topbella

Friday, September 9, 2011

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...!


தேவையான பொருட்கள்:

சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காய் கீறி வைக்கவும்)
வெங்காயம் - பெரிது 1
தக்காளி - பெரிது 1
தேங்காய் துருவல் - 3 மே.கரண்டி
புளி சாறு - சிறிது
குழம்பு மசாலா பொடி - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. முதலில், வெங்காயத்தை பெரிய துண்டுகளாய் நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் காய வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வதக்கிய வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில், புளி சாறு + அரைத்த விழுது + குழம்பு பொடி + உப்பு  சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.

3. வாணலியில்.. இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, அதில்.. நான்காய் கீறிய கத்தரிக்காய்களை சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து வேக வைக்கவும்.

4. காய், ஓரளவு வெந்ததும்.. கரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி, மிதமான தீயில், 5 -10 நிமிடங்கள்.. கொதிக்க விட்டு, எண்ணெய் தெளிய இறக்கவும்.

சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. செம டேஸ்டா இருக்கும்! வந்ததே வந்தீங்க...  சாப்பிட்டு போங்க! :)


19 comments:

மகேந்திரன் said...

அடடா...
தலைப்பை பார்த்ததும்
இப்பவே சாப்டனும் போல இருக்கு...

Priya ram said...

கொழம்பு சூப்பர்.அரச்சு விட்டு செய்து பார்க்கனும்.

Priya ram said...

கொழம்பு சூப்பர்.அரச்சு விட்டு செய்து பார்க்கனும்.

dheva said...

//சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. //

அடா...அடா..அடா.....இந்த ஒத்த வரியிலதான் எம்புட்டு அர்த்தம்.

ஏங்க போட்டது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...அதுக்கு மேல சாதத்தில்போட்டு சாப்பிடுங்கன்னு ஒரு டிப்ஸ் வேற...!!! அவார்டே கொடுக்கலாம்...

ஆமா ஒரே ஒரு டவுட்டு..........இந்த கத்திரிக்காயே போடணுமா? இல்லை....சிக்கன் மட்டன் ஏதாச்சும் போட்டுக்கலாமா?


அப்போ வர்ர்ர்ட்ட்டா!!!

'பரிவை' சே.குமார் said...

எனக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்திரிக்காய். வெங்காயம் அரைத்துப் போடுவது புதிது. செய்து பார்க்க வேண்டும்.

ஜெய்லானி said...

ஒரு சின்ன டவுட்டு # இது குழம்பா இல்ல சட்னியா..? :-)))

ஜெய்லானி said...

ஐயோ கேட்க மறந்திட்டேனே ..!!

எண்ணெய் கத்திரிக்கா குழம்புன்னு சொல்லிட்டு மத்த ஐட்டங்களை உள்ளே போட்டால் அதுகள் கோவிச்சுக்காதா ..?அவ்வ்வ் :-))

ஜெய்லானி said...

//உங்கள் வருகைக்கு நன்றி..!
மீண்டும் வருக..!!
நினைத்ததை சொல்லிவிட்டு செல்லலாமே.. :)//

தம்பி இன்னும் டீ வரல :-)

கவி அழகன் said...

வாய் ஊருது

மாலதி said...

இப்பவே சாப்டனும் போல ....

Paru said...

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு படமும் விளக்கமும் நல்லா இருக்கு உடனே இது செய்து பார்த்து சொல்கிறேன்

Nandhini said...

அட..அட..அட..வாய் ஊருது...சூப்பர் கொழம்பு....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மகேந்திரன்
வாங்க.. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :)


@Priyaram
வாங்க.. ஹ்ம்ம்.. கண்டிப்பா செஞ்சு பாருங்க. :)
நன்றிங்க!


@தேவா
ஹா ஹா ஹா... உங்களுக்கு மட்டும் தாங்க புரிஞ்சிருக்கு.
தேன்க் யூ.. தேன்க் யூ...! ரெம்ப நன்றி...!
கிரர்ர்ர்ரர்ர்ர்ர்... அது உங்க சௌகரியம்..!
ஹ்ம்ம் கும்ம்.. சொல்றதெல்லாம்.. சொல்லிட்டு இதுல ஒன்னும்.. குறைச்சல் இல்ல.. :))

தேங்க்ஸ்!


@சே. குமார்
ஹ்ம்ம்.. வாங்க.. செஞ்சு பாருங்க.. கண்டிப்பா. :)
கருத்துக்கு நன்றிங்க!


@ஜெய்லானி
ஹா ஹா... இல்லங்க.. அதுக கிட்ட.. அனுமதி கேட்டுட்டு தான் போட்டேன்.
டீ.. தானே.. சீக்கிரம் வரும்.
உங்க கருத்துக்கு நன்றிங்க! :)


@கவி அழகன்
ஹா ஹா... ரொம்ப நன்றிங்க :)


@மாலதி
கண்டிப்பா.. சாப்பிட வாங்க. கருத்துக்கு நன்றி! :)


@பாரு
ஹ்ம்ம்ம்.. கண்டிப்பா. செஞ்சு பார்த்து சொல்லு டா.. :)


@நந்தினி
ஹா ஹா ஹா... தேங்க்ஸ் டா :)

சாந்தி மாரியப்பன் said...

பார்க்கவே ரொம்ப அழகாருக்கு..

KParthasarathi said...

சுவை பட எழுதி இருக்கிறீர்கள்.
நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
ஹா ஹா.. ஏங்க சாப்பிடவும் நல்லா இருக்குங்க.. :)
நன்றிங்க.


@KParthasarathi
ரொம்ப நன்றிங்க :)

சௌந்தர் said...

சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காய் கீறி வைக்கவும்)//

இல்லனா எல்லாம் காம்போ ட போடுவாங்களா...???

சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. செம டேஸ்டா இருக்கும்! //

அப்போ இட்லி தோசைக்கு எல்லாம் தொட்டுக்க கூடாதா..???



வந்ததே வந்தீங்க... சாப்பிட்டு போங்க! :)//

வெறும் கொழம்பு மட்டும் வைச்சா இதையா சாப்பிடுவாங்க...??

சமையல் பண்ணா ஒரு வார்த்தை சொல்றது இல்லை... என்ன உலகம் டா....!!

சக்தி ரேவதி said...

இந்த கொழம்புக்காக எத்தனை சமையல் நிகழ்ச்சியில் காத்து கிடந்திருக்கிறேன்....
நன்றி தோழி... நாளைக்கு காலை ல எங்க வீட்ல என்னை கத்தரிக்காய் கொழம்பு தான்...
சாப்பிட வரீங்களா??????

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
கர்ர்ர்ர்.. இப்படி எல்லாம் சந்தேகம் கேக்கச்சொல்லி உங்கள யாரு சொல்றாங்க?
அடடா.... நீங்க எதுக்கு வேணும்னாலும் தொட்டுக்கலாம்.
ஹலோ... சாதம் மேல குழம்பு ஊத்தி தான் தட்டில் இருக்கு.. நல்லா பாருங்க.

வந்து, கருத்து சொன்னதற்கு ரெம்ப நன்றிங்க. :))

@சக்தி ரேவதி
வாங்க வாங்க.. கண்டிப்பா வரேன்..!
செஞ்சு சாப்டீங்களா? நல்லா இருந்ததா...?
சொல்லுங்க..! :))

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)