topbella

Friday, August 5, 2011

உற்ற நண்பன் யாரோ...?


எதிர்ப்படும் ஏராளமான மக்களில்
எவர் நம்மின் உற்ற நண்பன்?
அன்றாட வாழ்க்கையில்
அவரவர்க்கு ஆட்டிப்படைக்கும்
ஆயிரமாயிரம் வேலைகள்...!

ஓடியாடி வேலை செய்து
ஓய்ந்து உட்காரும் நேரத்தில்
உள்ளன்போடு செவி சாய்க்க
ஓர் ஜீவன் இருந்தாலும்
அதுவே நம் உற்ற நண்பன்...!

அறியா வயதில் ஆறேழு நண்பர்கள்
அறிந்த வயதில் ஓரிருவர் இருப்பினும்
ஒளிவு மறைவின்றி நடிப்பு நாடகமின்றி
நல்ல துணையாய் நண்பன் அமைய
நாம் செய்திருக்க வேண்டியது தவம்...!

இன்பத்தில் இணைந்து இருந்தும்..
இடர் வரும் வேளையில்
இரு கைநீட்டி அரவணைத்தும்
இதயத்தில் அமர்ந்து இருப்பவனே
உண்மையான உற்ற நண்பன்...!

காசு பணம் எதிர்பார்த்தோ..
காரியம் நடக்க வேண்டும் என்று
கை கோர்த்தோ நட்பு படர்ந்தால்
காலத்துக்கும் உடன் வராது
கரை சேரவும் தோதுபடாது....!

எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!

கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன்.  உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!!



...அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)
August 07: Friendship day

30 comments:

ஜெய்லானி said...

Unknown said...

அருமையான கவிதை!
அதே போன்ற நண்பர்களும் எனக்கு இருப்பதால் மகிழ்ச்சியும் கூடவே! :-)

vetha (kovaikkavi) said...

''...கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன்.''..
This is true.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

சாந்தி மாரியப்பன் said...

//எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!//

அருமையான, நட்பின் பெருமையை உள்ளடக்கிய வரிகள்.. உங்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்..

sathishsangkavi.blogspot.com said...

//எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!//

உண்மைதான்...

தமிழ் உதயம் said...

நண்பர்களிடம் நாம் எதிர்பார்ப்பதையே, நம் நண்பர்களுக்கு தந்தோமேயானால் - சிறந்த நட்பு கிடைக்கக்கூடும்.

நிகழ்வுகள் said...

நடப்பை பற்றி அழகான கவிதை ....

செங்கோவி said...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா உறவும், துன்பத்தில் துணை நிற்கும் உறவும் வரப்பிரசாதம்..

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Priya said...

நட்பை பற்றி மிக அழகான கவிதை... நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் தோழி!

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை!
Happy friendship day.

Vijaya Vellaichamy said...

எனக்கும் அப்படி சில நட்பு பாராட்டும் உள்ளங்கள் உண்டு, உங்களையும் சேர்த்து !

Vijaya Vellaichamy said...

எனக்கும் அப்படி சில நட்பு பாராட்டும் உள்ளங்கள் உண்டு, உங்களையும் சேர்த்து !

ம.தி.சுதா said...

நட்பின் வலிமையை பறைசாற்றும் வரிகள்... அருமை அருமை..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

r.v.saravanan said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் தோழி

Mythili (மைதிலி ) said...

nalla kavithai Ananthi..Happy friendship day!!

செந்தில்குமார் said...

நட்பின் வரிகள் ஆனந்தி...

சித்தாரா மகேஷ். said...

//கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன். உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!!//
அருமை அக்கா.நன்றி.தங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.

ஸ்ரீராம். said...

நட்பின் நினைவுகள் அருமை. நம்மிடமும் நம் நண்பர்கள் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள் இல்லை...?

Anonymous said...

காசு பணம் எதிர்பார்த்தோ..
காரியம் நடக்க வேண்டும் என்று
கை கோர்த்தோ நட்பு படர்ந்தால்// அருமையான வரிகள்

Anonymous said...

//எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!// கண்டிப்பாக உண்மை. அமைந்த நண்பன் கடைசிவரை பல் வேறு காரணங்களால் கை நழுவி போகாமல் இருந்து விட்டால் அதை போல் சொத்து உலகினில் ஒன்றும் கிடையாது..

Anonymous said...

உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!! //

இருப்பவங்களை என்ன செய்ய ..? :-)))// ஆகா ஜெய் அண்ணாவுக்கு மட்டும் எப்புடி இப்புடி எல்லாம் சந்தேகம் கெளம்புது??

'பரிவை' சே.குமார் said...

எதிர்பார்ப்பில்லாத உறவே நட்பு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நல்ல துணையாய் நண்பன் அமைய
நாம் செய்திருக்க வேண்டியது தவம்...!/

தவமாய் தவமிருந்து ...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Paru said...

அருமையான கவிதை
உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

அருமை நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நீ சிரித்தாள்
நட்பும் சிரிக்கும்
நீ அழுதால்
நட்பு துடிக்கும்

இந்திரா said...

உண்மையான நட்புக்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super post Ananthi.. belated wishes from one your friend...:)

R.Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க ஆனந்தி...

தங்களுக்கு என் மனம் கனிந்த இனிய நட்பு தின நல்வாழ்த்துகள்....

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
ஏற்கனவே உங்களுக்கு இருந்தா நல்லது தானேங்க..
வாழ்த்துக்கள்! :)
கருத்துக்கு நன்றி!!


@ஜீ
ஹ்ம்ம்.. ரொம்ப சந்தோசங்க. வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி :)


@கவிதை
வாங்க.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)


@அமைதிச்சாரல்
ரொம்ப நன்றிங்க. உங்கள் நட்பிற்கும் நன்றி :)


@சங்கவி
ஹ்ம்ம்.. நன்றிங்க.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் :)


@தமிழ் உதயம்
உண்மைதாங்க. அன்பைக் கொடுத்தால் அன்பு கிடைக்கும். நட்பும், ஒருவகையில், நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி போலத்தான். நாம் தருவதைத் தான் திரும்ப தரும்.
கருத்துக்கு நன்றிங்க :)


@நிகழ்வுகள்
ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றிங்க :)


@செங்கோவி
உண்மை..உண்மை...! கருத்துக்கு நன்றிங்க :)


@Priya
வாங்க ப்ரியா.. நன்றிங்க.
உங்களுக்கு வாழ்த்துக்கள்! :)


@சே. குமார்
ரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)


@விஜயா வெள்ளைச்சாமி
உங்கள் அன்பிற்கும், நட்பிற்கும் நன்றிங்க, விஜி. :)))


@ம. தி. சுதா
ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கும், கருத்திற்கும் சந்தோசம். :)


@r . v . saravanan
ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)


@மைதிலி கிருஷ்ணன்
ரொம்ப சந்தோசம்பா.. தேங்க்ஸ் மைத்தி.
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! :)


@செந்தில்குமார்
வாங்க.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க. :)


@சித்தாரா மகேஷ்
கருத்துக்கு நன்றிங்க.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)


@ஸ்ரீராம்
ஆமாங்க.. அப்படியே தான். :)
கருத்துக்கு நன்றிங்க!


@En Samaiyal
கருத்துக்கு நன்றிங்க :)
ரொம்ப உண்மை தான். உங்களுக்கும் வாழ்த்துக்கள்!


@பரிவை சே. குமார்
உண்மை தான். உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)


@இராஜராஜேஸ்வரி
ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றிங்க.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)


@Paru
தேங்க்ஸ் பாரு :))



@கவி அழகன்
உண்மைங்க. உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)



@அப்பாவி தங்கமணி
தேங்க்ஸ் பா.. உங்க நட்பிற்கு நன்றி!!!
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@R.Gopi

உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.
உங்களுக்கும் நட்பு தின வாழ்த்துக்கள்! :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)