ஆறு அறைகள் கொண்ட
அம்சமான மாளிகை....
என் அப்பா தன் அன்னையின்
பெயரில் கட்டிய அன்பு ஆலயம்...
குருவிகளாய் நால்வர் நாங்கள்
கும்மாளமிட்டு கூடி வாழ்ந்த இடம்...
இளம் பச்சை நிறத்தில்
வெளி வண்ணப் பூச்சும்
அடர் அரக்கு நிறத்தில் அதன் மேல்
அழகாய் எழுத்துக்களும்...
வெளியில் நின்று பார்த்தாலே
வெகுவாய் கவரும் தென்னை மரங்களும்
உள்ளே நுழைந்ததும்
உபசரிக்கும் அழகு ரோஜாக்களும்
நெஞ்சை அள்ளும் டிசம்பர் பூக்களும்
கூட்டமாய் கூடி நிற்கும்
குரோட்டன்ஸ் செடிகளும்...
அப்படியே உள்ளே வந்தால்
அங்குமிங்கும் கனகாம்பரமும்..
அழகழகாய் பூத்திருக்கும்
அடுக்குச் செம்பருத்திப் பூக்களும்...
பாத்திகளில் பாங்காய் சிரிக்கும்
கீரை வகைகளும்...
பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும்
பப்பாளி மரமும்....
கொத்து கொத்தாய் காய்த்திருக்கும்
கொய்யா மரமும்....
சிரித்தாற்போல் சித்திரமாய்
சீத்தாப்பழ மரமும்...
அணில் வந்து கடிக்காமலிருக்க
அங்கங்கே அப்பா கட்டி வைத்த
ஆவின் பால் பாலிதீன் பைகளும்...
அதை தாண்டி இப்புறம் வந்தால்
அழகான துளசி மாடமும்...
அதற்குள்ளே அம்சமாய் ஒரு
அகல் விளக்கும்...
இத்தனை தவிரவும்
இதர பல செடி, கொடிகளுடன்
இயற்கையுடன் ஒன்றி
இன்பமாய் வாழ்ந்த வீடு
எங்கள் வீடு....!!
இது அத்தனையும் எங்கள் வீட்டில் உண்டு... அதெல்லாம் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன்..... அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வீடும் நமது வாழ்வின் அங்கமாகவே மாறி விடுவது.... உண்மைதானே...!!
பகிர்வைப் படித்ததற்கு நன்றிகள் பல...!!
(பி. கு.: இந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்....!! )
...அன்புடன் ஆனந்தி
87 comments:
அழகான பூவும் கவிதையும்..
அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் என எல்லோரும் இருப்பதே வீட்டில் தானே.
வீட்டு நினைவுகள் வந்து போயின.
பூவும் அந்தப் படமும் மிக அருமை.
:(
உண்மையில் யதார்த்த வாழ்வில் நிறைய உறவுகளை தொலைக்க வேண்டிவருகிறது விரும்பியோ விரும்பாமலோ ....
வரிகள் அனைத்தும் அருமை ... உங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்து சென்றமிக்கு மிக்க நன்றி ....
அந்த மஞ்சள் செம்பருத்தி சூப்பர் .... அழகா இருக்குங்க ...உங்கள் கவிதை போலவே ...
தொடருங்க ... வாழ்த்துக்கள்
எத்த பெத்த பாமிலி...எத்த பெத்த பாமிலி :D :D
நெல்லைலையே உங்க வீடு தான் பெரிய வீடு போல இருக்கே...!!!!!!:P
ர்ஹைமிங்கு, டைமிங்கு, நெளிவு, சுளிவு எல்லாம் சூப்பர்....!!! அருமையா அருமை...!!
:-)
மிக அருமை
அருமையான கவிதை ஆனந்தி! உங்க வீட்டை கண் முன்னே கொண்டுவந்திட்டீங்க!பாராட்டுக்கள்!
அருமையான கவிதைங்க..
//இத்தனை தவிரவும்
இதர பல செடி, கொடிகளுடன்
இயற்கையுடன் ஒன்றி
இன்பமாய் வாழ்ந்த வீடு
எங்கள் வீடு....!!//
niyabagam vantha veeta computerlathan paka vendi irukku. nallaarukku kavithai.
பல நினைவுகளை முன்னே கொண்டு வருகிறது உங்க கவிதை.. நன்றி சகோ..
அருமை சகோதரி.. படிக்கும் பொது எங்களுக்கும் வீட்டு ஞாபகம் தான் வருகிறது..
nice! :-)
அழகான பூவும் கவிதையும்..!
வரிகள் அனைத்தும் அருமை ... உங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்து சென்றமிக்கு மிக்க நன்றி ....
உடனே புறப்பட்டு , உங்கள் வீட்டுக்கு போய் பார்க்கணும் போலிருக்கு
Adaada...
evlo azhagana veedu.
mmm.. ippo innum azga irukumnu nenaikiren..
eanna neenga ange illella..
Padam super....
உங்க வீடுகே வந்து பாத்த மாதிரி இருக்கு
அருமையான அழகு கொஞ்சும் கவிதை
@@அமைதிசாரல்
வாங்க.. உங்க அன்பான கருத்துக்கு நன்றிங்க.. :-)
வீடு கோயிலுக்கு சமன்
அருமையான கவிவரிகள்
விஜய்யின் டொப் டென் பாடல்கள்
@@இளங்கோ
வாங்க.. ஆமாங்க.. நினைவுகளின் வரிகள் தாம் இவை..
நன்றிங்க.. :-)
@@வார்த்தை
வாங்க.. அச்சோ.. என்ன ஆச்சு? ஏன் இந்த சோகம்..!
வருகைக்கு நன்றி.. :-)
@@அரசன்
வாங்க... ஆமாங்க.. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு உறவை தொலைக்கிறோம்..
வருகைக்கு நன்றிங்க.. உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி :-)
@@சஞ்சய்
வாங்க சார்.... ஹா ஹா ஹா :D
என்ன என்ன திட்டுறீங்க....??? :-))
ஆமா... நாங்க தான் பாதி ஊரை வளச்சு போட்டு வீடு கட்டி இருக்கோம்....
ஒரு பேச்சுக்கு அரண்மனைன்னு சொன்னா....அவ்வ்வ்வவ்...
ஹா ஹா ஹா... ரெம்ப தேங்க்ஸ்.. :-))
@@Madhavan Srinivasagopalan
வாங்க.. உங்க வருகைக்கு நன்றிங்க :-)
@@T. V. ராதாகிருஷ்ணன்
வாங்க. கருத்துக்கு நன்றிங்க :-)
@@Mahi
வாங்க... ரொம்ப சந்தோசம் பா...நன்றி..:-))
@@பதிவுலகில் பாபு
வாங்க.. ரொம்ப நன்றிங்க உங்க கருத்துக்கு :-)
@@ஜீவன்பென்னி
வாங்க.. ஆமா.. இப்போ நிலைமை அப்படிதான்...
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)
@@வினோ
வாங்க.. உங்க கருத்திற்கு நன்றிங்க... :-)
@@வெறும்பய
வாங்க.. ரொம்ப நன்றிங்க உங்க கருத்துக்கு :-)
@@ஜீ
வாங்க.. தேங்க்ஸ் :-)
@@சே. குமார்
வாங்க.. ரொம்ப சந்தோசம்.. உங்க வருகைக்கு நன்றி :-)
@@பார்வையாளன்
வாங்க.. வாங்களேன்... ரொம்ப நன்றிங்க :-)
@@logu
வாங்க.. ஹா ஹா ஹா..
என்ன ஒரு கண்டுபிடிப்பு.. :-)
ரொம்ப நன்றிங்க..
@@ கல்பனா
வாங்க.. ரொம்ப சந்தோசங்க.. :-)
நன்றி..
@@சாருஸ்ரீராஜ்
வாங்க.. ரொம்ப சந்தோசங்க.. நன்றி :-))
@@டிலீப்
வாங்க.. ஆமாங்க.. ரொம்ப சரியாய் சொன்னிங்க..
உங்க வருகைக்கு நன்றி :)
ஆமாம் தோழி இப்படி எல்லோரையும் வாங்க வாங்கனு சொல்றீங்க...எல்லோரையும் உங்க வீட்ட பார்க்க கூட்டிட்டு போக போறீங்களா...? :))
கவிதையில் உணர்வை விட ஏக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்குபா !!
வீட்டை ரொம்ப தேடினா கொஞ்சம் இங்கே வந்திட்டு போகலாமே...
வீடு என்றாலே கவிதைதான்.
கவிதையைப் பற்றிய கவிதை நன்று!
அருமை பாராட்டுக்கள்
கொஞ்சம் லேட்....
படிச்சேன் நல்லா இருக்கு..கலக்குங்க
அழகான ரசனையுடன் அருமை....
பகிர்வுக்கு நன்றிங்க........
நீங்க உங்க வீட்டை மிஸ் பண்ணும் ஃபீல் என்னையும் பத்திக்கிச்சு ஆனந்தி :(
உங்கள் வீட்டை பார்ப்பது போல இருக்கிறது....உங்கள் வீடு முழுவதும் பூ தான் இருக்கிறது....நன்றாக இருக்கிறது
அட ....சூப்பருங்கோ .......
"கும்மாளமிட்டு கூடி வாழ்ந்த"
அழகிய வீடு.
உங்க வீட்ட சுத்திக் காட்டினதுக்கு நன்றி ஆனந்தி ;)
உலகத்தின் எந்த மூலைக்குச் சென்று எத்தனை வசதிகள் பெற்றுக்கொண்டாலும் பிறந்து வளர்ந்த வீட்டுடன் ஒப்பீடு செய்ய முடியாது.
உணர்வுகள் நிறைந்த நல்ல கவிதை.
கவிதைனாலே கொஞ்சம் அலெர்ஜி.....ஆனால் இதை படிக்கும் பொழுது அந்த எண்ணம் வரவில்லை அனைத்தும் சிம்பிள் வார்த்தைகள் ......பொதுவாக உங்கள் வலை தளத்தை என் மனைவி தான் அதிகம் படிப்பாள் for சமையல் குறிப்பு edukka
கவிதையும், பூவும் டச்சிங் டச்சிங். இந்தப் பூவை கிள்ளி எடுத்து எங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துக் கொள்ளாலாம் போல இருக்கு!!
கவிதையும், பூவும் அருமை
அழகு கவிதை
ஃஃஃஃஃஇந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்....!!ஃஃஃஃ
அது தான்..
செம்பருத்திப் பூ செலையைக்காட்டி ஒரு பாட்ட படிக்குதோ...
எங்கள் வீடு....ம்ம்ம்ம்...
இந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்
இப்படியும் அலங்கரிக்கமுடியிமா எழுத்துக்களால் ஆனந்தி
உங்களுக்கு ஒரு சலிவுட்
முதுமை வரும்போது இளமை இழப்பது போலத்தான் ....
உங்கள் தவிப்பும்...இவையேல்லாம் தவிர்க்கமுடியாதது
இயற்கையான சூழ்நிலைகள் உள்ள வீடு எல்லோருக்கும் அமைவதில்லை..நீங்கள் சொன்னதுபோல் நம் வீடுகளும் ஒரு ஜீவனாகதான் நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கின்றன...
கவிதையும் மலரும் சேர்ந்து இந்த கவிதைமலர் அழகோ அழகு ஆனந்தி..
மிகவும் அருமை
alagana vidittai kavithai kondu nirappi vittirkal.. arumai
அழகுக் கவிதையாய் ஆனந்தி வீடு...அருமை அந்த தோட்டம் அப்படியே விழிகளுக்குள் வலம் வருது....வாழ்த்துகள்....
romba alagu unga kavithaium veedum..
Kurinji
எங்கள் வீட்டையும் என் அப்பாவையும் நினைவுப் படுத்திவிட்டீர்கள்ஆனந்தி.
வீட்டையாவது அவ்வப்போது போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.
அப்பாவை ??
உங்க வீடு அழகா இருக்கு....அருமையான கவிதை ஆனந்தி!
வீடும், வீட்டை சுற்றிய இயற்கை அற்புதங்களும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
:)
அழகான வீடு அருமையான கவிதை.
உங்க கவிதை உங்க வீட்ட என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுச்சு அக்கா ..!!
இந்த கவிதை எனக்கு பிடித்து இருக்கு.
அருமையான பதிவு ...
பூவும் கவிதையும் நினைவுகளை உறவுகளின் பக்கத்தில் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது ஆனந்தி !
அருமையான பதிவு
நன்றி
இவன்
http://tamilcinemablog.com/
பூ ரொம்ப அழகா இருக்கு. மஞ்சள் செம்பருத்தி நான் பார்த்ததே இல்லை.
@@கௌசல்யா
ஆமாங்க.. வீட்டுக்கு வரவங்கள.. வாங்கன்னு சொல்றது தானே முறை.. :-)
வீட்டு ஞாபகம் வந்ததுங்க.. கண்டிப்பா வரேன்... அழைப்பிற்கும், அன்பிற்கும் நன்றி :)
@@r. selvakkumar
வாங்க அண்ணா.. சரியா சொன்னிங்க.. கவிதையாய் எங்கள் வீடு...! :-))
@@தமிழ்தோட்டம்
வாங்க. உங்க கருத்திற்கு நன்றிங்க.. :-)
@@Arun Prasath
வாங்க.. அதெல்லாம் ஒன்னும் லேட் இல்லை.. கருத்திற்கு நன்றிங்க :-)
@@மாணவன்
வாங்க.. உங்க கருத்திற்கு நன்றி :-)
@@ராதை/ Radhai
வாங்கப்பா.... ஹ்ம்ம்ம்.. உண்மைதாங்க.. பெண்கள் நாம அடிக்கடி இப்படி ஏங்குவது சகஜம் ஆயிருச்சு.. சியர் அப்.. தோஸ்த்.. :-) ரொம்ப தேங்க்ஸ்.
@@சௌந்தர்
வாங்க. ஆமா சௌந்தர்.. எனக்கு பூவென்றால் ரொம்ப இஷ்டம்.. அதான் எங்கள் வீட்டிலும் பூக்கள் நிறைய உண்டு.. நன்றி :-))
@@மங்குனி அமைச்சர்
வாங்க.. யாரங்கே... அமைச்சருக்கு ஒரு காபி...ப்ளீஸ்.. உங்க கருத்துக்கு நன்றிங்க. :-)
@@மாதேவி
வாங்க.. ஆமாங்க.. கருத்துக்கு நன்றி :-)
@@Balaji saravana
வாங்க.. சுத்தி பாத்ததுக்கு நன்றிங்க :-))
@@sinthanai
வாங்க.. சரியாச் சொன்னிங்க.. உங்கள் புரிதலுக்கு நன்றிங்க :-)
@@இம்சை அரசன் பாபு
வாங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க.. நீங்க ரசித்து கருத்து சொன்னதுக்கு தேங்க்ஸ்..
அடிக்கடி சமையல் குறிப்பும் எழுத முயற்சி பண்றேன்.. நன்றிங்க :-))
@@எம். அப்துல் காதர்
வாங்க. ஹா ஹா.. தாராளமா வச்சுக்கோங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@@r.v.saravanan
வாங்க. கருத்திற்கு நன்றி :-)
@@அன்பரசன்
வாங்க.. கருத்திற்கு நன்றி :-)
@@ம. தி. சுதா
வாங்க.. ஹா ஹா.. அதை நா பாக்கலியே.. உங்க கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சது போல இருக்கு.. :-)
கருத்துக்கு நன்றிங்க.
@@செந்தில்குமார்
வாங்க செந்தில்.. ரொம்ப நன்றிங்க..
சரியா சொன்னிங்க.. அறிவுக்கு எட்டியது.. இதயத்திற்கு சில நேரம் எட்டுவதில்லை.. :-)
கருத்திற்கு நன்றிங்க..
@@கண்ணகி
வாங்க.. சரி தான் நீங்க சொல்றது.. எங்களுக்கு அமைந்தது.. அதனால் தான்..பசு மரத்தாணி போல் மனதில் பதித்து விட்டேன்.. கருத்துக்கு நன்றிங்க. :-)
@@தமிழரசி
வாங்க.. நீங்க ரசித்து சொன்ன கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.. :-)
@@Several tips
வாங்க.. கருத்துக்கு ரொம்ப நன்றி :-)
@@Thanglish Payan
வாங்க.. ஆமாங்க.. நிரப்ப முயற்சி செய்தேன்.. ரொம்ப நன்றிங்க.. :-)
@@சீமான்கனி
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. நீங்க ரசித்து எழுதிய கருத்திற்கு நன்றிகள் :-)
@@Kurinji
வாங்க.. ரொம்ப நன்றிங்க உங்க கருத்துக்கு :-))
@@சிவகுமாரன்
வாங்க... உங்கள் வீட்டை நினைவு கூறச் செய்தததில் சந்தோசம்..
உங்க அப்பாவை...என்று நீங்க சொன்னதில்.. எனக்கும் உங்க மெல்லிய சோகம் தொற்றிகொண்டது.. :(
நானும் நினைத்தால் என் பெற்றோரை பார்க்க முடியாத தூரத்தில் தான் இருக்கிறேன்..
வாழ்க்கைச் சூழல்... உங்க வருகைக்கு நன்றிங்க..
@@விஜய்
வாங்க... ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கும், கருத்துக்கும்.. :-)
@@ஜெய்லானி
வாங்க சார்.. என்ன ரொம்ப பிஸியா.....?? தேங்க்ஸ் உங்க ஸ்மைலிக்கு :-)
@@asiya omar
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. உங்க கருத்திற்கு..! :-)
@@கோமாளி செல்வா
வாங்க செல்வா.. ரொம்ப சந்தோசம்.. நீங்க ரசிச்சு சொன்ன விதம்.. நல்லா இருக்கு.. நன்றி :-))
@@muruchandru
வாங்க.. ரொம்ப நன்றி உங்க கருத்திற்கு :-)
@@Gnana Prakash
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@@ஹேமா
வாங்க.. ஆமாங்க.. அட்லீஸ்ட் நம் நினைவுகளாவது பயணிக்க முடிகிறதே..
அதுவரை சந்தோசம். ரொம்ப நன்றிங்க.. :-)
@@tamilcinemablog
வாங்க.. ரொம்ப நன்றி :-)
@@ரிஷபன்Meena
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. அப்போ, உங்களுக்கு மஞ்சள் செம்பருத்திப் பூவை அறிமுகப் படுத்தியது.. நான் தான்.. :-)
@@வைகறை
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :-)
@@Nandhini
வாங்க நந்து.. தேங்க்ஸ் டா :-))
//பந்தம் மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வீடும் நமது வாழ்வின் அகமாகவே மாறி விடுவது//
200% correct...can't agree more...home sweet homenu summavaa solraanga? hmmm... miss my home too
ரொம்ப சூப்பர் ஆனந்தி, படிக்க படிக்க
சின்னவயதில் வீட்டில் கினத்தடிக்கு பின்புறம் இருந்த
கனகாம்பர பூ,ம் டிசம்பர் பூ , செம்பருத்தி , பட்ரோஜா எல்லாம் ஞாபகம் வருது
நேரம் கிடைக்கும் போது என் பக்கமும் வாஙக்
இது 50 வது பதிவா வாழ்த்துகள்
Post a Comment