topbella

Tuesday, November 14, 2017

ராசலீலை..!


அவன் குழல் இசைக்க
மான்கள் துள்ளி ஓடிவர
மயில்கள் ஆடி வர
இடியோசை அங்கே
இனிமையாய் கேட்க
மின்னல் மனம் நெருட
சலசலவென அருவி
அங்கே ஆர்ப்பரிக்க
ராதை வரவை நோக்கி
கண்ணன் அங்கு காத்திருக்க
மாலை நேரமும் நெருங்க
மங்கை மெல்ல நடந்து
பக்கம் வந்து சேர
கண்களில் காதல் மிளிர
மாலை நேர மலர்கள்
மணமாய் விரிந்து மலர
குழல் ஓசை தொடர
கூக்குயில் உடன் பாட
ராதை அதற்கு இசைந்து ஆட
அங்கே ராசலீலை படர்ந்தது..!!!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Tuesday, November 7, 2017

நெடும் கனவே..!!!



விதைத்த அன்பில்
விளைந்த உறவே
விழியின் மொழி அறிந்த
விந்தை மனமே..

விமரிசையாய் விளங்க வைத்தும்
வில்லங்கம் செய்யும் அழகே
விசித்திர விதமாய் நேசிக்கும்
விண் முட்டும் காதலே..

கனவில் கதை பேசி
கருவில் காத்து வந்த
கலையே காவியமே
கண் வரைந்த ஓவியமே..

ஒரு வரிக் கவிதையே
ஓயாது ஒலிக்கும் ரீங்காரமே
ஒப்புமை செய்ய இயலா
ஓருயிரே ஓங்காரமே..

ஊஞ்சலாய் ஆடும் நெஞ்சில்
உல்லாசமாய் நின்று கொண்டு
உள்ளுணர்வில் மெல்லிசையாய்
உள்ளமை உணரச் செய்த உயிரே..

நிலைத்து நிற்கும்
நிதர்சனமே நிஜமே
நீங்காத வரமே
நீண்ட நெடும் கனவே..!!!

~அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகுள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)