topbella

Thursday, December 8, 2011

தமிழ் இனி மெல்ல வாழும்...!


ஒளிரும் ஜோதியாம்...
ஓயாத தமிழை...
கலை என்ற பெயரில்..
கடித்துக் குதறி...

காது கொடுத்துக்
கேட்க முடியாமல்
கைகட்டி நின்றே
வேடிக்கை பார்க்கிறோம்..

முத்தமிழை வளர்க்க
முத்தாய் பல வார்த்தைகள்
முன்னும் பின்னும் இருக்க
எப்படித் தோன்றியது
எதுவும் புரியாமல் எழுத..

தமிழ் இனி மெல்லச்சாகும்
எனும் கூற்றை உயிர்ப்பித்து
தரணியில் தமிழை
தப்பி ஓடச் செய்து விடாதே
தமிழா.. தவப் புதல்வா...

எம் மக்கள் மறந்த
தமிழை நினைக்கச் செய்ய
எமக்கு யார் துணையும்
தேவை இல்லை..

எழுத்துக்கள் கூட்டி
எரிமலை வெடிக்கச் செய்வோம்
எதுகை மோனையில்
ஏகாந்தம் படைத்திடுவோம்..

~அன்புடன் ஆனந்தி

18 comments:

மகேந்திரன் said...

பேச்சுத்தமிழ் என்கிற பெயரில்
தமிழை தடுமாறச் செய்யும்
தமிழர்களுக்கு நல்ல அறிவுரை..
தமிழை தமிழை பேசவும் எழுதவும்
நாம் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்...
அதிலே தமிழ் இனி மெல்ல வாழும்..

அருமைக் கவி சகோதரி.

Madhavan Srinivasagopalan said...

// கலை என்ற பெயரில்..
கடித்துக் குதறி... //

அதான..
ஏணிந்த கொலைவெறி (அவங்களுக்கு) ?

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

துரைடேனியல் said...

Tamil Seththaal Tamilanum Saavaan. Arumai Sago.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மகேந்திரன்
வாங்க. உண்மை. அன்றாட நிகழ்தலில் பழக்கப் படுத்தினாலே போதுமானது. கருத்துக்கு நன்றி!


@மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன்
வாங்க.. ஹா ஹா.. அதையே தான் நானும் கேட்கிறேன். நன்றி.


@ரத்னவேல்
வாங்க. உங்களின் கருத்துக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.


@துரைடேனியல்
வாங்க.. உண்மை.. நாம் வாழ.. நம் தாய்த்தமிழை வாழவைப்போம். நன்றி!

Vijaya Vellaichamy said...

நல்ல கவிதை! கடைசி வரிகள் மிக மிக அருமை! தமிழ் வாழ்க!

vetha (kovaikkavi) said...

good poem vaalthukal sister...
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

Philosophy Prabhakaran said...

ஒய் திஸ் கொலவெறி பாடல் தான் உங்களை இந்தமாதிரி எல்லாம் எழுத வைக்குது...

புகல் said...

/*"தமிழ் இனி மெல்ல வாழும்...!"*/
வேடிக்கையாக உள்ளது
தமிழ்நாடு இந்தியா என்னும் ஆட்சியில் இருக்கும்வரை தமிழ் உறுதியாக வளர்வது கடினம்,
இந்தியா என்னும் ஆட்சியால் தமிழ் மொழி இருட்டடிப்பு செய்யபடுகிறது.
இதறக்கு எண்ணற்ற எடு சொல்லலாம்
1. இந்தியை தமிழன் மேல் திணித்தது எதிர்த்து போராடிய மக்களை கொன்று குவித்தது இந்திய பாசிச அரசு
2. இந்தியாவின் அனைத்து தேர்வுகளும் இந்தி, ஆங்கிலம்
--அப்ப தமிழன் என்ன இங்கு பிழப்பு தேடி வந்தானா இல்ல அனாதைகளா
--தமிழ் மொழியில் தேர்வு நடத்த போராட்டம் நடத்த வேண்டியது உள்ளது.
**போராடுபவர்களை மிக சாதாரணமாக தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள் என அலட்சியம் செய்ய ஒரு கூட்டம் உண்டு இது எந்த கூட்டம் என்று அனைவருக்கும் தெரிந்ததே**
தமிழ்நாட்டில் இருக்கும் உயர் நீதிமன்றத்தில் என்ன மொழியில் வழக்காட வேண்டும் என்று முடிவு செய்யவது இந்திய அரசு, தமிழகம் எத்தனை தடவை கெஞ்சி கேட்டாலும் தமிழை அனுமதிப்பதில்லை ஆனால் அவர்கள் மாநிலங்களில்
இந்தயில் வழக்காடலாம்
நாடாளுமன்றத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தமிழில் அனுமதில்லை
--சில கூட்டங்கள் அதன்ன டில்லி உறுப்பினருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா ஆமா இந்திகாரனும், வெள்ளைகாரனும்தான் தமிழனை ஒட்டுபோட்டு நாடாளுமான்ற உறுப்பினர்களாக தேர்வு செய்தார்கள்.
தமிழர்களின் மனதில் தமிழ் தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் உதவாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கபடுகிறார்கள், முதலில் 100ல் எத்தன பேர் பிற மாநிலத்திற்கு போகிறார்கள்?
வளர்ந்த நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களுரு, ஐதராபாத் ....
என எங்கும் இந்தி மொழி இல்லாத நகரங்கள்
இங்கு போய் வேலை செய்ய எந்த வடநாட்டுகாரனாவது படிக்கும்போதே பிற மொழியை படிக்கிறானா, இந்தி மொழி எந்த மாநிலத்திலும் கிடையாது அதனால் ஆங்கிலம்,தமிழ் படி என்று யாராவது சொல்கிறார்களா?
இப்படி பிற மாநிலங்களுக்கு இருக்கும் உட்புசலில் இந்தி மொழி வாழ்ந்து கொண்டிருக்ககிறது.

தமிழர்கள் கும்பிடும் கோயில்களில் என்றாவது தமிழில் வழிபாடு நடைபெருகிறதா
அரசாங்கம் ஆணையிட்டும் முடியாது என்று ஒரு கூட்டம் இருமாப்புடன் அலைகிறது.
தமிழன் நிலத்தில் கட்டபட்ட கோயில், தமிழனால் கட்டபட்ட கோயில், தமிழனின்
பணத்தால் வாழும் ஒரு கோயில்களில் தமிழ் அனுமதியில்லை என்றால் சினம் வருமா வராதா?

தமிழ் இனம் இந்தியா என்னும் அடிமை நாட்டில் இருக்கும்வரை இது தொடரும்,
தமிழன் தன்னை இந்தியன் என்ற அடையாளத்தை அன்று தொலைக்கிறானோ அன்றுதான் தமிழ், தமிழினத்தின் உரிமைகள் திரும்ப கிடைக்கும் அல்லது
இப்படி பிதற்றி கொண்டுதான் அலைய வேண்டும்

Nandhini said...

எழுத்துக்களை கூட்டி, எங்கள் தமிழ் ஆர்வத்தை கூட்டும் ஆனந்திக்கு வாழ்த்துக்கள்....அருமையான கவிதை....

Unknown said...

கவிதை அருமை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ் வளர்ச்சி அதிகமாகணும்... கவிதை அருமை....


வாசிக்க:
இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

ராஜா MVS said...

அருமை... சகோ...

Mythili (மைதிலி ) said...

கவிதை அருமை ஆனந்தி.... keep it up.

SURYAJEEVA said...

தமிழன் உள்ள வரை தமிழ் வாழும்... எந்த கவலையும் வேண்டாம்... தமிழை ஒழுங்காக பேசாதவன், பேச முயர்ச்சிக்காதவன் தமிழன் இல்லை.. அவனை பற்றி கவலை வேண்டாம்

Suresh Subramanian said...

நல்ல கவிதை ... தேவையான சமயத்தில் ...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

செந்தில்குமார் said...

வீர வரிகள் ஆனந்தி....

தமிழ் (அமிர்தம்) அருமை...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@விஜி
நன்றிங்க.. விஜி. :)


@கவிதை (கோவைக்கவி)
நன்றிங்க. :)


@Philosophy பிரபாகரன்
ஹா ஹா. :)


@புகல்
வேடிக்கைக்கு என்ன இருக்கிறது.. நட்பே?
ஒவ்வொரு இடங்களிலும் தமிழ் மொழி கை ஆளப்படும் விதம் பார்த்து..
மனது கஷ்டத்தில் வெளியிட்ட பதிவு இது.

உங்கள் ஆதங்கமும் புரிகிறது.
உங்களின் வலுவான கருத்திற்கு நன்றிகள்.

@நந்தினி
நன்றி நந்து.. :)


@விக்கியுலகம்
மிக்க நன்றி. :)


@தமிழ்வாசி பிரகாஷ்
ஆமாங்க உண்மை தான். மிக்க நன்றி. :)


@ராஜா MVS
மிக்க நன்றி.. :)


@மைதிலி கிருஷ்ணன்
தேங்க்ஸ் மைதி... நலமா? :)


@சூர்யாஜீவா
ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றி :)


@Rishvan
மிக்க நன்றி.. வந்து பார்க்கிறேன் :)


@செந்தில்குமார்
ஹ்ம்ம்ம்.. நலமா செந்தில்?
கருத்திற்கு நன்றிகள். :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)