாய்..
கடுங்கோபம் கொண்டாலும்
கள்வா உன் கண் காதல் பேசும்
விடும் எண்ணம் எனக்கில்லை
விடை சொல்ல உனக்கு மனமில்லை..
சொல்லிசெல்ல அருகே வந்தேன்
சோதிப்பவர் போல் உன் பார்வை..
சொல்ல வந்ததும் மறந்து..
நெஞ்சம் கிள்ளியதை போல்
உணர்ந்து மெல்ல நகர்ந்தேன்..!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
9 comments:
//தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரத்தில் நான்..//
தொலை தூரத்திலும், தொட முடியுமென்றால்......
ஆங்.. அவ்ளோ நீளமான கையா ?
ம்ம்.. சும்மா..
கவிதை நல்லா இருக்கு.
மனதை ஆர்பறிக்கும் மிக அருமையான வரிகள்... சகோ...
ரசித்து படித்தேன்...அழகான வரிகள்...கவிதை நல்லா இருக்கு மேடம்.
ஆண்கள் மட்டுமே காதலில் அதிகமாய் உருகி உருகி தவிப்பதாய் சித்தரிக்கும் சமூகத்தில், பெண்ணிய தவிப்பை அழகாய் சொன்ன தோழி ஆனந்திக்கு நன்றி....... "கடுங்கோபம் கொண்டாலும் கள்வா உன் கண் காதல் பேசும்" வரிகள் அருமை.......
Kavithai super Ananthi !!
@மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்
ஹா ஹா.. வாங்க. அருகிலே இருந்தும்.. ஏதும் முடியா நிலை!
நன்றி.
@ராஜா MVS
வாங்க.. கருத்துக்கு நன்றிகள்!
@நந்தினி
ஹா ஹா... தேங்க்ஸ்டா நந்து..! :)
@சக்தி ரேவதி
வாங்க.. ரசித்து படித்து, கருத்து சொன்னதற்கு நன்றி தோழி. :)
@மீனா
தேங்க்ஸ் மீனா! :)
பெண்ணிய காதல் உணர்வினை
மென்மையாய் வெளிப்படுத்திய விதம் சிறப்பு ..
வாழ்த்துக்கள்
லேசான நெருடல்..மனதில் ஆனந்தி
வரிகள்..அப்படி... ( கொஞ்சம் பொறாமை கூட )
இப்படி ஒரு அழகான கவிதையை வாசிக்கும் போது
@அரசன்
உங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. :)
@செந்தில்குமார்
ஹ்ம்ம்ம்.. ரொம்ப நன்றி.
ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி. :)
Post a Comment